Most expensive passport 
பயணம்

உலகிலேயே விலையுயர்ந்த பாஸ்போர்ட் இதுதான்! இதன் விலை எவ்வளவு தெரியுமா?

மணிமேகலை பெரியசாமி

பாஸ்போர்ட் என்பது உலகத்தைச் சுற்றி வர உதவும் ஒரு முக்கியமான பயண ஆவணமாகும். ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக செலுத்தி, விண்ணப்பித்து இதனைப் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்தப் பாஸ்போர்ட்டைப் பெறுவதற்கான செலவு ஒவ்வொரு நாடுகளைப் பொறுத்து மாறுபடலாம்.

அந்த வகையில், உலகிலேயே விலையுயர்ந்த பாஸ்போர்ட் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில், ஆஸ்திரேலியாவின் Compare the Market நிறுவனம், உலகில் உள்ள பாஸ்போர்ட்களின் விலை பற்றிய விவரங்களை தரவரிசைப்படுத்தியுள்ளது. அதன்படி, பாஸ்போர்ட் பெறுவதற்கான செலவு, உலகளவில் ரூ.1400 முதல் ரூ.19000 வரை ஒவ்வொரு நாட்டைப் பொறுத்து மாறுபடுகிறது.

உலகிலேயே விலையுயர்ந்த பாஸ்போர்ட்:

உலகில் விலையுயர்ந்த பாஸ்போர்ட் வட அமெரிக்காவில் உள்ள மெக்ஸிகோ நாட்டில் கிடைக்கும் பாஸ்போர்ட் ஆகும். இந்தப் பாஸ்போர்ட்டைப் பெறுவதற்கு 231.05 அமெரிக்க டாலர் செலவாகுமாம். இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.19521 செலவாகும். இந்த மெக்ஸிகோ பாஸ்போர்ட் 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

இதற்கடுத்தப்படியாக, ஆஸ்திரேலியாவின் 10 ஆண்டு கால பாஸ்போர்ட் இரண்டாவது இடத்தையும், அமெரிக்காவின் 10 ஆண்டுகால பாஸ்பேர்ட் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

உலகிலேயே விலை மலிவான பாஸ்போர்ட்:

உலகின் மிக மலிவான பாஸ்போர்ட்டை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கொண்டுள்ளது. இங்கு, பாஸ்போர்ட் பெறுவதற்கு வெறும் ரூ.1400 மட்டுமே செலவாகிறதாம்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது மலிவான பாஸ்போர்ட் இந்தியாவில் கிடைக்கிறது. 10 வருடம் செல்லுபடியாகும் இந்திய பாஸ்போர்ட் பெற, ஆகும் செலவு தோராயமாக ரூ.1525 ஆக உள்ளது.

அதுமட்டுமில்லாமல், 2024 ஆம் ஆண்டு ஹென்லி பவர்ஃபுல் பாஸ்போர்ட் இன்டெக்ஸில் (Henley Powerful Passport Index), அதன் மதிப்பின் அடிப்படையில் இந்திய பாஸ்போர்ட் 82-வது இடத்தில் உள்ளது. இதன் மூலம், விசா இல்லாமல் 58 நாடுகளுக்குப் பயணம் செய்யும் வாய்ப்பை இந்தியா வழங்குகிறது. இந்திய பாஸ்போர்ட் மலிவு விலையில் இருந்தாலும், விசா இல்லாமல் மற்ற நாடுகளுக்கான அணுகல் குறைவாகவே உள்ளது.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் பாஸ்போர்ட் பெறுவதற்கு அதிக விலை என்றாலும், மற்ற நாடுகளுக்கு விசா இல்லாமல் அதிக அணுகலை இந்நாடுகள் வழங்குகின்றன.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT