ஆன்மிகம்

வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்கச் செய்யும் செண்பகப் பூ!

ஆர்.ஜெயலட்சுமி

மக்கு நல்ல நேரம் வரப்போகிறது என்றாலே அந்த நல்ல நேரத்தை நமக்கு உணர்த்தும் வகையில் சில நல்ல விஷயங்கள் வாழ்க்கையில் நடக்கத் துவங்கும். அந்த வரிசையில் செண்பகப் பூவை நாம் வீட்டில் செடியாக வளர்த்தாலும் சரி,  கடையில் பூவை வாங்கி பூஜைக்கு வைத்துக் கொண்டாலும் சரிதான். நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். சுக்ரன் யோகத்தை அள்ளிக் கொடுக்கக்கூடிய அதிர்ஷ்டத்தை கூரையைப் பிச்சிக்கிட்டு  கொட்டிக் கொடுக்கக் கூடிய ஒரு பூ என்றால் அது செண்பகப் பூதான். அதிர்ஷ்டத்தை தரக்கூடிய செடி என்றால் அது செண்பகப் பூச்செடி.

செண்பகப் பூச்செடியினை நமது வீட்டில் வைத்து வளர்த்தோம் என்றால் அது நமக்கு அதிர்ஷ்டத்தை தரும். அதிர்ஷ்டம் இருந்தால்தான் அந்தச் செடி நமது வீட்டில் செழிப்பாக வளரும் என்று கூட சொல்லலாம். இப்படியாக நம்முடைய வீட்டில் வளர்க்கக்கூடிய அந்த செண்பகப் பூச்செடியிலிருந்து செண்பக பூவை பறித்து நம் வீட்டில் இருக்கும் மகாலட்சுமிக்கு வைத்து பூஜை செய்வது மிகவும் நல்லது. தினந்தோறும் செண்பகப் பூவை மகாலட்சுமிக்கு சூட்டுவதால் வீட்டில் வறுமை நிரந்தரமாக அகற்றப்படும். செண்பகப் பூவானது சுக்ரனுக்கு மிக மிக விருப்பமான பூ என்றும் சொல்லப்பட்டுள்ளது.

மகாலட்சுமிக்கு இந்தப் பூவை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்ய வேண்டும். குறிப்பாக, வெள்ளிக்கிழமை அன்று வரக்கூடிய சுக்ர ஹோரையில் மகாலட்சுமியை நினைத்து, சுக்ர பகவானை நினைத்து பூஜை அறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் .வீட்டில் செண்பகப் பூச்செடி இல்லாதவர்கள் கடையில் சொல்லி வைத்து இந்தப் பூவை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் இந்தப் பூவை பூஜை அறையில் வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.

பூஜையில் வைத்த செண்பகப்பூ காய்ந்ததும் அந்தப் பூவை பூஜை பொருட்கள் போடும் குப்பையோடு சேர்த்து விடுங்கள். எதிர்காலத்தில் உங்களுக்கு வரக்கூடிய அதிர்ஷ்டமான வாழ்க்கையை உணர்த்தும் வகையில் இந்தப் பூ உங்கள் கைக்கு கிடைத்தால் அதை பூஜைக்குப் பயன்படுத்தத் தவறி விடாதீர்கள்.இது  உங்கள் அதிர்ஷ்டத்தை நீங்களே தவிர விடுவதாக அர்த்தம்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT