motivational articles Image credit - pixabay
Motivation

இந்த நாள் உங்களுக்கானது!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ந்த நாள் உங்களுக்கானது என எண்ணித் தொடங்குங்கள் உற்சாகமாக உணர்வீர்கள். சின்னச் சின்ன வெற்றிகளையும் கொண்டாடப் பழகினால் உத்வேகத்துடன் பெரிய இலக்கை நோக்கி நகர முடியும்.

பெரிய கனவுகள்,  லட்சியங்கள் ஒரே நாளில் நிறைவேறாது. எனவே நம்மை உந்துதலாக வைத்திருக்க சிறுசிறு இலக்குகளை ஆரம்பத்தில் அமைத்துக் கொண்டு அந்த வழியில் செல்லும்பொழுது விரைவில் வெற்றி கிடைக்கும். அந்த சின்னச் சின்ன வெற்றிகளைக் கொண்டாடப் பழகினால் உத்வேகத்துடன் நம்மால் பெரிய இலக்கை நோக்கி நகர முடியும்.

நம்மைச் சுற்றி ஒரு உந்துதல் வட்டத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதாவது நம்மை ஒரு நேர்மறையான சூழலில் வைத்துக் கொள்ள வேண்டும். நம்மைப் போலவே லட்சியம் கொண்டவர் களுடன் தொடர்பில் இருப்பது நம்மை ஆக்கப்பூர்வமாக செயல்படத் தூண்டும். நம்மைச் சுற்றி இது சரிவராது, நம்மால் முடியாது, வேண்டாம் என எதிர்மறையான எண்ணங்கள் கொண்டவர்கள் இருந்தால் நம் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படும்.

தங்களுடைய இலக்குகளை பகிர்ந்து கொள்ளும் நபர்களால் நாம் சூழப்பட்டிருந்தால் நம்மால் அதிக லட்சியங்களைக் கொண்டு உத்வேகமாக முன்னேறிச் செல்ல முடியும். நினைத்ததை சாதிக்கவும் முடியும். இந்த நாள் நமக்கானது என்பதை மறக்க வேண்டாம்.

முக்கியமாக உந்துதல் என்பது நமக்குள் இருக்க வேண்டிய அவசியமான ஒன்று. சுய உந்துதல் இல்லாதவரை யாராலும் நம்மை ஊக்குவிக்க முடியாது. வெளிப்புற உந்துதல்கள் ஊக்கத்தை அளிக்கும். ஆனால் அதன் விளைவுகள் இரண்டு மூன்று நாட்களுக்கு மட்டுமே இருக்கும். எனவே உண்மையிலேயே நாள் முழுவதும் உத்வேகத்துடன் இருக்க விரும்பினால் நாம் என்ன செய்ய விரும்புகிறோமோ அதை நம் வாழ்க்கையின் சில நோக்கங்களாக வைத்துக்கொண்டு அந்த நோக்கத்தை நோக்கி பயணிக்க வேண்டும். அப்போதுதான் நம் லட்சியங்களை நம்மால் எளிதில் அடையமுடியும்.

இந்த நாள் நமக்கானது. நம்மை உற்சாகப்படுத்த சில முக்கிய அம்சங்களை நாம் பின்பற்ற வேண்டும். முதலில் நாம் நம்மை முழுவதுமாக நம்ப வேண்டும். அடுத்ததாக நம்மை யாருடனும் ஒப்பிட்டு பார்க்காமல் இருப்பதே நல்லது. நம் லட்சியங்களை எவ்வாறு அடைவது, நம் எண்ணங்களை எப்படி மேம்படுத்துவது என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற எண்ணமோ, கவனிச்சிதறலோ கூடாது. மற்றவர் களுக்காக பயந்து நம் லட்சியத்தை நோக்கிய பயணத்தில் தடுமாற்றம் இருக்கக் கூடாது. இதற்கு நம்மையும், நம் எண்ணங்களையும் அடிக்கடி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த நாள் நமக்கானது.

ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிடத்தையும் நேசிக்கப் பழகுங்கள். நாம் செய்யும் ஒவ்வொரு வேலையையும் விருப்பமுடன் மனம் ஒன்றி செய்து இந்த நாள் நமக்கானது என எண்ணி உற்சாகமாக செயலாற்றத் தொடங்குங்கள். வாழ்க்கைப் பயணம் இனிமையாக இருக்கும். வாழ்த்துக்கள்! 

நினைத்ததை நிறைவேற்றித் தரும் திருப்பதி கருட சேவை உத்ஸவம்!

சுவை மிகுந்த 'மன்ச்சௌ சூப்பி நூடுல்ஸ்' (Manchow Soupy Noodles) தெரியுமா?

பாண்டவர்கள் தவம் இருந்த கொண்டரங்கி மலை ஓர் திகில் அனுபவம்!

இந்திய அணியின் அடுத்த எக்ஸ்பிரஸ் ரெடி! முதல் ஓவரே மெய்டன் தான்!

முகத்தின் சருமப் பொலிவை அதிகரிக்க உதவும் ஃபேஸ் ஐஸ் ரோலர் தெரியுமா?

SCROLL FOR NEXT