This post is going to save you hours of time. 
Motivation

இந்த பதிவு உங்களது பல மணி நேரத்தை சேமிக்கப் போகிறது.. கட்டாயம் படியுங்கள்! 

கிரி கணபதி

ஒரு சராசரி மனிதன் தன் வாழ்நாளில் 5.4 ஆண்டுகளை எதுவும் செய்யாமல் வீணடிக்கிறான் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆனால் இதில் நல்ல விஷயம் என்னவென்றால், இந்த பதிவை நீங்கள் படித்துக் கொண்டிருக்கிறீர்கள். எனவே உங்களது வாழ்நாளில் பல மணி நேரம் சேமிக்கப்படப் போகிறது. இந்த பதிவு உங்களுடைய மனநிலையை முற்றிலுமாக மாற்றி, நீங்கள் திறம்பட செயல்படுவதற்கான சிந்தனையை உங்களுக்குள் விதைக்கப் போகிறது. 

1. அனைத்தையும் எளிதாகப் பாருங்கள்: முற்றிலும் செயற்கை மூலமாகவே நிறைந்திருக்கும் இந்த உலகில், அனைத்தையும் எளிதாகப் பார்ப்பது மிகப்பெரிய பலத்தை உங்களுக்குக் கொடுக்கும். உடல் எடையைக் குறைப்பது, வேலையை சரியாக செய்வது, பணத்தை சம்பாதிப்பது போன்ற விஷயங்கள் மிகவும் கடினமானது என்று நம்மை நம்ப வைத்துள்ளனர். இத்தகைய மனநிலை உண்மையிலேயே உங்களை அனைத்தையும் கஷ்டமாக பார்க்க வைத்துவிடும். நீங்கள் முயற்சித்தால் எல்லாமே எளிதுதான் என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

2. கெட்டதை நீக்குங்கள்: வாழ்வில் சாதிக்க நல்ல விஷயங்களை செய்யுங்கள் என சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு மாற்றாக உங்களிடம் இருக்கும் கெட்ட விஷயங்களை நீக்குவது மூலமாகவும் நீங்கள் வாழ்வில் முன்னேறலாம். உதாரணத்திற்கு ஒரு மிகப்பெரிய பாறையில் இருக்கும் தேவையில்லாத பாறைகளை நீக்கும்போது அது சிலையாக மாறுகிறது. அப்படி தான் உங்களிடம் இருக்கும் கெட்ட விஷயங்களை நீக்குவது மூலமாக நீங்கள் சிறப்பாக மாறலாம்.

3. சரியானதை செய்யுங்கள்: இவ்வுலகில் பலர் தான் அதிகமாக உழைப்பதை சொல்லி தாங்கள் சிறந்தவர்கள் என்று கூறுவார்கள். ஆனால் அதிகமாக உழைப்பதை விட, சரியான இடத்தில் அதிகமாக உழைக்கிறீர்களா என்பதுதான் முக்கியம். எனவே உங்களுக்கு சரியானதைத் தேர்வு செய்து, அதில் அதிகமாக உழையுங்கள். 

4. வேகமாக இருங்கள்: நிதானமே பிரதானம் என்று கூறுவார்கள். ஆனால் நிதானத்தை கருத்தில் கொண்டு எல்லா வேலைகளையும் மெதுவாகவே செய்து கொண்டிருந்தால், நாம் எதிர்பார்க்கும் ரிசல்ட் நமக்குக் கிடைக்காது. நீங்கள் செய்ய நினைக்கும் வேலைகளை வேகமாக செய்யுங்கள், ஆனால் மோசமாக செய்யாதீர்கள். வேகமாக செய்தாலும் எப்படி சிறப்பாக செய்யலாம் என்பதில் கவனம் செலுத்தி விரைவில் முன்னேறுங்கள். 

5. ஒவ்வொரு மணி நேரமும் முக்கியம்: உங்களுடைய நாளை ஒவ்வொரு மணி நேரமாக பிரித்துக் கொண்டு, அந்த ஒவ்வொரு மணி நேரத்திலும் நீங்கள் திறம்பட செயல்படுகிறீர்களா என்பதை கண்காணியுங்கள். ஒரு நாளில் எட்டு மணி நேரம் உழைக்கிறீர்கள் என்றால், அந்த எட்டு மணி நேரத்தில் ஒவ்வொரு மணி நேரமும் உங்களது செயல்திறன் சிறப்பாக இருக்கிறதா என்பதில் கவனம் செலுத்துங்கள். 

6. ஆதாயம் உள்ள இடத்தில் வேலை செய்யுங்கள்: உழைப்பது நாம் எங்கு வேண்டுமானாலும் உழைக்கலாம். ஆனால் உழைக்கும் உழைப்புக்கு ஏத்த ஆதாயம் எங்கு கிடைக்கிறதோ அங்கு நம்முடைய உழைப்பைப் போடுவது நல்லது. ஏனெனில் ஆதாயம் இல்லாத இடத்தில் உழைத்துக் கொண்டிருந்தால் இறுதி வரை ஒரே இடத்தில் மட்டும்தான் இருக்க வேண்டும். இதுவே எதிர்காலத்தில் நமக்கு அந்த உழைப்பு பல வகையில் உதவுமென்றால், அதில் கவனத்தை அதிகமாக செலுத்துவது நல்லது. 

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT