இடுக்கி ... 
பயணம்

அழகான இல்லிக்கல் கல்லுவிற்கு ஒரு உல்லாசப் பயணம் போவோமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

டவுளின் தேசமான கேரளாவின் கோட்டையம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் நிறைய சுற்றுலா தலங்கள் உள்ளது. கேரளா என்றாலே மலைகள் சூழ்ந்த மாநிலம்தான். கடற்கரைகளும், இயற்கை காட்சிகளும் அற்புதமாக இருக்கும். சென்னையிலருந்து தேனி சென்று அங்கிருந்து குமுளி வழியாக வாகமன் போகலாம். வாகமனில் ஒரு நாளும், இல்லுக்கல் கல்லூவில் ஒரு நாளும் என ஆனந்தமாக ஏராளமான மலைகளையும், தவழும் மேகக் கூட்டங்களையும், இயற்கை காட்சிகளையும் கண்டு களிக்கலாம்.

இல்லிக்கல் கல்லு

இல்லிக்கல் கல்லு

து கோட்டயத்தில் இருந்து 57 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3400 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது ஒரு முக்கியமான சுற்றுலா தலமாகும்.

இந்த இடம் ஒரு பாறை ஆகும். இந்தப் பாறையின் ஒரு பாதி மட்டுமே எஞ்சியுள்ளது. பாறையின் மற்ற பாதி விழுந்துவிட்டது. இதன் சிகரத்தை அடைய ஒரு கிலோ மீட்டர் மலை ஏற வேண்டும். இந்த மலை உச்சியில் இருந்து ஏராளமான ஓடைகள் உருவாகி கீழே பாய்ந்து மீனாசிலாறை உருவாக்குகிறது. சுற்றுலா பயணிகள் ட்ரெக்கிங் செல்ல மிகவும் விரும்பும் இடம் இது.

இல்லிக்கல் மலையில் மூன்று மலைகள் உள்ளன. ஒவ்வொன்றும் கடல் மட்டத்திலிருந்து 3400 அடி உயரத்தில் உள்ளது. ஒரு மலை காளான் தோற்றத்தில் இருக்கும். இதனை குடகல்லு (குடை வடிவ பாறை) என்றும், இரண்டாவது மலை பக்கவாட்டுகளில் சற்று கூன் போட்டிருக்கும். இந்தப் பாறையை கூனு கல்லு (கூனன்கல்) என்றும் அழைக்கிறார்கள். நீலக்கொடுவிலி என்ற மூலிகை இங்கு வளர்வதாகவும் இது அமானுஷ்ய சக்தியை பெற்றது என்றும் இதை வைத்திருப்பவர்களுக்கு செல்வம் பெருகும், அறுவடை செழிக்கும் என்றும் இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.இரண்டு மலைகளின் குறுக்கே அரை அடி அகலத்தில் ஒரு பாலம் உள்ளது. இது நரக பாலம் எனவும், இந்த மலையின் உச்சியில் இருந்து பார்த்தால் அரபிக் கடல் மிக அழகாக கண்களுக்கு தெரியும். இங்கிருந்து சூரிய அஸ்தமன காட்சி மிக அற்புதமாக தெரியும் என்பதால் மக்கள் இங்கு கூடுகிறார்கள். இங்கு ஏராளமான மலைகளும், ஆழமான பள்ளத்தாக்குகளும், மேகங்களும் கண்களுக்கு விருந்தாக உள்ளது.

கட்டிகாயம் அருவி

கட்டிகாயம் அருவி

து இல்லிக்கல் கல்லுவிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த அருவி மிகவும் அழகாக கண்ணுக்கு விருந்தாக உள்ளது. இங்கு நடக்கும் போது வழுக்கும் பாறைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

எலவீழபூஞ்சிரா

எலவீழபூஞ்சிரா

ல்லிக்கல் கல்லுவிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எலவீழபூஞ்சிரா என்றால் 'இலைகள் விழாத பள்ளத்தாக்கு' என்று பொருள். இதன் மிக உயர்ந்த பகுதியானது 'கண்ணாடிப் பாறை' என அழைக்கப் படுகிறது. இந்த இடத்தில் இருந்து சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதற்கு அருகிலேயே பழக்கனம் என்ற இடத்தில் தொடுபுழா ஆறு மற்றும் கழுகன்குலிமலை அருவி உள்ளது.

வாகமன்

வாகமன்

டுக்கி மாவட்டத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களான மூணாறு, தேக்கடி, வாகமன், இடுக்கி அணை போன்றவை உள்ளது. வாகமன் என்பதும் இப்பகுதிக்கு அருகில் உள்ள மற்றொரு சிறந்த சுற்றுலா தலமாகும். இது கேரளத்தின் ஒரு மலைவாழ் இடமாகும். நேஷனல் ஜியோகிராபிக் ட்ராவலர் வாகமனை இந்தியாவில் பார்க்க வேண்டிய மிகவும் கவர்ச்சிகரமான 50 இடங்களில் ஒன்று என்று பட்டியலிட்டுள்ளது.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT