Mount Kailash 
ஆன்மிகம்

கைலாய மலையில் ஏறிய ஒரே நபர் இவர்தான்!

பாரதி

ஹிந்து மதத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கைலாய மலை பல மர்மங்கள் நிறைந்த மலையாக இருந்து வருகிறது.  கடல் மட்டத்திலிருந்து சுமார் 22030 அடி உயரம் கொண்ட இந்த மலையில் இதுவரை ஒரே ஒரு நபர் மட்டும்தான் ஏறியிருக்கிறார்.

கைலாஷ் என்னும் பெரிய மலையில் ஏறுவது முடியாத காரியம். ஏனெனில், ஒரு சாதாரண மனிதன், கடல் மட்டத்திலிருந்து 18 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் மலையில்தான் ஏற முடியும். ஆனால், அதைவிட உயிரமுள்ள மலையில் ஏறுவது அசாதாரணம். ஆனால், செய்ய முடியாத காரியத்தை செய்து புகழின் உச்சிக்கு அடைய நிறைய பேர் முன்வருவார்கள். ஆனால், இந்த விஷயத்தில் பலர் தோல்விதான் அடைந்தனர்.

ஒருவரைத் தவிர. அவர் பெயர் மிலபெரா. மிலரேபா 11ம் நூற்றாண்டின் ஒரு திபெத்திய முனிவர், அவர் பௌத்த போதனைகள் மற்றும் புத்த மதத்தைப் பரப்புவதற்காக கவிதைகள் மற்றும் பாடல்களை எழுதினார்.   

அவர் அப்போது மட்டுமின்றி, இன்றுவரை மிகவும் புகழ்பெற்ற ஒருவராக இருப்பதற்கு ஒரே காரணம், கைலாய மலையில் ஏறிய ஒரே நபர் இவர் என்கின்ற பட்டம்தான். அவர் அந்த மலையில் ஏறிய பின்னர் பிறரிடம் பேசுவதையே நிறுத்திவிட்டார் என்று கூறப்படுகிறது. அந்த மலையில் ஏறுவதற்கு முன்னர் அவர் ஒரு கொலைகாரன் என்றும், ஆனால், அந்த மலைக்கு சென்றுவிட்டு வந்த பிறகு முழு துறவியாக மாறிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

இவர் மலையிலிருந்து திரும்பி வந்ததும், மக்களிடம் பகிர்ந்தக்கொண்ட விஷயம்; அந்த மலையில் யாரும் ஏற வேண்டாம் என்பதுதான். ஏனெனில், கைலாச மலை சிவபெருமானின் புனித உறைவிடம் என்றும், அவர் அங்கு தியானம் செய்கிறார் என்றும், மரியாதை நிமித்தமாக அதில் ஏறுவதைப் பற்றி யாரும் நினைக்கக்கூடாது என்றும் சொன்னார்.

மலையேறுபவர்களில் சிலர் உச்சியில் சென்று இறந்தனர், மற்றவர்கள் காணாமல் போனார்கள், சிலர் மர்மமான முறையில் மெல்லிய காற்றில் மறைந்துவிட்டனர். அவர்களுக்கு என்ன நடந்தது, எப்படி காணாமல் போனார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை.  அப்படியிருக்க, இவர் மட்டும் கைலாய மலையில் ஏறி, பத்திரமாக திரும்பியுள்ளது அனைவருக்குமே ஆச்சர்யமான விஷயமாகத்தான் உள்ளது.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT