எத்தியோப்பியாவின் Tigray மாகாணத்தின் Hawzen Woreda என்ற பகுதியில் உள்ள ஒரு மிகப்பெரிய மலையில் உள்ள ஒரு சர்ச் தான் Abuna Yemata Guh Church. இந்த மலை கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,580 மீட்டர் உயரம் கொண்டதாகும். அப்படியென்றால், இந்த சர்ச்சிற்கு மக்கள் செல்வார்களா?
பொதுவாக, மனிதர்கள் மதவாரியாகப் பிரிந்தாலுமே, கலை வாரியாகவும் ரசனை வாரியாகவும் ஒன்றிணைந்தவர்களே ஆவார்கள். அதற்கு ஒரு அற்புதமான உதாரணம், ஆலையங்கள். ஆம்! மசூதி, சர்ச், இந்து கோவில் ஆகியவை கட்டடக் கலையில் தனித்துவத்தைக் கொண்டிருந்தாலும், அழகில் ஒற்றுமை வாய்ந்ததாகவே உள்ளன. ஆலையங்களின் கலை நுணுக்கங்களைக் கண்டு வியந்துப் போகாதவர்கள் யாருமே இல்லை. இந்த மூன்று மதங்களின் ஆலையங்களுமே கட்டடக்கலைக்கும், பாரம்பரியத்திற்கும் மிகப்பெரிய தூண்களாகும்.
அந்தவகையில் மலையின் உச்சியில் இருக்கும் ஒரு சர்ச் பற்றிதான் இங்கு காணவுள்ளோம்.
ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், 9 முக்கிய துறவிகளில் ஒருவரான Abuna Yemata Guh என்பவர், பல மலைகளையும் ஆறுகளையும் தாண்டி வட எத்தியோப்பியாவிற்கு வந்து பல மடங்களை நிறுவினார். அவரின் பெயரையே அந்த சர்ச்சிற்கு வைத்தனர். Hawzen என்ற கிராமத்திலிருந்து சுமார் 20கிமீ தொலைவில் உள்ள இந்த மலைக்கு பெயர் Gheralta Mountain. பாறைகளைக் கொண்டு இயற்கையால் உருவாக்கப்பட்ட இந்த மலையில் உள்ள சர்ச்சின் தனித்துவமான கலைநயத்திற்கும் ஓவியத்திற்குமே அதிக அளவு ரசிகர்கள் உள்ளனர்.
இந்த சர்ச் பாறைகளைப் பயன்படுத்தி கட்டப்பட்டதாகும். அந்த நாட்டிலேயே இதுதான் பிரம்மிக்கவைக்கக்கூடிய ஒரு ஆலையமாகும். இந்த சர்ச்சைப் பார்ப்பதற்காகவே மக்கள் பல சவால்களைக் கடந்து, மலை மீது ஏறி செல்வார்கள். கரடுமுரடான மலையாக விளங்கும் இதன்மீது ஏறுவதற்கு, உடற்தகுதி மிகவும் அவசியமாகும்.
இந்த சர்ச்சில், பைபிலின் சில காட்சிகள், ஏசுவின் வாழ்க்கைக் காட்சிகள் ஆகியவை பல ஓவியங்களாகத் தீட்டப்பட்டிருக்கும். அந்த ஓவியங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கும் தனித்துவமான நிறங்களும், நுணுக்கங்களுமே அதைப் பார்க்கும் மக்களிடம் பேசுபொருளாக இருக்கின்றன. இந்த மலையில் ஏறுவதற்கு படிகட்டுகள் போல எந்த வித அடிப்படை வசதிகளுமே இல்லை. ஆனால், மலையில் ஏறுபவர்களுக்கு துணையாக சில வழிகாட்டுகள் கூடவே வருவார்கள்.
இந்த சர்ச் எத்தியோப்பியா மக்களுக்கு மட்டுமே அதிகம் அறியப்படும் ஒன்றாகும். இன்றுவரை உலகளவில் இதன் தனித்துவமும் சிறப்பும் பிரபலமாகவில்லை என்றே கூற வேண்டும்.
என்னதான் இந்த சர்ச் மலையின் மேல் இருந்தாலும், அன்றாடம் இங்கு வழிபாடுகள் காலம்காலமாக நடந்து வருகின்றன. சர்ச்-ஐ பராமரிப்பதற்கும், அங்கு சடங்குகள், சம்பிரதாயங்கள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்த சர்ச்சின் ஓவியக்கலையையும், அழகையும் பார்ப்பதற்கே ஏராளமான சுற்றுலா பயணிகளும், மலை ஏறுபவர்களும் அங்கு விரும்பி செல்கின்றனர்.