சாலை விபத்துகள் நம் வாழ்வில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லவை.
சில நேரங்களில் நாம் நம்மைப் பற்றி மிக அதிகமாக கற்பனை செய்து கொள்கிறோம். நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்துக் கொண்டு சில முடிவுகளை எடுத்து விடுகிறோம். அதன் விளைவுகளில் ஒன்று தான் விபத்துகளில் மாட்டிக் கொள்ள நேர்வதும். ஆனால், இதன் விளைவுகள் வெளிப்படையானவை, காலத்துக்கும் மாறாத வடுவை ஏற்படுத்தக் கூடியவையும் கூட, எனவே நாம் இதைப் பற்றி தீவிரமாக யோசித்துத் தான் ஆக வேண்டும்.
உங்களுக்கு நீங்கள் கையாளும் வாகனங்களைப் பற்றி மிக நன்றாகத் தெரியும். அதைப் பற்றிய மீச்சிறு புள்ளிவிவரங்களைக் கூட விரல் நுனியில் வைத்திருக்கலாம். வாகனம் ஓட்டுவதைப்பற்றிய பயிற்சி வகுப்புகளுக்குச் சென்று தகுதி உள்ளவர் என்று தேர்வாகியும் கூட இருப்பீர்கள், அதனால் நம்மால் வாகனம் ஓட்ட முடியும் என முடிவெடுத்து நீங்கள் உங்களுக்குத் தெரிந்த எந்த ஒரு வாகனத்தையும் ஓட்டுவதற்கு எந்த நிமிடமும் தயாராக இருப்பீர்கள்.
ஆனால், ஒரு நிமிடம் நின்று இதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா என்று யோசியுங்களேன்.
டீன் ஏஜ் டிரைவர்கள் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு மிக அதிகம் என்று ஒரு பொதுக்கூற்று உலவுகிறதே! அதைப்பற்றி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நீங்கள் உங்கள் உயிர் மீதும் , சாலையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இதர சக மனிதர்கள் மீது கொஞ்சமே கொஞ்சம் அக்கறை கொண்டவர்கள் எனில், கீழ்க்காணும் 10 முக்கியமான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடிக்க முடிகிறதா என்று யோசியுங்களென்.
1. வாகனம் ஓட்டுவது பற்றிய சரியான அணுகுமுறையை வளர்த்துக் கொள்ளுங்கள்.
பல டீன் ஏஜ் வாகன விபத்துக்கள் மனப்பான்மை மற்றும் முதிர்ச்சியின்மையின் விளைவாகவே நேர்கின்றன என்கிறார்கள். ஒரு வாகனத்தை இயக்க திறமை அல்லது அறிவு மட்டுமே போதாது. பல நேரங்களில் வாகனம் ஓட்டுவது பற்றிய பொறுப்பான அணுகுமுறையை கடைப்பிடிக்க உங்களை நீங்கள் அர்ப்பணத்தே ஆக வேண்டியதாக இருக்கும். எதிர்காலத்தில் நீங்கள் ஒரு தேர்ந்த டிரைவர் எனப்பெயரெடுத்த பின்னர் இரவு நேரங்களில் எல்லோரும் வாகனத்தில் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கையில் வாகன ஓட்டியின் இடத்தில் நாம் இயங்க
வேண்டியிருந்தால் அப்போது இந்த பொறுப்புணர்ச்சி உங்களுக்கு மிகத்தேவையாக இருக்கும். நீங்கள் அதி வேகமாக நகரக் கூடிய திறன் வாய்ந்த உலோகத்தை கட்டுப்படுத்துகிறீர்கள், ஆகவே அதை பொறுப்புடன் ஓட்டுவதற்கு முதலில் உங்களுக்காகவும், உங்களை நம்பி வாகனத்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் நீங்கள் கடமைப்பட்டிருக்கிறீர்கள். ஆகவே முதலில் வாகனம் ஓட்டுவது குறித்த சரியான அணுகுமுறை மிக அவசியம் என்பதை மதலில் உணர்ந்த பின்னரே ஸ்டியரிங்கில் கை வைக்கத் துணியுங்கள்.
2.முடிந்தவரை கண்காணிக்கப்பட்ட வாகனம் ஓட்ட பயிற்சி செய்தல்!
உங்கள் ஓட்டுநர் பயிற்சியில் உங்கள் பெற்றோர்கள் பங்கு வகிக்க வேண்டும். வாகனப் பயிற்சிக்கு அவர்களுடன் ஒரு உறுதியான அட்டவணையை உருவாக்கி நீங்கள் தன்னம்பிக்கையுடன் வாகனம் ஓட்டும் நாள் வரும் வரை விடாது தொடருங்கள். எதுவரை என்றால் வாகன ஓட்டிக்கான உரிமம் பெறச் செல்லும் வரை அதைத் தொடரவும். பல மாநிலங்கள் இப்போது வாகன உரிமச் சட்டங்களை புதுப்பித்து வெளியிட்டுள்ளன. உங்கள் மாநிலத்தில் உள்ள சட்டங்களைப் பற்றி அறிய, நெடுஞ்சாலை பாதுகாப்புக்கான காப்பீட்டு நிறுவனத்தைப் பார்வையிடவும்.
3.பாதுகாப்பு பெல்ட் அணியும் பழக்கம்!
கார் ஓட்டுகிறீர்கள் எனில் எப்போதும் உங்கள் பாதுகாப்புக்கான சீட் பெல்ட்டை அணியுங்கள். டிரைவராக இருந்தாலும் சரி, பயணியாக இருந்தாலும் சரி, காரில் செல்லும்போதெல்லாம் பாதுகாப்பு பெல்ட் அணிவதைப் பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள், இதில் விதிவிலக்கு இல்லை.
4. சட்டவிரோதமான போதைப்பொருள் உட்கொள்ளலைத் தவிர்த்தல்!
18 வயதுக்கு உட்பட்டவர்கள் மது அருந்துவது மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவது சட்டவிரோதமானது. நீங்கள் போதையேற்றக்கூடிய ஒரே ஒரு பானத்தை மட்டுமே உட்கொண்டிருந்தாலும் அல்லது கூட்டாக புகைப்பிடித்திருந்தாலும், உங்கள் மூளையில் ஒரு இரசாயன விளைவை ஏற்படுத்தியே தீரும், அது நிச்சயம் உங்கள் டிரைவிங்கை பாதிக்கலாம். மது, மரிஜுவானா அல்லது பிற போதைப்பொருட்களின் செல்வாக்கின் கீழ் வாகனம் ஓட்டுவது உங்கள் வாகனம் ஓட்டும் உரிமத்தையோ அல்லது உங்கள் உயிரையோ கூட இழக்கச் செய்து விடும்.
5. பயணிகளின் எண்ணிக்கை வரம்பை கட்டுக்குள் வைத்தல்!
நீங்கள் கார், வேன் அல்லது பேருந்து ஓட்டுகிறீர்கள் எனில் உங்கள் பயணிகள் எண்ணிக்கையை நிச்சயம் வரம்பிற்குள் வைக்கப் பழக வேண்டும். வரம்பு தாண்டிய ஒவ்வொரு கூடுதல் பயணிக்கும் மரண விபத்தின் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே நீங்கள் ஒரு புதிய ஓட்டுநராக இருக்கும்போது, உங்கள் பயணிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது நல்லது.
6. முடிந்தவரையிலும் இரவு நேரப் பயணத்தைத் தவிர்த்தல்!
இரவு நேரங்களில் வாகனத்தை ஓட்டுவதைக் கட்டுப்படுத்துங்கள். ஒவ்வொரு மைலுக்கும் பகலை விட இரவில் விபத்து ஏற்படும் அபாயம் மூன்று மடங்கு அதிகம். பகலில் நீங்கள் பாதுகாப்பாக வாகனம் இயக்கப் பழகும் வரையிலும் இரவில் வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது நல்லது.
7.புதிதாக வாகனம் ஓட்டுபவர்களுக்கான வேக வரம்பு கட்டுப்பாடுகளைப் பழகிக் கொள்ளுதல்
நீங்கள் இப்போது தான் புதிதாக வாகனம் ஓட்டப் பழகியிருக்கிறீர்கள் என்றால் ஆரம்ப நாட்களில் வாகனத்தை மெதுவாகவும் பாதுகாப்பாகவும் இயக்கப் பழக வேண்டும். ஏனெனில் வேகமாக நகரும், அதீத போக்குவரத்து நெரிசல் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும், எனவே போதுமான ஓட்டுநர் அனுபவத்தைப் பெறும் வரை ஆளற்ற சாலையிலும் கூட வேகமாக வாகனத்தை இயக்குவதைத் தவிர்த்தே ஆக வேண்டும். இதில் தேர்ச்சி பெற்ற பின்னர், படிப்படியாக நெடுஞ்சாலைகளில் வாகனம் ஓட்டுதல், மற்றும் நகரங்களில் வாகனம் ஓட்டுதல் போன்ற கடினமான ஓட்டுநர் சூழ்நிலைகளை படிப்படியாக நாம் அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.
8. மோசமான வானிலையில் கண்காணிப்புடன் வாகனம் ஓட்டப் பழகுதல்!
மோசமான வானிலையின் போது ரயில்வே கிராஸிங்குகள் மற்றும் வறண்ட நடைபாதைகளில் நீங்கள் நம்பிக்கையுடன் வாகனம் ஓட்டத் தொடங்கினாலும், அப்படியான சூழல்களில் மேற்பார்வையின்றி வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பதே நல்லது.
9. டிரைவிங்கின் போது செல்ஃபோன்களைத் தவிர்த்தல்!
நீங்கள் ஓட்டுநராகச் செயல்படும் போது செல்போன்கள் அவசர தேவைக்காக மட்டுமே பயன்படுத்தப் பட வேண்டும். வாகனம் ஓட்டும் போது செல்போனில் பேசுவது என்பது மிக மோசமான பழக்கங்களில் ஒன்று. அவசரகால சூழ்நிலைகளுக்கு மட்டும் காரில் செல்போனை வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செல்போன் பயன்படுத்த வேண்டியிருந்தால், சாலையின் ஓரத்தில் பாதுகாப்பாக நிறுத்தி பார்க்கிங் பட்டனை அழுத்தி விட்டு அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை உறுதி செய்து கொண்டு பின்னர் அதைப் பயன்படுத்தலாம்.
10.பாதுகாப்பான வாகனத்தை தேர்ந்தெடுத்தல்!
எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. அது என்னவென்றால் பாதுகாப்பான வாகனத்தைத் தேர்ந்தெடுப்பது. நீங்கள் எந்த வாகனம் வாங்குவதாக இருந்தாலும் சரி முதலில் அதன் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஒன்றுக்குப் பலமுறை ஆலோசியுங்கள். அதிக பாதுகாப்பு மதிப்பீடுகளைக் கண்ட வாகனங்களைத் தேடி அதை வாங்க முயற்சியுங்கள்.விலை குறைவு அல்லது ஸ்டைலாக இருக்கிறது என்று நினைத்து
உங்கள் உயிருக்கு உத்தரவாதமளிக்காத ஏதோவொன்றைத் தேர்ந்தெடுத்து விடாதீர்கள்.
மேற்கண்ட இந்த 10 பாதுகாப்பு வழிமுறைகளைச் சரியாக கடைபிடிக்கத் தொடங்கினீர்கள் எனில் விபத்துகள் குறித்து நீங்கள் மிக எச்சரிக்கையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.