3 breathtakingly beautiful places in the world! Image Credits: China Daily
பயணம்

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

நான்சி மலர்

இந்த உலகில் நம்மை ஆச்சர்யப்படுத்தக்கூடிய அழகிய இடங்கள் எண்ணற்றவை உள்ளன. அதில் சில இடங்களை பார்க்கும் போது, 'யார் இதையெல்லாம் இவ்வளவு அழகாக உருவாக்கியிருப்பார்கள்' என்று ஆச்சரியப்படக்கூடிய அழகைக் கொண்டிருக்கும். அத்தகைய 3 மிரள வைக்கும் அழகைக்கொண்ட இடங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1.Huayang Lake.

இந்த ஏரி, சுற்றிலும் மரங்களால் சூழப்பட்டு பச்சை நிறத்தில் பாசிப் படர்ந்தது போல பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். இந்த ஏரி சீனாவில் yangzhou என்னும் இடத்தில் அமைந்துள்ளது. இது மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக இருக்கிறது. சுற்றுலாப்பயணிகள் இந்த ஏரியில் படகு சவாரி செய்வதற்காகவே கூட்டம் கூட்டமாக வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஏரியில் பயணம் செய்வது ஃபேன்டஸி உலகிற்குள் நுழைந்த அனுபவத்தை தரும் என்று சொல்லப்படுகிறது.

Elephant Rock

2.Elephant Rock.

ஐஸ்லாந்தில் உள்ள Westman Island என்னும் இடத்தில் கடலுக்கு நடுவிலே இருக்கும் இந்த மலையை பார்க்க அச்சு அசலாக ஒரு யானை தண்ணீருக்கு நடுவிலே நிற்பது போலவே இருக்குமாம். இயற்கையாகவே Basalt Rock களால் ஆன இந்த மலை எரிமலை வெடிப்பினால் உருவானது என்று சொல்லப்படுகிறது. இந்த யானைப் போன்ற உருவ அமைப்பைக் கொண்ட மலையை பார்ப்பதற்காகவே எண்ணற்ற சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்திற்கு வருகிறார்கள்.

Puga Valley

3. Puga Valley.

இந்தியாவில் லடாக்கில் இமயமலைக்கு நடுவிலே உள்ள ஒரு பள்ளத்தாக்கு தான் Puga valley ஆகும். சுற்றிலும் உள்ள வெள்ளை மலைகளுக்கு நடுவிலே பச்சை நிறத்தில் ரொம்பவே அழகாய், வினோதமாய் இருக்கும். இந்த இடத்தை பார்க்கவே நிறைய சுற்றுலாப்பயணிகள் கூட்டம் இங்கே வருகிறது.

இந்த இடம் அதன் இயற்கை அழகிற்காகவும், இங்கிருக்கும் வெந்நீர் ஊற்றிற்காகவும் புகழ் பெற்றதாகும். இந்த வெந்நீர் ஊற்று சருமப் பிரச்னையையும், வாத நோயையும் போக்குவதாக கூறி எண்ணற்ற மக்கள் இங்கே வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 3 மிரள வைக்கும் இடங்களில் உங்களை கவர்ந்தது எதுவென்று சொல்லுங்க பார்க்கலாம்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT