kerala tourist places... 
பயணம்

கேரளாவிற்கு சுற்றுலா போகிறீர்களா? இந்த இடங்களை மிஸ் பண்ணிடாதீங்க!

ஆர்.ஜெயலட்சுமி

நெல்லியம்பதி - nelliyampathy

nelliyampathy

பாலக்காட்டில் இருந்து கிட்டத்தட்ட 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இது ஒரு அழகான மலைவாசத்தலமாகும். ஆரஞ்சு சாகுபடி, தேயிலை தோட்டங்கள் மற்றும் விவசாயம் ஆகியவற்றால் மிக அழகாக உள்ளது. வெவ்வேறு உயரங்களை கொண்ட இந்த இடத்தின் மலைகள் உண்மையிலேயே கண்ணைக் கவரும் வியக்க வைக்கும் மலைவாசஸ்த்தலமாகும்.

பொன்முடி - Ponmudi Hills

Ponmudi Hills

சுமையான சூழல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மயக்கும் மலைகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் குறுகிய பாதைகள் கொண்ட அழகிய மலைவாசஸ்தலமாகும். பொன்முடி கோடையில் நீங்கள் செல்ல மிகவும் அற்புதமான இடம் ஆகும். சிறிய சிற்றோடைகள் கண்ணை கவரும் மலைப் பூக்கள் மற்றும் வண்ணமயமான வண்ணத்துப்பூச்சிகள் கொண்ட இந்த சுற்றுலாத்தலமானது மிக மிக ரசிக்கும் அற்புதமான இடமாக அமையும்.

இலவீழ பூஞ்சிரா - Ilaveezha Poonchira

Ilaveezha Poonchira

லவீழ பூஞ்சிரா என்பது கேரளாவின் கோட்டையம் மாவட்டத்தின் எல்லையில் பாலா தொடுபுழா நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பரந்து பிரிந்து இருக்கும் ஒரு அழகான பள்ளத்தாக்கு ஆகும். இது அழகிய சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. பல்வேறு உயரங்களைக் கொண்ட பல மலைகள் உள்ளன. சில மலைகள் கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் இருக்கிறது  இலவீழ பூஞ்சிரா கேரளாவில் இருக்கும் அருமையான அழகான பொக்கிஷமான மலைவாச ஸ்தலமாகும்.

ஆலப்புழா alappuzha

alappuzha

கேரளாவின் சிறந்த சுற்றுலா தலங்களில் அலெப்பி முதல் இடத்தில் உள்ளது இந்த நகரத்திற்கு கிழக்கின் வெனிஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. பாரம்பரிய கெட்டுவலத்தின்  மாதிரியான படகில் பயணித்து பார்க்கலாம் ஆலப்புழா கடற்கரையை அதன் 137 ஆண்டுகள் பழமையான தூண் மற்றும் 17ஆம் நூற்றாண்டின் போர்ச்சுகீசிய கலங்கரை விளக்கத்துடன் பார்த்து மகிழலாம்.

மூணார் - munnar

munnar

கேரளாவில் பார்க்க வேண்டிய மிக அழகான இடங்களில் மூணாறு பகுதியும் ஒன்றாகும். சலீம் அலி பறவைகள் சரணாலயம் சிறந்த இடமாக இருக்கிறது. ஆடுக்காடு நீர்வீழ்ச்சிக்கு மலையேற்றம் செய்து எக்கோ பாய்ண்டில் கண்டு மகிழலாம். ஆனைமுடி சிகரத்தில் இருந்து பிரமிக்க வைக்கும் காட்சிகளை கண்டு பார்க்கலாம்.

குமரகத்தின் உப்பங்கழி kumarakom

kumarakom

கேரளா மாநிலத்தின் பிரபலமான குமரகத்தின் பிரமிக்க வைக்கும் காயல்கள் குளங்கள் கால்வாய்கள் மற்றும் ஏரிகளின் அற்புதமான கலவையாகும். தென்னை மரங்களால் சூழப்பட்ட இந்த நீர் வழியாக நீங்கள் படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து பயணிக்கலாம். போட் ஹவுஸ் அனுபவத்திற்கும் சரியான இடமாக இந்த இடம் இருக்கும்.

வர்கலா varkala

varkala

ர்கலாவின் கடற்கரைகள் கரடு முரடான பாறைகள் மற்றும் அழகிய நீர்நிலைகளுக்கு பெயர் பெற்றவை. வர்கலா கடல் பகுதியில் இப்போது டால்பின்கள் வருகை தந்திருப்பதால் அது கடலில் துள்ளி குதிக்கும் காட்சிகளை மிஸ் செய்யாமல் பார்த்து மகிழுங்கள்.

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி -athirapally falls

athirapally falls

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அதிரப்பள்ளி அருவி, மர வீடுகளுக்கு பிரபலமான ஒரு பகுதியாகும். கம்பீரமான அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் 80 அடிக்கு மேல் இருந்து நீர் கீழே விழுகிறது. இது ஒரு மூடு பனியை போன்ற நீர்த்திவலைகளால் ஆன சூழலை உருவாக்குகிறது. நீர்வீழ்ச்சியின் அடிப்பகுதிக்கு சென்று இயற்கையின் அழகை ரசிக்கலாம்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT