Let's see about 4 different mountains in the world! Image Credits: Outdoors Wire
பயணம்

உலகில் இருக்கும் 4 வித்தியாசமான மலைகளைப் பற்றி பார்க்கலாம் வாங்க!

நான்சி மலர்

லைகள் என்றாலே இமயமலை, எவரஸ்ட் போன்ற பிரபலமான மலைகள்தான் நம் நினைவிற்கு வரும். ஆனால், இந்த உலகில் பார்ப்பதற்கு வித்தியாசமாகவும், அழகாகவும் இருக்கக்கூடிய பல மலைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1.Devil's Tower.

அமெரிக்காவில் இருக்கும் டெவில்ஸ் டவர் மிகவும் வித்தியாசமான அமைப்பில் 5114 அடி உயரத்தில் இருக்கும் இந்த மலை முழுக்க முழுக்க கருப்பு பாறையால் ஆனது. இந்த மலை மிகவும் செங்குத்தாக இருப்பதால், இந்த மலை மீது ஏறுவது மிகவும் கஷ்டமாக இருக்கும். இந்த மலை அமெரிக்காவின் தேசிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Bungle Bungle Range

2.Bungle Bungle Range.

ஆஸ்திரேலியாவில் உள்ள Bungle Bungle மலை சுண்ணாம்பு பாறைகளால் ஆனதாகும். இது பார்ப்பதற்கு லேயர் லேயராக அரித்து இருப்பதுபோல மிகவும் அழகாக இருக்கும். பல மில்லியன் வருடங்களாக பெய்யும் மழையால் இந்த பாறைகளெல்லாம் அரித்து இதுபோன்று பல நிறங்களில் உருவாகியாருக்கிறது. ஆயிரக்கணக்கில் பெரிய ஆரஞ்ச் மற்றும் கருப்பு கோடுகளால் ஆன கோன் போன்ற அமைப்பிலான மலைகளை பார்க்க தேன்கூடு போல இருக்கும். இந்த மலைகள் 360 மில்லியன் வருட பழமை வாய்ந்ததாகும். இந்த மலை உடையக்கூடிய தன்மைக்கொண்டதால் மலையேற்றம் தடை செய்யப்பட்டுள்ளது.

Three Whale Rock

3. Three Whale Rock.

தாய்லாந்து காடுகளுக்கு நடுவிலே உள்ள இந்த Three Whale Rock இதன் பெயருக்கு ஏற்றவாறு 3 திமிங்கலங்கள் படுத்திருப்பது போலத்தான் இருக்கும். இந்த மலை தந்தை, தாய், குழந்தை திமிங்கலம் இருப்பதுபோல அழகாகக் காட்சி தருகிறது. இந்த இடம் சாகசம் மிகுந்ததாக இருப்பதால் இங்கே நிறைய சுற்றுலாப்பயணிகள் வருகை தருகிறார்கள். இந்த மலை 75 மில்லியன் வருடம் பழமையானது என்று சொல்லப்படுகிறது.

Mount Fuji

4.Mount Fuji.

ஜப்பானில் உள்ள உயரமான மற்றும் புனிதமான மலையாக Mount Fuji கருதப்படுகிறது. இந்த மலை மொத்தம் 3776 மீட்டர் உயரம் கொண்டது. 'Fuchi' என்னும் நெருப்பிற்கான புத்தக்கடவுளின் பெயரை இம்மலைக்கு வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வேறு உலகத்திற்கு செல்வதற்கான போர்ட்டல் இந்த மலையில் இருக்கிறது என்பது ஜப்பானில் உள்ள புத்த துறவிகளின் நம்பிக்கையாக உள்ளது. இந்த 4 மலையில் உங்களை கவர்ந்தது எதுவென்று சொல்லுங்க பார்ப்போம்.

சிறுகதை: களிமண் பிள்யைாரும் மூணு யூனிட் இரத்தமும்!

சருமத்தில் இந்த அறிகுறிகளா? ஜாக்கிரதை! 

சோஹா அலிகான் முகப் பளபளப்பிற்கு இந்த மூன்று உணவுகள்தான் காரணம்!

மதங்க முனிவர் காட்சி கொடுத்த திருநாங்கூர் மாதங்கீஸ்வரர்!

சிறுகதை: குடிகாரர்களின் குடும்பம்!

SCROLL FOR NEXT