தரங்கம்பாடி கடற்கரை என்பது தங்க மணல் மற்றும் நீலமான நீரை பெருமைப்படுத்தும் அழகிய கடற்கரையுடன் இயற்கையான அழகை முழுமையாக காட்சிப்படுத்துகிறது. தனிமை மற்றும் அமைதியை விரும்புவோருக்கு மிக அருமையான புகலிடமாகும். சூரிய அஸ்தமனங்கள் மதிமயக்க கூடிய அளவு அழகாக இருக்கும்.
தரங்கம்பாடி கடற்கரை தமிழ்நாட்டின் தென்கிழக்கே அமைந்துள்ளது. இந்த கடற்கரை வியக்கத்தக்க வகையில் சுற்றுலா பயணிகளால் சேதப்படுத்தப்படாமல் அதன் இயற்கை அழகை முழு அளவில் தக்க வைத்துக் கொண்டுள்ளதுதான் இந்த கடற்கரையின் சிறப்பு. இயற்கை அழகுடன் டேனிஷ் மக்களால் கட்டப்பட்ட பல கலைப் பொருட்களும் இங்குள்ள அருங்காட்சியகத்தில் உள்ளது. முக்கிய சுற்றுலா தலமாக தரங்கம்பாடி இருக்கிறது. சில கலைப் பொருட்கள் டேனிஷ் கோட்டை மற்றும் டேனிஷ் அருங்காட்சியத்தில் இருக்கிறது. தரங்கம்பாடியில் உள்ள கிராமம் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திறன் கொண்டது. இந்த கிராமத்திற்கு வரும் ஒவ்வொரு சுற்றுலா பயணிகளும் இந்த கடற்கரையின் அழகு வியக்க வைக்கிறது.
டேனிஷ்கோட்டை என அழைக்கப்படும் டேனியகோட்டை தரங்கம்பாடியில் டென்மார்க் காரர்களால் கட்டப்பட்ட கோட்டையாகும். இது தமிழக தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த அருங்காட்சியத்தில் டேனிஷ் கோட்டை சார்ந்த பொருட்களும் டேனிஷ்காசுகள் டேனிஷ் தமிழ் பத்திரங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மாசிலாமணி நாதர்கோவில்
700 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நினைவு சின்னமான மாசிலாமணி நாதர் கோவிலுக்கு செல்லலாம். 1306ஆம் ஆண்டில் பாண்டிய மன்னர் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனால் கட்டப்பட்ட இந்த கோவில் அந்த காலத்தில் இந்தியாவிற்கு அடிக்கடி வந்து சின்ன வணிகர்கள் மற்றும் பார்வையாளர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட தமிழ் மற்றும் சீன கட்டிடக்கலையின் தனித்துவமான கலவையை கொண்டுள்ளது. நாகரிகங்களுக்கு இடையேயான கலாச்சார பரிமாற்றத்திற்கு சான்றாக இந்த கடற்கரை கோவில் உள்ளது.
மயிலாடுதுறையில் உள்ள தரங்கம்பாடி கடற்கரை தஞ்சாவூரில் இருந்து 90 கிலோ மீட்டரும் நாகப்பட்டினத்தில் இருந்து 85 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.