motivation article Image credit - pixabay
Motivation

இந்த 5 செயல்களால் நெகட்டிவ் எனர்ஜியை விரட்ட முடியும்!

பொ.பாலாஜிகணேஷ்

1-இயற்கையுடன் இணைந்திருங்கள்.

மலைகள், மரங்கள், ஆறு, அருவி, கடல் இப்படி நம்மைச் சுற்றிலும் பரந்து விரிந்திருக்கும் இயற்கை உடலுக்கும் உள்ளத்துக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். இதற்கான நேரம் ஒதுக்கி மாதம் ஒருமுறையாவது இயற்கையான சூழலில் மினி சுற்றுலாக்கள் செல்லுங்கள். 

2-உங்களுக்காக யோசியுங்கள்:

பெண்கள் பழைய பிரச்னைகளுக்குள் அலைந்து கொண்டிருக்காமல் அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான இலக்குகளைத் திட்டமிடுங்கள், உங்களுக்குப் பிடித்தமான வாழ்க்கையைக் கனவு காணுங்கள். அதை அடைவதற்காக உங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

3-நல்ல தூக்கம் 

நீங்கள் எவ்வளவு அதிகமாக உழைக்கிறீர்களோ அந்தளவுக்கு உங்களுக்கு ஓய்வும் தேவை. தினமும் 6 மணி நேரமாவது ஆழமான தூக்கம் அவசியம். இதுவும் தியானம் போன்றதே. தூங்கும்போது உங்களது உடல். எனர்ஜியைச் சேமித்துக்கொள்கிறது.

4-உங்களது நேரத்தைக் கவனிக்கலாம்:

நம்மிடம்எவ்வளவு பணம் உள்ளது என்பதைக்கணக்கில் வைத்துக் கொள்கிறோம். உங்களிடம் எவ்வளவு நேரம் உள்ளது என்பதை யோசித்திருக்கிறீர்களா? எப்போதும் பிஸியாகவே இருக்கும் பலர் தங்களது வாழ்க்கையில் பலவிதமான நெருக்கடிகளைச் சந்திக்கின்றனர். இவ்வளவு நேரம் உழைத்தும் போதுமான பொருளாதார வளர்ச்சியடைய முடியவில்லை என்றால் தப்பு. உங்களது உழைப்பின் மதிப்பை அதிகரிப்பதற்கான மாற்றங்களைச் செய்யுங்கள். மகிழ்ச்சி உங்களைச் சூழ்ந்துகொள்ளும்.

5-விடுமுறை நாட்கள் வேலைக்கானதல்ல:

இன்றைய பெண்கள் வீட்டு நிர்வாகம், அலுவலக வேலை என்று இரண்டு இடங்களிலும் பிசியாக இயங்குகின்றனர். இவர்கள் ஒரு சில வேலைகளை விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைக்குத் தள்ளிவிடுகின்றனர். இதனால் விடுமுறை நாளிலும் பிஸியாகவே இயங்குகின்றனர். இது அயர்ச்சியை ஏற்படுத்தும். வாரம் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்க விடுமுறை நாளில் உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT