Royal enfield temple 
ஆன்மிகம்

ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை கடவுளாக வழிபடும் 'புல்லட் பாபா கோயில்'! என்னங்கடா இது?

ராஜமருதவேல்

உலகில் ஒரு வாகனத்திற்காக கோயில் கட்டப்பட்டது இந்தியாவில் தான். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூரிலிருந்து 50 கிமீ தொலைவில் பாலி நகருக்கு அருகில் உள்ள சோட்டிலா கிராமத்தில் தான் இந்த கோயில் உள்ளது. அது உள்ளூர் மக்களின் இறை சார் நம்பிக்கையின் காரணமாக இந்த கோயில் அமைந்துள்ளது.       

இங்கு சாமி சிலைக்கு பதிலாக ராயல் என்ஃபீல்டு புல்லட் தான் வழிபடப்படுகிறது. உள்ளூர் மக்கள் இந்த கோயிலை 'ஓம் பன்னா தாம் அல்லது புல்லட் பாபா கோயில்' என்று அழைக்கின்றனர். இந்த கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். புல்லட் பாபா கோயில் மற்ற கோயில்களை போல, கடவுள் சிலையும் வழிபாடும் இல்லை.

இக்கோயில் மற்ற கோவில்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ராயல் என்ஃபீல்டு புல்லட் மோட்டார் சைக்கிள் வழிபாடு பெறுகிறது. தற்போது ஓம்சிங் ரத்தோரின் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலின் கதை சாலை விபத்து தொடர்பானது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளால் இந்த கோயில் தினமும் பரபரப்பாக உள்ளது. 

கோயில் வரலாறு:   

இந்தக் கோயில் உருவாக்கத்தின் பின்னணியில் ஒரு சோகமான சம்பவம் உள்ளது.1988 ஆம் ஆண்டு ஓம்சிங் ரத்தோட் புல்லட்டில் சென்று கொண்டிருக்கும் போது ஒரு சாலை விபத்தில் இறந்து விட்டார். விசாரணைக்காக புல்லட்டை போலீசார் காவல் நிலையத்துக்கு எடுத்து சென்றனர். ஆனால் சம்பவம் நடந்த இரண்டாவது நாளில், காவல் நிலையத்தில் இருந்து புல்லட் காணாமல் போனது. காவல் துறையினர் புல்லட்டை தேடி இறுதியாக அது ஓம்சிங் இறந்த இடத்தில் நின்றதை கண்டறிந்தனர். 

பிறகு மீண்டும் காவல் நிலையத்திற்கு புல்லட் கொண்டு செல்லப்பட்டது. மறுநாளும் புல்லட் காணாமல் போனது. அதை தேடுகையில் அது மீண்டும் ஓம்சிங் நினைவிடத்திற்கு வந்ததை கண்டுபிடித்தனர். இது தொடர்கதை ஆக ஒருநாள் போலீஸ் புல்லட்டை இரவில் கண்காணித்தது. இரவில் புல்லட் தானாகவே கிளம்பி விபத்து நடந்த இடத்திற்கு சென்றதை போலீஸார் கவனித்தனர். இந்த அமானுஷ்ய சம்பவத்தை பார்த்த காவல் துறையினர் புல்லட்டினை ஓம் சிங் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். 

இந்த தெய்வீக சம்பவம் உள்ளூர் பகுதி முழுக்க பரவியது. மக்கள் அனைவரும் புல்லட்டினை மலர் தூவி தீபம் ஏற்றி வழிபட ஆரம்பித்தனர். அதன் பின்னர் ஓம் சிங் ரத்தோரின் தந்தை தாக்கூர் ஜோக்சிங் ரத்தோர் 'ஓம் பன்னா தாம்' கோயிலை கட்டினார். இந்த கோயில் தற்போது புல்லட் பாபா கோயில் என்ற பெயரில் பிரபலமானது.

இந்த கோயிலுக்கு வருபவர்கள் ராயல் என்ஃபீல்டு புல்லட்டை வணங்கி மலர் மாலை அணிவித்து தேங்காய், இனிப்புகள் வைத்து படையல் இட்டு வழிபடுகின்றனர். இந்த பக்கம் செல்லும் வாகன ஓட்டிகள்  தங்களுக்கு விபத்துகள் ஏற்படாமல் இருக்க, தங்கள் பாதுகாப்பிற்காக இங்கு நின்று பிரார்த்தனை செய்து விட்டு செல்கின்றனர். புதிதாக வாகனம் வாங்கினாலும் இங்கு வைத்து பூஜை செய்து விட்டு தான் எடுத்து செல்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் புல்லட் பாபா தங்கள் பயணத்தை பாதுகாப்பானதாகவும், சிரமமில்லாததாகவும் மாற்றுவார் என்று நம்புகிறார்கள். இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.

மஞ்சள் பூசினால் பெண்கள் கூடுதல் அழகைப் பெறுவார்களாமே!

பாரம்பரிய இந்திய குடும்பங்களில் பெரியவர்களின் மகத்தான பங்கு - மதித்து போற்றுவோம்!

முதியோர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டிய 15 விஷயங்கள்!

Tesla Pi Phone: சார்ஜும் போட வேண்டாம், இன்டர்நெட்டும் இலவசம்! 

திருமணம் செய்ய விரும்பும் நபரை வெளிப்படுத்திய ராஷ்மிகா மந்தனா!

SCROLL FOR NEXT