திருக்குற்றாலநாதர் https://www.alayathuligal.com
ஆன்மிகம்

வித்தியாசமான அபிஷேகங்கள் காணும் மூலவர்கள்!

ஆர்.பிரசன்னா

கோயில்களில் சுவாமிக்கு தினசரி அபிஷேகங்கள் நடைபெறுவதுண்டு. அதேபோல், விசேஷ தினங்கள் சிலவற்றில் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுவதைப் பார்த்திருப்போம். அந்த வகையில், சில கோயில்களில் அக்கோயில் மூலவருக்கு வித்தியாசமான சில பொருட்களைக் கொண்டு நடைபெறும் அபிஷேகங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

மூலிகை தைல அபிஷேகம்: திருக்குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதருக்கு அநேக மூலிகைகள், வேர்கள், மருந்துகள் ஆகியவற்றை அரைத்துக் காய்ச்சப்படும் தைலத்தைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அதுவே பிரசாதமாக வழங்கப்படுகிறது.

மிளகாய் தூள் அபிஷேகம்: புதுச்சேரி ஆலங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை உத்ஸவ விழாவில் அம்மனுக்கு மிளகாய் தூள் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.

தக்காளிச் சாறு அபிஷேகம்: காரைக்குடி முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி பெருவிழாவில் அம்மனுக்கு தக்காளிச் சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது.

மாம்பழ அபிஷேகம்: உறையூர் வெக்காளி அம்மனுக்கு வைகாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் மாம்பழங்களால் அபிஷேகம் விமரிசையாக நடத்தப்படுகிறது.

பச்சைக் கற்பூர அபிஷேகம்: திருவலஞ்சுழியில் உள்ள விநாயகர் கடல் நுரையால் ஆனவராகக் கருதப்படுவதால், அவருக்கு பச்சை கற்பூர அபிஷேகம் மட்டுமே இக்கோயிலில் நடைபெறுகிறது.

காய்கறிகள் அபிஷேகம்: திருப்பழனம் அருள்மிகு பழனத்தப்பர் கோயிலில் ஐப்பசி பௌர்ணமி அன்று சுவாமிக்கு அனைத்து விதமான காய்கறிகளைக் கொண்டு அபிஷேகம் நடைபெறுகிறது.

தவிடு அபிஷேகம்: கேரளாவில் உள்ள கொடுங்கல்லூர் பகவதி அம்மனுக்கு பால், தயிர் போன்ற அபிஷேகங்களுடன், தவிடு அபிஷேகமும் செய்யப்படுவது விசேஷம்.

நெல்லிப் பொடி அபிஷேகம்: திருவாரூர் மாவட்டம், பொன்னிறை எனும் ஊரிலுள்ள அகஸ்தீஸ்வரருக்கு பங்குனி உத்திர திருநாளில் நெல்லிப் பொடி அபிஷேகம் செய்யப்படுகிறது.

நெய், மஞ்சள் அபிஷேகம்: திருச்சூர் வடக்குநாத சுவாமிக்கு தினமும் நெய் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற எந்த அபிஷேகமும் கிடையாது. இக்கோயிலில் அருளும் பார்வதி தேவிக்கு மஞ்சள் பொடியால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படுகிறது.

மருதாணி இலை அபிஷேகம்: சென்னை, குரோம்பேட்டையில் உள்ள கணபதிபுரம் செங்கச்சேரி அம்மன் கோயிலில் பௌர்ணமியன்று மருதாணி இலைகள் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் இவை திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு பிரசாரமாக அளிக்கப்படுகிறது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT