பிரதோஷ வழிபாடு 
ஆன்மிகம்

எத்தனை பிரதோஷ வழிபாட்டை பார்த்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் தெரியுமா?

ஆர்.ஜெயலட்சுமி

சிவபெருமானுக்கு நடைபெறும் பிரதோஷ வழிபாட்டை தரிசித்தால் நாம் செய்த பாவங்கள் நீங்கி, பல்வேறு பலன்களைப் பெறலாம். பௌர்ணமி மற்றும் அமாவாசைக்கு இரு தினங்களுக்கு முன் வரும் முக்கிய நிகழ்வு பிரதோஷம். இந்த பிரதோஷ நிகழ்வை எத்தனை முறை பார்த்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மூன்று பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து தரிசித்தால் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளை தரிசித்ததற்கு சமம்.

ஐந்து பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து தரிசித்தால் உடலில் உள்ள அனைத்து நோய்களும் நீங்கும்.

ஏழு பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.

பதினொரு பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து தரிசித்தால் உடலும் மனமும் வலிமை பெற்று புது தெம்பு கூடும்.

பதிமூன்று பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து தரிசித்தால் நினைத்த காரியம் தங்கு தடையின்றி நடைபெறும்.

இருபத்தியொரு பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து தரிசித்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

முப்பத்து மூன்று பிரதோஷ வழிபாட்டை தொடர்ந்து தரிசித்தால் சிவன் கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

எழுபத்து ஏழு பிரதோஷ வழிபாடுகளை தொடர்ந்து தரிசித்தால் ஒரு ருத்திர யாகம் செய்த பலன் கிடைக்கும்.

நூற்றியெட்டு பிரதோஷ வழிபாடுகளைத் தொடர்ந்து தரிசித்தால் ஒரு தேவேந்திர பூஜை நடத்தியதற்கு சமம் ஆகும்.

நூற்றி இருபத்தியொரு பிரதோஷ வழிபாடுகளைத் தொடர்ந்து தரிசித்தால் அடுத்த ஜன்மம் கிடையாது.

ஆயிரத்தெட்டு பிரதோஷ வழிபாடுகளைத் தொடர்ந்து தரிசித்தால் ஒரு அசுவ மேத யாகம் நடத்தியதற்கு சமம்.

பிரதோஷம் அன்று  நந்திகேஸ்வரருக்கு  சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். அன்றைய தினம் நந்திகேஸ்வரரின் இரு கொம்புகளுக்கு இடையில்   சிவபெருமான் திரு நடனம் புரிவதாக ஐதீகம். ஒவ்வொரு நாளும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரதோஷ நேரம் ஆகும். இது தினப்பிரதோஷம் எனப்படும். சிவனை வழிபட ஏற்ற காலம் சாயரட்சை பிரதோஷமாகும்.

பிரதோஷத்தன்று நாம் எந்த அபிஷேகப் பொருளை கொண்டு நந்திகேஸ்வரருக்கு அபிஷேகம் செய்கிறோமோ அதற்கேற்ற பலன்களும் கிடைக்கும். பால் கொண்டு அபிஷேகம் செய்ய நோய்கள் தீரும், தயிர் கொண்டு அபிஷேகம் செய்ய வளங்கள் பெருகும், தேன் கொண்டு அபிஷேகம் செய்ய இனிய குரல் வளம் கிடைக்கும், பழச்சாறு கொண்டு அபிஷேகம் செய்ய விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் கொண்டு அபிஷேகம் செய்ய செல்வ வளம் பெருகும், நெய் அபிஷேகம் செய்ய முக்தி பேறு கிடைக்கும், இளநீர் அபிஷேகம் செய்ய நல்ல மக்கட்பேறு வாய்க்கும், சர்க்கரை கொண்டு அபிஷேகம் செய்ய எதிரிகள் தொல்லை மறையும், எண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்ய சுக வாழ்வு வாய்க்கும், சந்தன அபிஷேகம் செய்ய சிறப்பான சக்திகளைப் பெறலாம், மலர்கள் கொண்டு அபிஷேகிக்க தெய்வ தரிசனம் கிடைக்கும்.

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உதவும் 5 Stoic கொள்கைகள்! 

சருமப் பராமரிப்பில் இந்தத் தவறுகள் மட்டும் வேண்டாமே! 

சாளக்கிராம கல் உருவான வரலாறு தெரியுமா?

புகைப்பழக்கத்தை விட்டதும் இதய ஆரோக்கியம் சீராக எத்தனை ஆண்டுகள் ஆகும் தெரியுமா?

மருதாணியில் மறைந்திருக்கும் மருத்துவ உண்மைகள்!

SCROLL FOR NEXT