Lord Shiva temple is leaning for 300 years due to a single curse
Lord Shiva temple is leaning for 300 years due to a single curse 
ஆன்மிகம்

ஒரே சாபத்தால் 300 ஆண்டுகள் சாய்ந்திருக்கும் சிவன் கோயில்!

ஆர்.ஜெயலட்சுமி

லகப் புகழ்பெற்ற சாய்ந்த கோபுரத்தை பற்றி கேட்டிருக்கிறோம். அது சுமார் 4 டிகிரி சாய்ந்து காணப்படுகிறது. ஆனால், வாரணாசியில் உள்ள இந்த கோயில் சுமார் ஒன்பது டிகிரி  சாய்வாக உள்ளது. மேலும் இது ஆண்டுதோறும் மேலும் மேலும் சாய்ந்து வருவதாகக் கூறுகின்றனர். இப்படி இந்த கோயில் சாய்ந்து வருவதற்கு ஒரு சாபம்தான் காரணம் என்கிறார்கள்.

வாரணாசியில் மணிகர்ணிகா காட் மற்றும் சிந்தியா காட் இடையே ரத்னேஸ்வர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலின் உயரம் 74 மீட்டர். இது பைசா சாய்ந்த கோபுரத்தை விட 20 மீட்டர் அதிகம்.

இந்தக் கோயில் சாய்ந்ததற்கு இரண்டு கதைகள் சொல்லப்படுகின்றன. ராணி அஹில்யா பாய் ஹோல்கர் வாரணாசியில் கோயில்களை கட்டும்போது அந்த நேரத்தில் அவரது பணிப்பெண்களில் ஒருவரான ரத்னா பாயும் கோயில் கட்டுவதற்கு கடன் கொடுத்துள்ளார். பெரிய பங்கை கொடுத்த அந்த பணிப் பெண்ணின் பெயரான ரத்னா என்ற பெயரே கோயிலுக்கு வைத்ததைக் கேட்ட அஹில்யா இந்த கோயிலுக்கு சாபம் கொடுத்ததால்தான் நீரில் ஒரு பக்கம் மூழ்கியதாக சொல்கிறார்கள்.

மற்றொரு கதைப்படி ராஜா மான்சிங்கின் வேலைக்காரரால் அவரது தாயார் ரத்னா பாய்க்காக கட்டப்பட்டது இந்த கோயில் என்று கூறப்படுகிறது. கோயில் கட்டப்பட்ட பிறகு அம்மாவின் கடனை அடைத்து விட்டதாக பெருமையுடன் அறிவித்தார். இந்த வார்த்தைகள் அவன் உதடுகளில் இருந்து வெளிப்பட்டவுடன் அன்னையின் கடனை ஒருபோதும் அடைக்க முடியாது என்பதை காட்ட இக்கோயில் பின்னால் சாய்ந்தது என்று கூறுகின்றனர்.

ஆனால், அறிவியல்படி நதியின் கடையில் கட்டப்பட்ட இந்த கோயிலின் நிலப்பரப்பு ஸ்திரத்தன்மை குறைந்த இடம், நீரோடும் பாதையில் நில அரிப்பு ஏற்பட்டு தளம் பலவீனம் அடைவதால் நாளடைவில் இக்கோயில் ஒரு பக்கம் சாய்ந்து வருகிறது. மேலும், இது வருடத்தின் பாதி நாள் நதியில் மூழ்கி விடுகிறது. ஒருசில நாள் இதன் கோபுர உச்சி வரை கூட தண்ணீர் இருக்கிறது. இதனால் இந்த கோயிலுக்கு வருடத்தின் சில நாட்கள் மட்டுமே பூஜை வழிபாடு எல்லாம் செய்யப்படுகிறது. கோயிலின் கருவறையில் ஒன்றல்ல பல சிவலிங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதனாலே இது சிவனின் சிறிய நீதிமன்றம் என்றும் அழைக்கப்படுகிறது.

கோயிலில் ஒரு பக்கமாக சாய்ந்து இருப்பதால் இந்தக் கோயிலின் கருவறையில் யாரும் நேராக நிற்க முடியாது. சாய்ந்து பேலன்ஸ் பண்ணிதான் வழிபாடு செய்ய வேண்டும்.1860களில் எடுக்கப்பட்ட இந்த கோயிலின் படங்களில் மட்டுமே நேராக இருப்பதைக் காண முடிகிறது.

மாற்றுப்பாலினத்தவர்களை மனநோயாளிகள் என்று அறிவித்த நாடு… வெடித்தது சர்ச்சை!

தாய்மையை எதிர்நோக்கும் பெண்களைத் தாக்கும் தைராய்டு பிரச்னையை தடுப்பது எப்படி?

நாகை அருகே 14 இலங்கை மீனவர்கள் கைது!

நேற்றைய சராசரிகள் இன்றைய சக்கரவர்த்திகள்!

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க ஆய்வுகள் கூறும் தகவல்கள்!

SCROLL FOR NEXT