Thiruvathirai Thiakesar Vada Pada Darshan
Thiruvathirai Thiakesar Vada Pada Darshan Raj Hari Nir
ஆன்மிகம்

திருவாதிரையில் வடபாத தரிசனம் காட்டும் திருவாரூர் தியாகேசர்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

மார்கழி மாத பௌர்ணமி தினம் ஆருத்ரா விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆருத்ரா தரிசனமும், அபிஷேகமும் அனைத்து சிவ தலங்களிலும் நடைபெறும். ஈசனின் போக வடிவான நடராஜர் வடிவம் பிரபஞ்சத்தின் இயக்கத்தைக் குறிக்கிறது. நடராஜருக்கு ஆண்டுக்கு ஆறு முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அதில் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதத்தில் வரும் ஆருத்ரா அபிஷேகமும் மிகவும் சிறப்பாக போற்றப்படுகிறது. சிவபெருமானுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை.

பஞ்சபூத தலங்களில் சிதம்பரம் ஆகாயத் தலமாகும். அதுவும் சிதம்பரம் நடராஜர் கோயிலில் மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் உத்ஸவர் சிதம்பரம் மற்றும் திருவாரூரில் திருவாதிரை தரிசனம் மிகவும் விசேஷமாக நடைபெறும். இன்றைய தினத்தில் தான் திருவாரூர் தியாகராஜ ஸ்வாமியின் வடபாத தரிசனம் காட்டப்படும். பஞ்சபூத தலங்களில் திருவாரூர் பூமி தலமாகும்.

தாருகாவனத்து முனிவர்கள் சிவபெருமானை நீட்டித்து ஒரு பெருவேள்வி நடத்த, சிவனார் பிச்சாடனர் வேடமிட்டு முனிவர்களின் இல்லங்களுக்கு செல்ல, முனி பத்தினிகள் தம்மை மறந்து சிவபெருமான் பின்னே செல்ல இதனால் வெகுண்ட முனிவர்கள் வேள்வித்தீயில் மத யானை, முயலகன், உடுக்கை, மான், தீப்பிழம்பு ஆகியவற்றை தோற்றுவித்து சிவன் மீது ஏவினர். ஈசன் மதயானையைக் கொன்று அதன் தோலை அணிந்தார். மற்றவற்றை தானே தரித்துக்கொண்டு முயலகன் மீது வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி நடனமாடி முனிவர்களுக்கு உண்மையை உணர்த்தினார். இதுவே ஆருத்ரா தரிசனம் என்று சொல்லப்படுகிறது.

திருவாதிரை களி பிறந்த கதை:

சேந்தனார் ஒரு விறகு வெட்டி. அவர் சிறந்த சிவ பக்தரும் கூட. தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பின்புதான் உண்டு வருவார். ஒரு நாள் அதிக மழை பெய்து விறகுகள் ஈரமானதால் அவரால் விறகுகளை விற்க முடியவில்லை. எனவே, இருக்கும் சிறிது அரிசி கொண்டு மாவு ஆக்கி அந்த மாவில் களி செய்து சிவனடியாரை எதிர்பார்த்து காத்திருந்தார். யாரும் வராததால் மனம் மிகவும் நொந்து வருந்தினார். சேந்தனாரின் பக்தியை உலகிற்கு காட்ட எண்ணிய ஈசன் ஒரு சிவனடியார் வேடத்தில் வந்து களியை  உண்டதும் அல்லாமல், எஞ்சி இருந்ததை அடுத்த வேளை உணவுக்கு என்று வாங்கிச் சென்றுவிட்டார்.

மறுநாள் காலை சிதம்பரம் கோயில் கருவறையை திறக்க நடராஜப் பெருமானை சுற்றி எங்கும் களி சிந்தி இருந்தது. இதைக் கண்டு வியப்படைந்த தில்லைவாழ் அந்தணர்களுக்கு ஒரு அசரீரி ஒலித்தது. "இது என் பக்தன் வீட்டில் நான் விரும்பி உண்ட களியமுது" என்றது. அன்று தொடங்கி இன்று வரை திருவாதிரை நன்னாளில் களி செய்து நைவேத்தியம் செய்யும் பழக்கம் வந்தது. களியுடன் ஏழு வகை காய்கறிகள் சேர்த்து கூட்டு செய்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்ய, ஈசன் நாம் எண்ணிய அனைத்தையும் அருளுவார் என்பது திண்ணம்.

6 ரூபாயில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டம்: முழு விவரம் உள்ளே!

சரும நோய்களைப் போக்கும் சிறந்த நிவாரணி புங்கம்!

பாவங்களைப் போக்கும் பர்வதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர்!

மாம்பழ சுவையில் மதி மயங்கி உடல் ஆரோக்கியத்தை மறவாதீர்!

தென்கொரியாவில் உண்ணப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ் வகைகள்!

SCROLL FOR NEXT