tourism articles 
பயணம்

பார்க்கப் பார்க்க பரவசப்பட வைக்கும் பாலி தீவுகள்!

ம.வசந்தி

ர்வதேச சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாக எரிமலைகளும், அடர்வனங்களும், பவளப்பாறைகளும் கடற்கரையும் வயல்வெளிகளையும் ஒருங்கேப் பெற்ற இந்தோனேசியாவின் பாலி தீவுகளை சுற்றி வரலாம் வாருங்கள்.

உலகில் உள்ள செல்வந்தர்கள் பலரும் பாலியிலேயே சொத்து வாங்கி ஆடம்பரமாக தங்க நினைப்பதற்கு சொர்க்கபுரியாக இருப்பதுதான் முதல் காரணமாக உள்ளது 

எரிமலையின் சிலிர்ப்பு!

பாலியில் உள்ள மௌன்ட் படுர், மௌன்ட் அகுங் என்ற உயிருள்ள எரிமலைகளில் மலையேற்றம் ஏறுவதற்கு ஐந்து முதல் எட்டு மணி நேரம் ஆவதை தாண்டி சிலிர்க்க வைக்கும் திரில்லிங்கான அனுபவத்தை பெறலாம்.

பறவை ஆர்வலர்களின் கனவு!

பாலி தீவில் மட்டும் 280 வகையான பறவைகள் இருப்பதோடு,அழியும் நிலையில் இருக்கும் 100க்கும் குறைவான பாலி ஸ்டார்லிங் பறவைகள் , பறவை ஆர்வலர்களின் ஆர்வத்தை அதிகரிக்கின்றன.

பாரம்பரியமிக்க பாலி

பாலியின் வயல்வெளிகளில் நீர் மேலாண்மைக்காக 9-ம் நூற்றாண்டு முதல் Subak system (சுபக் அமைப்பு) பின்பற்றி வரும், இந்த பகுதிகளை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அங்கீகரித்துள்ளது. மிகச்சிறந்த சுற்றுலா இடமாகும் இது.

உலகின் மிக விலையுயர்ந்த காபி

Serombotan (சாலட் வகை), Sate Lilit (இறைச்சி உணவு), Jaja Laklak (ஒருவகை பான்கேக்), Balinese Arak (ஒருவகை மது) எனப் பலவையான பாரம்பரிய உணவுகளுக்கு தாய் வீடு பாலியில், அதிகம் பிரபலமானது லுவாக் காபி. இதன் ஒரு கப் விலை 40 டாலர் வரை இருக்குமாம். 

ஸ்கூபா டைவிங்!

பாலியில் ஸ்கூபா டைவிங் செய்ய தெளிவான நீர் இருக்கும் அழகிய கடற்கரைகள் இருக்கின்றன. ஸ்கூபா டைவிங் செய்து பவளப்பாறைகளையும் கடல் வாழ் உயிரினங்களையும் ரசிக்கலாம். ஸ்கூபா டைவிங் செய்ய 60 - 100 டாலர்கள் செலவாகலாம்.

tourism articles

குறைந்த செலவில் சுற்றிவரலாம்!

சர்வதேச சுற்றுலா செல்வதற்கு மலிவான இடங்களில் பாலியும் ஒன்று. ஏனென்றால் இங்கு குறைந்த செலவில் தங்குமிடங்கள் உள்ளூர் உணவுகள் குறைவாக இருப்பதால் திட்டமிட்டு செலவை குறைக்கலாம்.

ஆன்மிக பாலி!

இஸ்லாமிய நாடான இந்தோனேஷியாவில் பாலி மக்கள்  துவக்கத்தில் முன்னோர்களை வழிபடக்கூடியவர்களாக இருந்தார்கள். இந்து மதத்தின் வருகைக்குப் பின் கோவில்களில் வழிபாடு செய்யத் துவங்கியதால் இப்பொழுதும் ஊர்க்கோவில்களில் தெய்வங்களுக்கான சிலைகள் இல்லை."

மிகவும் தனித்துவமான கோவில்களை நாம் பாலியில் காணமுடியும். கோயில்களின் கட்டிடக்கலை அழகை நாள்கணக்கில் அமர்ந்து ரசிக்கலாம். 

பாலி கோயில்களின் சிறப்பு என்னவென்றால், மூடிய அறையில் இல்லாமல் பெரும் சுவர்களுக்கு மத்தியில் வெட்டவெளியில் வழிபாடு செய்யும் வகையில் அமைந்திருக்கும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இடங்கள் இருப்பதால் பாலிதீவுகள் சுற்றுலாப்பயணிகளை கவர்வதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

நீண்ட ஆயுள் பெற விரும்புவோர் கவனிக்கவேண்டிய 6 விஷயங்கள்!

அளவில் சின்னது, எடையில் பெரியது… அது என்னது? 

பேருதான் மூக்குச்சளி… ஆனால், ஆரோக்கியம் அப்பப்பா! 

முதல் நாள் - மங்களம் அருள்வாள் மஹேஸ்வரி!

AK-47 துப்பாக்கியின் வரலாறு மற்றும் பயன்பாடுகள்!

SCROLL FOR NEXT