Before Bed Times. 
Motivation

தூங்குவதற்கு முன் கட்டாயம் செய்ய வேண்டிய 5 விஷயங்கள்!

பாரதி

ஒவ்வொருவரும் இரவு தூங்குவதற்கு முன் அந்த நாளுக்கான சில விஷயங்களைப் பற்றியும் அடுத்த நாளுக்கான சில விஷயங்களைப் பற்றியும் நினைத்துப் பார்க்க வேண்டும். அதேபோல் சில விஷயங்களை செய்ய வேண்டும். அப்படி செய்தால் கட்டாயம் உங்கள் வாழ்வில் சில மாற்றங்களை நீங்கள் காணலாம். அந்தவகையில் நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து விஷயங்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.

1. பிரதிபலியுங்கள்:

பிரபதிபலிப்பதா? அப்படி என்றால் என்ன? என்ற கேள்வி உங்களுக்கு கட்டாயம் எழும். அதாவது அந்த நாளில் நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை மனதில் பிம்பமாக ஓட்டி பார்ப்பதுதான் பிரதிபலிப்பு. அதுவும் முக்கியமான ஒரு மூன்று கேள்விகளை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.

  1. அன்று எந்த விஷயத்திற்காக நீங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளீர்கள்? யாருக்காக நன்றிக்கடன் பட்டுள்ளீர்கள்?

  2. அந்த நாளில் உங்கள் இலக்கிற்கான முன்னேற்ற பாதையில் செல்ல எந்த செயலை செய்தீர்கள்?

  3. எதாவது ஒரு மாற்றத்தை அன்று பார்த்தீர்களா?

இந்த மூன்று கேள்விகளைத் தினமும் இரவு கேட்டுக்கொண்டால் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்.

2. தொடர்பு எல்லைக்கு அப்பால் செல்லுங்கள்:

அதாவது நீங்கள் படுக்கையை தயார் செய்த உடனே மொபைலை சைலன்ஸில் போட்டு தூரமாக வைத்துவிடுங்கள். அதேபோல் கணினி மடிக்கணினி என எதையுமே பயன்படுத்தாதீர்கள். கனவு உலகத்திற்கு செல்வதற்கு முன் கண்களையும் மனதையும் பாதிக்கும் டிஜிட்டல் உலகம் எதற்கு?

3. அடுத்த நாளிற்கான திட்டம்:

அடுத்த நாளிற்கான திட்டத்தை அந்த நாள் காலையில் வேக வேகமாக கிளம்பும்போது போட்டால் என்னாகும்? சாப்பாட்டில் கவனம் செலுத்தாமல், கிளம்புவதில் கவனம் செலுத்தாமல் வேறு எங்கேனும் செல்ல வேண்டுமா என்று அதைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்போம். ஆகையால் அடுத்த நாளுக்கான திட்டத்தை முதல் நாள் இரவே தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

4. மூச்சுப் பயிற்சி:

ஓரு சாதாரண மனிதன் ஒருநாளைக்கு சராசரியாக 20 ஆயிரம் முறை மூச்சை இழுத்து விடுகிறான். சில சமயம் சில மூச்சுகளை எண்ணுவதிலும் தவறில்லை. ஏனெனில் மூச்சுகளை அவ்வப்போது கவனிப்பதும் அவசியம். அதேபோல் தினமும் தூங்குவதற்கு முன் 8 வினாடிகள் மூச்சை இழுங்கள், 7 வினாடிகள் அப்படியே இழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள், அதன்பின் 8 வினாடிகளில் மூச்சை விட்டு விடுங்கள். இப்படி செய்வதனால் எந்த அழுத்தமும் இல்லாமல் நிம்மதியாக தூங்க முடியும்.

5. புத்தகம் படியுங்கள்:

தூக்கம் வரும்வரை ஏதோ ஒரு புத்தகம் படியுங்கள். குறிப்பாக கதைப் புத்தகங்கள் படிப்பது நல்லது. அதேபோல் உங்கள் மனதை கலங்க வைக்கும் புத்தகங்களைத் தவிர்ப்பதும் நல்லது.

இந்த ஐந்து பழக்கங்களைத் தினமும் செய்து வந்தீர்கள் என்றால் நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் உங்களிடத்தில் நிகழும்.

குளிர்கால சரும பராமரிப்பு - 5 பொருட்கள் போதுமே!

டென்னிஸ் உலகை ஆண்ட ரபேல் நடாலின் வெற்றிக் கதை!

செல்லப்பிராணி வளர்ப்பு முறையும் மழைக்கால பராமரிப்பு மற்றும் நன்மைகள்!

Book Review - The Thirteenth Child - by Erin A. Craig (2024)

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

SCROLL FOR NEXT