6 Must visit monsoon waterfalls in Maharashtra Image Credits: History With Travels
பயணம்

மக்களை மயக்கும் மகாராஷ்டிராவின் 6 அருவிகள்!

நான்சி மலர்

சில அருவிகளின் அழகை மழைக்காலத்தில்தான் காணமுடியும். தண்ணீர் பெருக்கு அதிகமாகும்போது தான் அதன் முழுமையான அழகு வெளிப்படும். அத்தகைய அழகிய மகாராஷ்டிராவில் இருக்கும் 6 அருவிகளை பற்றித்தான் இந்த பதிவில் காண உள்ளோம்.

1.Kalu Waterfalls.

இந்த அருவி Harishchandragad மலையிலிருந்து உருவாகி கிரேஷ்வர் கிராமம் வழியாக வருகிறது. இது God's valley ல் அமைந்துள்ளது. ஜூராசிக் பார்க் படத்தில் வரும் அருவியை அப்படியே பார்த்ததுபோல ஒரு உணர்வு இந்த அருவியை பார்க்கும்போது வரும். இதன் அருகில் இன்னொரு அருவியும் அமைந்துள்ளது. அதன் பெயர் மஹூலி அருவியாகும்.

2.Amboli Ghat Waterfalls.

இந்த அருவி தெற்கு மகாராஷ்ட்ராவில் உள்ள அம்போலி என்னும் இடத்திலேதான் அமைந்துள்ளது. இந்த அருவியில் இருந்து மட்டும் தண்ணீர் கொட்டாது. இந்த அருவியை காண்பதற்காக நாம் ஏறிச் செல்லும் படிக்கட்டுகளில் இருந்தும் தண்ணீர் கொட்டிக்கொண்டிருக்கும். இந்த அருவி அடர்ந்த காட்டிற்கு நடுவிலே அமைந்துள்ளது. இயற்கை விரும்பிகளுக்கு இந்த இடம் ஒரு சொர்க்க பூமியாகும்.

3.Kumbhe Waterfalls.

‘வாரிசு’ படத்தில் விஜய்யினுடைய பாடல் Intro scene இந்த அருவியை மையப்படுத்தியே எடுக்கப்பட்டிருக்கும். இந்த அருவி இயற்கை எழில்கொஞ்சும் அழகை உடையது. கடினமான மலையேற்றம் இல்லாமல் எளிதாக குடும்பத்துடன் சென்று பார்த்துவிட்டு வரக்கூடியதாக இருக்கும்.

4.Vasundara Waterfalls.

இது ஆன்மீகம் பொருந்திய அருவியாகும். இந்த அருவியை அடைய பத்ரிநாத்திலிருந்து Mana கிராமத்திற்கு 3 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து செல்ல வேண்டும். இந்த அருவியின் நீர் பாவம் செய்யாதவர்கள் மீதே விழும் என்று சொல்லப்படுகிறது. பாவம் செய்தவர்கள் உடலை இந்த அருவியின் நீர் தீண்டாது என்று சொல்லப்படுகிறது.

5.Reverse Waterfalls.

இந்த அருவி மும்பையில் உள்ள  Naneghat ல் உள்ளது. இங்குள்ள காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அருவியிலிருந்து வரும் தண்ணீர் தரையை தொடாமல் Reverse ஆகும். அதாவது தலைக்கீழாக செல்லும் அதிசயத்தைக் காணலாம்.

6. Devkund Waterfalls.

இந்த அருவி Bhira patnus என்னும் இடத்தில் அமைந்துள்ளது. புராணக் காலத்து கதைப்படி, இந்த அருவி தேவர்களுக்கு மிகவும் பிடித்த இடம் என்று சொல்லப்படுகிறது. இது ஒருநாள் பிக்னிக் சென்று வருவதற்கு ஏற்ற பிரபலமான இடமாகும். இதை Plunge Waterfall என்றும் கூறுவார்கள். நீச்சல் செய்வதற்கு ஏற்றது போல குளமாக நீர் அருவிக்கு அடியிலே உருவாகியிருக்கும். இந்த அருவி அடர்ந்த காடுகளுக்கு நடுவிலே அமைந்துள்ளது.

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

SCROLL FOR NEXT