Types of Kanda Sashti Fast 
ஆன்மிகம்

கந்த சஷ்டி விரதத்தின் வரலாறு மற்றும் வகைகள்!

கலைமதி சிவகுரு

ந்த சஷ்டி விரதம் என்பது தமிழர்களின் இன்றியமையாத மிகவும் முக்கியமான ஆன்மிக வழிபாடாகும். இது பெரும்பாலும் சுப்பிரமணிய பக்தர்களால் கடைபிடிக்கப்படும் ஒரு விரதம்.

புராணக் கதைகளின்படி, மகா அசுரர்கள் திரிபுராசுரர், சூரபத்மன் மற்றும் இவர்களுடன் கூடிய அசுரர்கள் தங்கள் பெரும் சக்தியால் தேவர்களை அடிமைப்படுத்தினர். அசுரர்களின் கொடுமையால் அவதிப்பட்ட தேவர்கள் தங்களின் வாழ்விடத்தை இழந்தனர். அந்த நேரத்தில் சிவபெருமான் தனது மூலாதார சக்தியால் உருவாக்கிய சுப்பிரமணியர் இந்த அசுரர்களுக்கு எதிரான போருக்கு தலைமையேற்கிறார்.

சூரபத்மனுடன் 6 நாட்கள் நீடித்த போரில், சூரபத்மனை முற்றாக அழித்த சுப்பிரமணியரின் வீரத்தை நினைவுகூறும் வகையில் கந்த சஷ்டி விரதம் கொண்டாடப்படுகிறது.

விரதங்களின் வகைகள்:

பட்டினி விரதம்: காலை, மதியம், இரவு என ஏதாவது ஒரு வேளை மட்டும் உணவு எடுத்துக்கொள்ளாமல் ஒருசிலர் விரதம் கடைப்பிடிப்பார்கள். அதேபோல, ஒருசிலர், ஒரு வேளை உணவை மட்டும் உட்கொண்டு மீதம் உள்ள இரு வேளையும் சாப்பிடாமல் இருப்பார்கள். கடுமையான விரதம் மேற்கொள்பவர்கள், மூன்று வேளை உணவையும் தவிர்த்து எளிமையான உணவை உட்கொண்டு விரதம் இருப்பார்கள். இவைதான் பட்டினி விரதம் என்றழைக்கப்படுகிறது.

பால் விரதம்: மிகவும் முக்கியமான விரதங்களில் ஒன்று பால் விரதம். சுவாமிக்கு அபிஷேகம் செய்த பாலை மட்டுமே ஒரு டம்ளர் குடித்து விரதம் இருப்பார்கள்.

பாலும்,பழமும் விரதம்: மூன்று வேளையும், முற்றிலுமாக உணவைத் தவிர்த்து பால் மற்றும் பழங்களை உட்கொள்வார்கள். உதாரணத்திற்கு, காலையில் ஒரு வாழைப்பழம், மதியம் ஒரு ஆப்பிள், இரவில் ஒரு மாதுளை பழத்துடன் ஒரு டம்ளர் பால் என இந்த விரதத்தை கடைப்பிடிப்பார்கள்.

இளநீர் விரதம்: கடினமான விரதங்களில் ஒன்று இளநீர் விரதம். ஒரு நாளைக்கு ஒரு இளநீர் மட்டுமே குடித்து விரதம் இருப்பார்கள். இளநீரில் இருக்கும் வழுக்கையை எடுத்துக்கொள்ளலாம்.

மிளகு விரதம்: விரத முறைகளில் கடுமையான விரதமாகக் கருதப்படுவது மிளகு விரதம்தான். பால், பழம் என எந்த வகையான உணவையும் உட்கொள்ளாமல் வெறும் மிளகை மட்டும் உட்கொள்வதுதான் இந்த விரதம். ஒவ்வொரு நாளும் ஒரு மிளகை அதிகரிக்க வேண்டும். முதல் நாளில் ஒரு மிளகில் தொடங்கி, இரண்டு மூன்று என 7வது நாளில் ஏழு மிளகை உட்கொண்டு விரதத்தை முடிப்பார்கள்.

உப்பில்லாமல் உண்பது: விரதம் கடைப்பிடிக்கப்படும் ஏழு நாட்களுமே உப்பு இல்லாமல் உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். காய்கறிகள், குழம்பு ஆகியவற்றைத் தவிர்த்து, உப்பு இல்லாமல் தயிர் சாதம், பால் சாதம் என ஒரு வேளைக்கு உண்பார்கள்.

காய்கறி விரதம்: ஒருசிலர் அரிசி, பருப்பு போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து, காய்கறி மற்றும் கீரை வகைகளை மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பார்கள்.

கவனிக்க வேண்டியவை: விரதம் இருக்கும் பலர், நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காமல் உடலை வருத்திக்கொள்வார்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்நிலையில், சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பதை விரதம் இருப்பவர்கள் நினைவில் வைத்துக்கொண்டு, விரதம் இருக்கும் 7 நாளும் தாராளமாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

இந்த விரதம் சுப்ரமணியரின் அருளைப் பெற்று நம் வாழ்க்கையில் எதிர்பாராத நன்மைகளை பெற வழிவகுக்கிறது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT