Motivation article Image credit - pixabay
Motivation

உங்கள் கனவை எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே உங்கள் வெற்றி!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

வாழ்க்கையில் வெற்றிபெற நினைக்கும் ஒவ்வொருவரும் கனவு காண்பது இயல்பு. இது இரவு தூங்கும் பொழுது வரக்கூடிய கனவல்ல. எதிர்காலத்தை நினைத்து உருவாகும் கனவு. பகலில் காணும் கனவு பலிக்காது என்பார்கள். ஆனால் விழித்திருக்கும் நேரத்தில் இலட்சிய கனவு காண்பது அவசியம். கனவே நம்மை செயல்படுத்த ஊக்கம் தரும் கருவியாகும். எனவே முதலில் கனவு காண ஆசைப்படுங்கள். எதுவாக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிவிடுவோம். மனதிற்கு அந்த வலிமை நிச்சயம் உண்டு.

கனவு காணுங்கள். உங்கள் கனவை நீங்கள் எந்தளவிற்கு காதலிக்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்கள் வெற்றி அமையும். கனவு என்பது எப்போது வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக நாம் ஒரு நிகழ்வினால் பாதிக்கப்படும் பொழுதோ அல்லது தனிமையில் எதிர்காலத்தை பற்றிய சிந்தனையில் இருக்கும் பொழுதோ சாதிக்க தூண்டும் அளவிற்கு எண்ணம் தோன்றலாம். 

அந்தக் கனவை வெறும் கனவாக மட்டும் எண்ணாமல் அதில் முழு மூச்சுடன் இறங்கி செயலாற்றும் பொழுது வெற்றி நிச்சயம் கிடைக்கும். எனவே கனவை நீங்கள் எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்பதை பொறுத்தே வெற்றி அமையும். எதிர்காலத்தைப் பற்றிய பயம் வரக்கூடாது. தனிமையில் எதிர்காலத்தை பற்றிய சிந்தனையில் மூழ்கி வாழ்வில் வெற்றி பெற எடுக்க வேண்டிய முயற்சிகளைப் பற்றி தீவிரமாக சிந்தித்து செயலாற்ற தொடங்குங்கள். வெற்றி நிச்சயம். இதில்தான் கனவை நீங்கள் எந்த அளவு காதலித்தீர்கள் என்பது தெரிந்துவிடும். கனவின் பலத்தை பொறுத்தே வெற்றி அமையும்.

இப்போதைய சாதனையாளர்கள் அனைவருமே தங்கள் கனவுகளை நனவாக்க கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். எதிர்கொண்ட பல தடைகளைத் தாண்டி வந்திருக்கிறார்கள்.  உழைப்பு, விடாமுயற்சி, தன்னம்பிக்கை இருந்தால் நம் கனவை நிச்சயம் நம்மால் நனவாக்க முடியும். இதற்கு கனவை நீங்கள் எவ்வளவு காதலித்தீர்கள் என்பதை விட அதற்காக எவ்வளவு உழைத்தீர்கள் என்பது நீங்கள் அடையும் வெற்றியில் இருந்து தெரிந்துவிடும்.

"நீ எதுவாக ஆகவேண்டும் என்று எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்" என்பது பொன்மொழி. நம் எண்ணங்களுக்கு அதிக வலிமை உண்டு. நாம் என்னவாக ஆகவேண்டும் என்று விரும்புகிறோமோ அந்த கனவை நோக்கி விடாமல் முயற்சி செய்யுங்கள். உதாரணமாக நீங்கள் ஓரு எழுத்தாளராக விரும்பினால் அதற்கான புத்தகங்கள் படிப்பதும், எழுதுவதும், சமூக கூட்டங்களில் கலந்து கொள்வதும், அறிஞர்களின் பேச்சை கேட்பதும், சிறந்த பயிற்சி எடுத்துக் கொள்வதும், நிறைய கற்றுக் கொள்வதும் அவசியமாகிறது. 

தினமும் இதற்கான  பயிற்சியும், தன்னம்பிக்கையுடன் கூடிய அதிக உழைப்பும் கொடுக்க வேண்டும். ஆரம்பத்தில் ஏற்படும் தோல்வியைக் கண்டு துவளாமல் கனவு நனவாகும் வரை போராடி வெற்றி பெறவேண்டும். கனவு காண்பதற்கு நேரம் காலம் கிடையாது. விருப்பம் இருக்கும் ஒன்றில் மட்டுமே ஈடுபாடும் இருக்கும். ஈடுபாடு இருப்பின் நேரம் காலமின்றி அதற்கான உழைப்பை கொடுக்க தயாராக இருந்தால் வெற்றி நிச்சயம். வெற்றி பெற தடையாக இருப்பது பயம், பதற்றம், சந்தேகம், தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் உண்டாகும் தயக்கம். இவற்றை எதிர்கொள்ள தயாராகிவிட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

வாய்ப்புகள் கிடைக்கும்வரை காத்திருக்காமல் அதனை உருவாக்கிக் கொள்ள பழகவேண்டும். இதற்கு கனவை நீங்கள் எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து வெற்றி நிச்சயம்.

வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT