3 Beautiful Castle In The World Image Credits: Japan Guide
பயணம்

உலகின் பிரம்மாண்டமான 3 அழகிய கோட்டைகளைப் பற்றிக் காண்போம்!

நான்சி மலர்

ந்த உலகில் எண்ணற்ற பிரம்மாண்டமான கோட்டைகள் இருக்கின்றன. அவை அனைத்தும் அதன் ஆடம்பரத்திற்கும், அழகிற்கும் பெயர் போனவையாகும். அத்தகைய தனித்துவத்துடன் கட்டப்பட்ட 3 கோட்டைகளைப் பற்றியும் அதன் அழகைப்பற்றியும் விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1.Himeji Castle.

ஜப்பானில் உள்ள ஹிமேஜி கேஸ்டில் சிறிய மலைக்குன்றிற்கு மேல் அமைந்துள்ளது. இந்த கோட்டை ஜப்பான் கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது. இந்தக் கோட்டை வெள்ளை நிறத்தில் மிகவும் பிரகாசமாக பார்ப்பதற்கு ரொம்பவே அழகாக இருக்குமாம். 83 அறைகளைக் கொண்ட இந்தக் கோட்டை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, நவீன பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. ஹிமேஜி கேஸ்டில்தான் ஜப்பானிலேயே பெரிய கோட்டை மற்றும் அதிக மக்கள் வந்து சென்ற கோட்டை என்ற சிறப்பை பெறுகிறது. 1993 ஆம் ஆண்டு உலக பாரம்பரியக் களங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Neuschwanstein Castle.

2. Neuschwanstein Castle.

ஜெர்மனியில் 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டை பார்ப்பதற்கு ஃபேர்ரி டேல்லில் வரும் கோட்டைகள் போலவே அழகாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கும். அதுவும் இந்த கோட்டையை ஒவ்வொரு சீசனிலும் பார்க்கும்போது வெவ்வேறு கோட்டைகள் போல மிகவும் அழகாகத் தெரியுமாம். பவேரியாவில் உள்ள இந்த கோட்டையை அரசன் லூட்விக் வின் ஆணையின் பெயரில் கட்டப்பட்டது. இந்த கோட்டையை உதாரணமாக வைத்துதான் டிஸ்னியின் சின்ட்ரல்லாக் கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.

Mount Saint Michael.

3.Mount Saint Michael.

பிரான்ஸில் இருக்கும் Mount Saint Michael கோட்டை Normandy என்னும் பகுதியில் உள்ள கடலுக்கு நடுவிலே உள்ள ஒரு சின்ன தீவில்தான் இந்த கோட்டை அமைந்துள்ளது. மிகவும் அழகாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கும் இந்த கோட்டையில் வெறும் 40 பேர்தான் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இக்கோட்டையை ஒவ்வொரு வருடமும் 3 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் பார்வையிட்டு செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 3 பிரம்மாண்ட கோட்டைகளில் உங்களை கவர்ந்தது எதுவென்று சொல்லுங்க பார்ப்போம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT