Prathosham
Prathosham 
ஆன்மிகம்

பிரதோஷ நேரத்தில் எந்தக் கிழமையில் நந்தியை வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும்?

ஆர்.ஜெயலட்சுமி

பிரதோஷம் என்பது வாரத்தின் ஏழு கிழமைகளில் ஏதேனும் ஒரு தினத்தில் வரலாம். எந்தக் கிழமையில் வரும் பிரதோஷத்தன்று சிவன் கோயிலுக்குச் சென்று நாம் நந்தியையும் உமா மகேஸ்வரரையும் வழிபட்டு வருகின்றோமோ அதற்கு ஏற்ப பலன்களை நாம் பெற முடிகிறது. இனி, எந்தக் கிழமை பிரதோஷத்தில் கோயிலுக்குச் சென்று சிவபெருமானை வழிபட, என்ன பலனைப் பெறலாம் என்பதைப் பார்ப்போம்.

ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷத்தில் நந்தியையும் சிவபெருமானையும் வழிபட்டு வந்தால் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் தடையின்றி நடைபெற வழி பிறக்கும்.

திங்கட்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால், சஞ்சலங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். நல்ல எண்ணங்கள் உருவாகும்.

செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால், உணவுப் பற்றாக்குறை அகலும். உத்தியோக வாய்ப்பும் உதிரி வருமானங்களும் பெருகும்.

புதன்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால், புத்திர விருத்தியும், ஆண் சந்தான பாக்கியமும் கிட்டும்.

வியாழக்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் படிப்பு தடையாகலும். கல்வி ஞானம் பெருகும். மதி நுட்பத்தினால் மகத்துவம் காண்பீர்கள்.

வெள்ளிக்கிழமை வரும்  பிரதோஷ வழிபாட்டினால் பகை விலகும். பாசம் கூடும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

சனிக்கிழமை வரும் பிரதோஷ வழிபாட்டினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

அனைத்துப் பிரதோஷங்களிலும் வழிபாடு செய்வதால் இனிமையான வாழ்க்கையை ஏற்படுத்தி தரும். சந்தோஷமான வாழ்க்கை அமைய நந்தியை வழிபடுவது சிறப்பு.

அடடே! வாட்ஸ்அப்பில் மின் கட்டணமா: இது நல்லா இருக்கே!

முட்டி கொண்ட கமலா - ஈஸ்வரி... ராதிகா வீட்டில் அடுத்து என்ன நடக்கும்? பாக்கியலட்சுமி அப்டேட்!

விடுதலை 2 படத்தில் எஸ்.ஜே.சூர்யா.. மாஸான அப்டேட்டால் ரசிகர்கள் குஷி!

காலையில் எழுந்ததும் வேம்பு நீர் குடிப்பதால் உடலில் நடக்கும் அற்புதங்கள்!

அவெஞ்சர்ஸ் ரேஞ்சில் உருவாகும் விஜய்யின் GOAT... மாஸ் படத்தை வெளியிட்டு அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

SCROLL FOR NEXT