Motivation article 
Motivation

உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம்!

பொ.பாலாஜிகணேஷ்

ம்முடைய வளர்ச்சிக்கு நாம் மட்டுமே காரணம் வேறு யாருமே காரணமாக இருக்க முடியாது. நமக்கு கிடைக்கும் நன்மை தீமை இந்த இரண்டுக்குமே நாம்தான் காரணம். நம்முடைய சரியான செயல்பாடு நம்முடைய முயற்சியும்தான் நம் வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாய் அமைகிறது.

நாம் பணியாற்றும் இடத்திலும் சரி. வீட்டிலும் சரி. நாம் நடந்து கொள்ளும் விதம்தான் நம் வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக இருக்கும். நான் நம் பலத்தை மட்டுமே தெரிந்து வைத்திருப்போம். ஆனால் நம் பலவீனத்தை பெரும்பாலும் தெரிந்து வைத்திருப் பதில்லை. அதுவும் நம் வளர்ச்சிக்கு ஒரு தடைதான். நம் வளர்ச்சிக்கு நாம்தான் காரணம் என்பதை உணர்த்தும் ஒரு சின்ன கதை.

ஒருநாள் ஆபிசில் வேலை செய்யும் பணியாட்கள் அனைவரும் வேலைக்கு சரியான நேரத்தில் வந்து சேர்ந்தனர். நோட்டீஸ் போர்டில் ஏதோ எழுதி இருக்கிறதே என்று அனைவரும் பார்க்கச் சென்றனர்.

அதில் ”உங்கள் வளர்ச்சிக்கும் நம் கம்பெனி வளர்ச்சிக்கும் இடையூறாக இருந்த நபர் நேற்று காலமானார். அடுத்த கட்டிடத்தில் அவர் உடல் வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவும்” என்று எழுதி இருந்தது.

இதை படித்தவுடன் அவர்கள் எல்லாருக்கும் நம்முடன் வேலை செய்த ஒருவர் இறந்து விட்டாரே என்று வருத்தமாக இருந்தது. பிறகு நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்த நபர் யாராக இருக்கும் என்று அறிந்துகொள்ள அவர்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது.

அனைவரும் அடுத்த கட்டிடத்திற்கு சென்றனர். சவப்பெட்டி வைத்திருக்கும் இடத்தை நோக்கி ஒருவர் பின் ஒருவராக செல்ல ஆரம்பித்தனர். சவப்பெட்டியை நெருங்க நெருங்க நம் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவன் யாராக இருக்கும், நல்லவேளை அவன் இறந்து விட்டான் என்று நினைத்த படியே முன்னோக்கிச் சென்றனர்.

இறுதியாக, சவப்பெட்டியினுள் எட்டிப் பார்த்தவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது. அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி மட்டுமே இருந்தது. சவப்பெட்டியுள் யார் எல்லாம் பார்க்கிறார்களோ அவர்கள் முகமே அதில் தெரிந்தது.

கண்ணாடி அருகில் இவ்வாறு ஒரு வாசகம் எழுதி இருந்தது; ”உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் மட்டுமே காரணம், நீங்கள் வளர வேண்டும்  என்றால் அது உங்கள் கையில் மட்டுமே உள்ளது. உங்கள் வளர்ச்சியை உங்களைத் தவிர வேறு யாராலும் தடுத்து நிறுத்த முடியாது” என்றிருந்தது.

உங்கள் வாழ்கையை உங்கள் முதலாளியால் மாற்ற முடியாது. உங்கள் நண்பர்களால் மாற்ற முடியாது. நீங்கள் நினைத்தால் மட்டுமே உங்கள் வாழ்வை மாற்ற முடியும்.

நம்முடைய வளர்ச்சி நம் கையில் இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். இனியாவது சரியான இலக்கை நோக்கி பயணித்து நம் வளர்ச்சிக்கு நாமே காரணமாக இருப்போம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT