Chakrata 
பயணம்

அமைதியான சொர்க்கம் சக்ரதா (Chakrata) மலைவாசஸ்தலம்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

க்ரதா உத்தரகண்ட் மாநிலத்தில் டேராடூனிலிருந்து 98 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய மலை நகரமாகும். இது 6948 அடி உயரத்தில் அமைந்துள்ள ஊசியிலைக் காடுகள், மலையேற்றங்கள், குகைகள் மற்றும் பழமையான கோவில்களுக்கு பெயர் பெற்ற இடமாகும். சக்ரதா கடல் மட்டத்திலிருந்து 2118 மீட்டர் உயரத்தில் உள்ள சிறந்த மலைவாசஸ்தலமாகும். அழகான மலைப்பாதைகள் வழியே செல்வதே ஒரு சுகானுபவம்தான்.

இதன் தட்பவெப்பம் எப்பொழுதும் இதமாக இருப்பதால் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக உள்ளது. ஊசியிலைக் காடுகள், அழகான நீர்வீழ்ச்சிகள் மற்றும் இமயமலையின் சிறந்த காட்சிகளை கண்டுகளிக்கலாம். மலையேற்றம் இங்கு பிரபலமான ஒன்றாகும். அழகான நீர்வீழ்ச்சி களுடன் அமைதியான சொர்க்கமாக, மக்கள் விரும்பிச் செல்லும் இடமாக அமைந்துள்ளது. 

அழகான நீர்வீழ்ச்சிகள் குறிப்பாக டைகர் நீர்வீழ்ச்சி அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளது. கரம்பா சிகரம் இந்த மலை நகரத்தின் மிக உயரமான சிகரமாகும். சக்ரதா காடுகளில் சிறுத்தைகள், புள்ளிமான்கள், காட்டுக்கோழிகள் என பலவிதமான வனவிலங்குகள் உள்ளன.

Chakrata

ஜான்சாரி பழங்குடியினரின் சிறிய கிராமமான ஜான்சன் பவர் என்று அழைக்கப்படும் சக்ரதா கிழக்கிந்திய கம்பெனியால் உருவாக்கப்பட்டது. இங்கு ஒரு ராணுவ கன்டோன்மென்ட் உள்ளது.

இந்த சக்ரதாவிற்கு அருகிலுள்ள பார்க்க வேண்டிய இடங்கள். 

டைகர் நீர்வீழ்ச்சி:

312 அடி உயரத்தில் உள்ள உயரமான நீர்வீழ்ச்சியாகும். இது அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட நீர்வீழ்ச்சியாகும். இங்கு தேவதாரு மரங்கள் அடர்ந்து காணப்படுகிறது.

மக்களின் ஆனந்த கொண்டாட்டம்...

தியோபன் (Deoban):

2200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள தியோபன் இமயமலையின் பரந்த காட்சிகளை காண முடிகிறது.அடர்ந்த தேவதாரு மரங்களால் சூழப்பட்ட காட்டில் ஹிமாலய மரங்கொத்திகள், வெள்ளை காலர் கரும்புலிகள் மற்றும் பலவகையான பறவைகள் கொண்டது. இங்கிருந்து 15 நிமிட நடைபயணத்தில் வியாசர் மகாபாரதத்தை எழுதிய வியாச சிகரத்திற்கு செல்லலாம்.

புத்தர் குகைகள் (Budher Caves):

சக்ரதாவிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் மியோலா குகைகள் என அழைக்கப்படும் புத்தர் குகைகள் அமைந்துள்ளது. இந்த குகையை கண்டுபிடித்த ஜெர்மனியரின் நினைவாக மியோலா என்று அழைக்கப்படுகிறது. இந்த குகை சுமார் 150 மீட்டர் நீளமுடையது. சுண்ணாம்பு பாறைகளால் உருவானது.

சில்மிரி கழுத்து (Chilmiri Neck):

சக்ரதா சந்தையிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிகரப் புள்ளிகளில் ஒன்றான சில்மிரி கன்டோன்மென்ட் அமைந்துள்ள இடமாகும். பார்வையிடுவதற்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. இங்கிருந்து ரோகினி சிகரம், பாண்டர் பூஞ்ச், ஸ்வர்கா சிகரம் ஆகியவற்றை காணலாம். சில்மிரி கழுத்தை சுற்றியுள்ள காடுகள் புலம் பெயர்ந்த பறவைகளின் தாயகமாக உள்ளது. இங்கு வண்ணமயமான கண்ணைக் கவரும் வண்ணத்துப்பூச்சிகள் நிறைய காணப்படுகின்றன.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT