motivation Image
motivation Image Image credit - pixabay
Motivation

காலம் பொன் போன்றது எப்படி தெரியுமா?

எஸ்.மாரிமுத்து

காலம் தவறாமை உங்களையும், மற்றவர்களையும் நம்பிக்கைக்குரிய நபராய் அடையாளம் காட்டும்.

அதே சமயம் சொன்ன நேரத்தில் வருவது, சொன்ன வேலையை முடிப்பது, ஒப்புக் கொண்ட நேரத்திற்குள் முடித்து கொடுப்பது, மதிப்பது இவை எல்லாமே நம் மீது மற்றவரின் நம்பிக்கையை அதிகரிக்கும்.

நமக்காக காலமும், நேரமும் காத்திருக்காது. யாருடைய நேரத்தையும் வீணடிப்பதும்  மற்றவர்களின் அதிருப்தியை அதிகரிக்கும்.

இதற்கு உதாரணமாக நெப்போலியன் வாழ்வில் நடந்ததை கூறலாம்.

ஒரு முறை நெப்போலியன் தன் படைத்தளபதிகளை ஒன்று கூட்டி நல்ல விருந்து  படைத்தும், தொடர்ந்து யுத்தம் செய்வதற்கான ஆலோசனை நடத்திடவும் விரும்பினான்.

அதன்படி விருந்து 12 மணிக்கும், 12.15க்கு ஆலோசனைக் கூட்டம் என அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று  தளபதிகளுக்கு அறிக்கை அனுப்பினான்.

ஆனால், 12 மணி ஆகியும் யாரும் வரவில்லை, உணவுக் கூடத்தில் மன்னன் மட்டுமே இருந்தான். பின் தனியாகவே விருந்தை சாப்பிட்டு முடித்தான்.

அதன் பின்  ஒவ்வொருவராக வந்தனர். அவர்களை காத்து இருக்கச் செய்து தான் மட்டும் உண்டு முடித்தான். பின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. குறித்த நேரத்தில் வந்து இருந்தால் விருந்தை சாப்பிட்டிருக்கலாமே என அவர்களுக்குள் வருத்தம் ஏற்பட்டது.

உங்களது வேலைக்காக, அடுத்தவர்களை காத்திருக்கச் செய்து அவர்களது காரியத்தையும் நேரத்தை  வீணடிக்காதீர்கள்.

ஒவ்வொரு நிமிடத்தையும் பயனுள்ள வகையில் நமக்கும், மற்றவர்களுக்கும் நன்மை தரும் வகையில் நடப்பது நமது கடமையாகும்.

பசியில் வாடும்போது கிடைக்காத உணவு இறந்த பின் கிடைத்தால் அதனால் என்ன பயன்? அதுபோலத்தான் காலமும். இளமையில் கிடைக்காத செல்வமும் செழிப்பும் நமது முதுமை காலத்தில் கிடைப்பதால் என்ன பலன்.

எமவே, காலமும், நேரமும் எப்போதும் திரும்பி வராது. ஒரு இடத்திற்கு முன்னாடியே சீக்கிரமாகச் செல்வது, ஒரு நிமிடம் தாமதமாகப் போவதை விட மிகச் சிறந்தது என்கிறார் ஷேக்ஸ்பியர்.

நீங்க சீக்கிரமா உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்றீங்களா? ப்ளீஸ், இது மட்டும் வேண்டாமே! 

காகத்திற்கு உணவு வைப்பதன் அவசியம் என்னவென்று தெரியுமா?

அமிதிஸ்ட் கற்களைப் பயன்படுத்தினால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

கண்களைக் கட்டிக்கொண்டு பெருமாளுக்கு கிரீடம் சாத்தும் கோயில் எது தெரியுமா?

ஊட்டச்சத்து நிறைந்த விதவித சப்பாத்திகளின் ஆரோக்கிய நன்மைகள்!

SCROLL FOR NEXT