Tanarara Road, Indonesia Image Credits: Pinterest
பயணம்

உலகில் உள்ள மிக அழகிய 4 சாலைகள்!

நான்சி மலர்

சாலைகளில் பயணம் செய்வது நமக்கு மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்கிக் கொடுக்கும். நாம் பயணிக்கும் பாதை சரியாக இருந்தால்தான் நாம் போய் சேரும் இலக்கும் சரியாக இருக்கும். சாலைகளில் பயணிக்கும்போது இயற்கை அழகை ரசித்தபடி செல்வது அலாதியான இன்பமாக இருக்கும். அத்தகைய சிறப்பு மிகுந்த உலகில் உள்ள 4 மிக அழகிய சாலைகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1.Tanarara Road, Indonesia.

பச்சை பசேலென்று இருக்கும் மலைகளுக்கு மேல் வளைந்து நெளிந்து போகும் இந்த சாலையை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். அதிலும் மலையுடைய முகடுகளில் இருக்கும் இந்த சாலையில் பயணம் செய்துக்கொண்டே கீழே உள்ள பசுமையான பள்ளத்தாக்குகளை பார்த்து ரசிக்க மிகவும் அழகாக இருக்கும். இப்படிப்பட்ட ரம்மியமான சூழலில் பயணிப்பது மனதிற்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

Shiziguan Floating Bridge

2. Shiziguan Floating Road, China.

மலைப் பள்ளத்தாக்குகளுக்கு இடையிலே உள்ள ஆற்றின் மீது மிதப்பதுபோல இந்த சாலையை கட்டியுள்ளார்கள். இந்த சாலையில் நடந்து செல்லும் போதோ அல்லது கார் ஓட்டிக் கொண்டு செல்லும் போதோ தண்ணீர் மீது மிதந்து செல்வது போன்ற உணர்வைத் தரும் என்று கூறுகிறார்கள்.

Zojila Pass, India

3. Zoji la Pass, India.

இமயமலையில் இருக்கும் ரொம்பவே ஆபத்தான அதே நேரம் அழகான சாலைதான் Zoji la Pass.  சுற்றிலும் பனியால் சூழப்பட்டிருக்கும் இந்த சாலையில் பயணம் செய்யும் போது ஏதோ வேற்று கிரகத்திற்கு சென்றுவிட்டோமோ? என்ற உணர்வைத் தரக்கூடியதாக இருக்கும்.

Rameshwaram to Dhanushkodi Road, Tamil Nadu.

4. Rameshwaram to Dhanushkodi Road, Tamil Nadu.

கடலுக்கு நடுவிலே அமைந்திருக்கும் இந்த சாலை ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடிக்கு செல்கிறது. இந்த சாலை 24 கிலோ மீட்டர் நீளமுடையது. தென்தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் புகழ்பெற்ற தீவு தான் ராமேஸ்வரம். இங்கிருந்து தெற்கே 24 கிலோ மீட்டர் தூரத்தில் இருப்பது தான் தனுஷ்கோடி. இந்த தனுஷ்கோடியின் கடைசி முனையில் இருப்பதுதான் அரிச்சல் முனை. இங்கிருந்து இலங்கையில் உள்ள தலை மன்னார் மிகவும் அருகில் உள்ளது.

இந்த அரிச்சல் முனைக்கு செல்வதற்காகத்தான் இந்திய அரசாங்கம் 22 கோடி செலவில் 5 கிலோ மீட்டருக்கு கடலுக்கு நடுவிலே சாலை அமைத்துள்ளார்கள்.  இந்த சாலையை சுற்றியும் கடலால் சூழப்பட்டிருக்கும். இந்த இடத்தில் கார் ஓட்டி செல்லும் அனுபவம் வேற லெவலில் இருக்கும். இந்த சாலை மிகவும் அழகாக இருந்தாலுமே இதை சுற்றியுள்ள மணல்மேடுகுகள் அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றத்தால் மாற்றம் அடைந்துக் கொண்டேயிருக்கும். இந்தப் பகுதியில் உள்ள கடல் அடிக்கடி சீற்றம் அடைந்து கடல் அலைகள் ரோட்டிற்கு வருவதாலும் மிகவும் ஆபத்தான சாலையாகவும் இருக்கிறது.

சுவாமி ஐயப்பன் அரக்கி மகிஷியை வதம் செய்த வாள் எங்குள்ளது தெரியுமா?

தோரின் பிரபலமான 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்! 

சிறுதானிய உணவுகள் உடலில் ஏற்படுத்தும் ஆரோக்கிய மாற்றங்கள்!

கேட்ட வரத்தைக் கொடுக்கும் கார்த்திகை சோமவார விரதம்!

SIP திட்டத்தின் மாதத்தவனையை தவறவிட்டால் என்ன ஆகும் தெரியுமா? 

SCROLL FOR NEXT