அமைவிடம்: தேனியிலிருந்து கம்பம் செல்லும் சாலையில் 30 கி.மீ., மதுரையிலிருந்து 100 கி.மீ.
தரிசன நேரம்: காலை 6 - 11. மாலை 4 - 8.
விசேஷம்: சித்திரைப் பெருவிழா இங்கு பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. தவிர, வைகாசி விசாகப் பால் குட விழா, ஆனி திருமஞ்சனம், கந்த சஷ்டி, திருக்கார்த்திகை, ஆருத்ரா, தைப்பூசம், சிவராத்திரி, பங்குனி உத்ஸவம் போன்றவை விழா நாட்கள்.
வேண்டுதல்: இத்தல ஈசனை வணங்க, பாவங்கள் ஒழியும். திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டியும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகின்றனர்.
அமைவிடம்: தேனியிலிருந்து 32 கி.மீ., ஆண்டிப்பட்டியில் இருந்து 18 கி.மீ.,
தரிசன நேரம்: காலை 7 - 12. மாலை 3-6.
விசேஷம்: சித்திரைத் திருவிழா, ஆடி, தை அமாவாசைகள் மற்றும் மாத அமாவாசை, பௌர்ணமி நாட்கள் விசேஷ தினங்கள்.
வேண்டுதல்: புத்திர தோஷம், திருமணத் தடை, பிணி, பீடைகள் நீங்க, கல்வி, கேள்விகளில் சிறக்க பக்தர்கள் வேலப்பரை வேண்டிக் கொள்கின்றனர்.
அமைவிடம்: ஊட்டியில் இருந்து குன்னூர் 12 கி.மீ. அங்கிருந்து நடந்து செல்லும் தொலைவு கோயில்.
தரிசன நேரம்: காலை 7 - 12. மாலை 4.30 -8.
விசேஷம்: சித்திரை மாதத்தில் 27 நாட்கள் ஆண்டுத் திருவிழா நடைபெறுகிறது. தவிர, ஆடி வெள்ளி, நவராத்திரி, தீபாவளி, திருக்கார்த்திகை, தைப்பொங்கல், மாத அமாவாசை, பௌர்ணமி போன்றவை விசேஷ தினங்கள்.
வேண்டுதல்: தண்ணீர்ப் பஞ்சம் போக்கும் தெய்வமாக, தந்தி மாரியம்மன் வணங்கப்படுகிறாள். திருமணம் நிகழ, குழந்தை பாக்கியம் பெற, செய்தொழில் விருத்தியாக, கல்வி மேன்மை, பதவி உயர்வுக்காக பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.
அமைவிடம்: திருப்பூர் - ஊத்துக்குளி ரோடு, இரண்டாவது ரயில்வே கேட்டிலிருந்து ஒன்றரை கி.மீ.
தரிசன நேரம்: காலை 6 - 11. மாலை 5-8.
விசேஷம்: சித்திரைக்கனி, சங்கடஹர சதுர்த்தி, நவராத்திரி மற்றும் சனி பெயர்ச்சி ஆகிய நாட்கள் விசேஷம்.
வேண்டுதல்: பயம் நீங்கவும், செய்தொழில் சிறக்கவும் பக்தர்கள் இக்கோயிலில் பிரார்த்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் ஷோடச திரவியங்களால் அபிஷேகம் செய்வித்தும், பட்டுப்புடைவை சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அமைவிடம்: திருவிடைமருதூரிலிருந்து தெற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது.
தரிசன நேரம்: காலை 6 – 12.30. மாலை 4 – 8.30.
விசேஷம்: வைகாசி விசாகம், மார்கழி திருவாதிரை என இருமுறை பிரம்மோத்ஸவ விழா நடைபெறுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் ஈசனை தரிசித்து வழிபட்டால் சகல நன்மைகளும் கிட்டும்.
வேண்டுதல்: வீடு கட்டுவதில், நிலம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் வழிபட்டு பலன் பெற உகந்த கோயில். படிப்பில் மந்தம், நினைவாற்றல் கூட விரும்புவோர் இத்தல ஞானக்குழம்பு தீர்த்தத்தைப் பருகி பலன் பெறலாம். தவிர, சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இத்தல இறைவனை வழிபடுவது சிறப்பு.
அமைவிடம்: பெங்களூரு மாநகரம், மேற்கு மல்லேஸ்வரம், இரண்டாவது கோயில் தெரு.
தரிசன நேரம்: காலை 7.30 - 12. மாலை 5-8.30.
விசேஷம்: மஹா சிவராத்திரி உள்ளிட்ட சைவ திருநாட்கள் அனைத்தும் இங்கே கடைப்பிடிக்கப்படுகின்றன.
வேண்டுதல்: பக்தர்கள் வேண்டுதல் நிறைவேற இங்குள்ள குளத்தில் காசு வீசிச் செல்கின்றனர்.