டெஸ்ட்லா, ஸ்பெஸ் X மற்றும் நியூராலிங்க் போன்ற தலைசிறந்த நிறுவனங்களை உருவாக்கிய எலான் மஸ்க், தனது இடைவிடாத கண்டுபிடிப்பு மற்றும் பல தொழில்களில் சிறந்து விளங்கும் அவரது தனித்துவமான திறனுக்காக மிகவும் பிரபலமானவர். எந்தத் துறையிலும் நிபுணராக மாறுவது பற்றிய எலான் மஸ்கின் அறிவுரைகள் உண்மையிலேயே விலைமதிப்பற்றது. இந்தப் பதிவில் அவர் கூறிய சில விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்: எலான் மஸ்கின் கூற்றுப்படி ஒரு விஷயத்தில் உண்மையான ஆர்வத்தை வளர்த்துக் கொள்வது வெற்றிக்கான முதல் படியாகும். ஒவ்வொரு நபர்களும் அவர்களுக்கு நன்மை தரும் விஷயங்களை ஆழமாக ஆராய்ந்து, அதற்கான அறிவையும் புரிதலையும் தொடர்ச்சியாகத் தேடுவதை எலான் மஸ்க் அறிவுறுத்துகிறார். கற்றலை ஆர்வத்துடன் அணுகும்போது எதிலும் நாம் ஒரு நிபுணராக மாற முடியும்.
வலுவான அடித்தளம் முக்கியம்: எந்தத் துறையை கற்க விரும்பினாலும் அதன் அடிப்படைகளில் உறுதியாக இருப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துகிறார். வெறும் மேலோட்டமாக அனைத்தையும் கற்பதில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, அடிப்படை கோட்பாடுகளை முழுமையாக புரிந்து கொண்டு அதில் கைதேர்ந்தவராக மாற வேண்டும். இதன் மூலமாக அந்த குறிப்பிட்ட துறையில் மேம்பட்டவராக நாம் மாற முடியும்.
வளர்ச்சி மனப்பான்மை வேண்டும்: அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலமாக எந்தத் திறனிலும் கைதேர்ந்தவராக மாற முடியும் என்பதை எலான் மஸ்க் முழுமையாக நம்புகிறார். ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் பின்னடைவுகள் அல்லது தோல்விகளுக்கு சோர்வடைவதற்கு பதிலாக அவற்றை வளர்ச்சி மற்றும் கற்றலுக்கான வாய்ப்புகளாக கருத வேண்டும். இந்த மனநிலை காலப்போக்கில் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் நிபுணத்துவத்தை ஏற்படுத்தும்.
விவரங்களில் மூழ்கி விடுங்கள்: ஒரு துறையில் நிபுணராக மாற அந்த குறிப்பிட்ட விஷயங்களின் விவரங்களில் உங்களை மூழ்கடித்துக் கொள்ளுங்கள் என எலான் மஸ்க் கூறுகிறார். மற்றவர்கள் கவனிக்காத நுணுக்கங்கள் மற்றும் சிக்கல்களைத் தெரிந்து கொள்வதும், பகுப்பாய்வு செய்வதும் இதில் அடங்கும். விவரங்களை ஆழமாக ஆராய்வதன் மூலம் அந்த குறிப்பிட்ட விஷயத்தில் விரிவான புரிதலை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இதனால் சராசரியாக கற்பவர்களிடமிருந்து நீங்கள் முற்றிலுமாக வேறுபட்டுக் காண்பீர்கள்.
விடாமுயற்சியுடன் இருங்கள்: வல்லுனராக மாறுவதற்கான பயணத்தில் தோல்வி தவிர்க்க முடியாததாகும். தோல்வியை ஒரு மதிப்புமிக்க கற்றல் அனுபவமாக பார்க்க வேண்டும் என எலான் மஸ்க் கூறுகிறார். தோல்வியை ஏற்றுக் கொண்டு தவறுகளில் இருந்து கற்றுக் கொள்வதன் மூலம், ஒருவர் தங்கள் திறமைகளை செம்மைப்படுத்தலாம், புதிய யோசனைகளை உருவாக்கலாம், இறுதியில் நிபுணத்துவத்தின் உயர்ந்த நிலையை அடையலாம் என்பது அவரது நம்பிக்கையாக உள்ளது.
கருத்து கேளுங்கள்: ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும், கருத்துக்களும் மதிப்புமிக்க நுண்ணறிவை வழங்குவதோடு கற்றலையும் மேம்படுத்தும் என்கிறார் எலான் மஸ்க். மேலும் தனியாக அனைத்தையும் கற்க நினைக்காமல், துறை வல்லுநர்களின் உதவியையும் நாட வேண்டும் என்கிறார். மேலும் உங்களது திறனை வளர்க்கும் நிகழ்வுகளில் தாராளமாகக் கலந்து கொள்வதும் உங்களை மேம்பட்ட நபராக மாற்றும்.
இவற்றைப் பின்பற்றி நீங்கள் ஒரு விஷயத்தை கற்க முயற்சிக்கும் போது, நிச்சயம் பிறரைக் காட்டிலும் மிகப்பெரிய வல்லுனராக நீங்கள் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே எலான் மஸ்கின் அறிவுரையை பின்பற்றி, வாழ்க்கையில் முன்னேறும் முயற்சியை இன்றே எடுங்கள்.