யுனிவர்சல் ஸ்டுடியோஸ் 
பயணம்

சிங்கப்பூர் போறீங்களா? நிச்சயம் இதை மிஸ் பண்ணாம என்ஜாய் பண்ணுங்க!

சேலம் சுபா

சிங்கப்பூர் போகப்போறீங்களா? நிச்சயம் இந்த இடத்தைக் கண்டு களிக்க மறக்காதீர்கள். சிங்கப்பூர் என்றாலே ஏராளமான சுற்றுலாத்தலங்கள் நம்மைக் கவரும். அதில் மிகவும் பிரபலமானது யுனிவர்சல் ஸ்டுடியோஸ்.

உலகெங்கிலும் உள்ள ஐந்து யுனிவர்சல் ஸ்டுடியோஸ் தீம் பூங்காக்களில் இதுவும் ஒன்றாகும். சிங்கப்பூரின் செந்தோசாத் தீவில்  (Sentosa Island) அமைந்துள்ள ஒரு கேளிக்கைப் பூங்காவாக அறியப்படும் இது, சிங்கப்பூரின் இரண்டாவது ஒருங்கிணைக்கப்பட்ட உல்லாசப்பகுதியாக உள்ளது. பிரமாண்டமான தீம் பார்க் வகையான இதைக் கட்டுவதற்கான ஒப்பந்தம் மலேசிய நிறுவனமான யென்டிங் குழுமத்துக்கு வழங்கப்பட்டது குறித்து 2006 டிசம்பர் 8ஆம் தேதி சிங்கப்பூர் அரசு அறிவித்தது. கட்டடவேலைகள் 2007 ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கின. இதுவே ஆசியாவில் யுனிவர்சல் ஸ்டூடியோசின் இரண்டாவது கேளிக்கைப் பூங்காவும், தென்கிழக்காசியாவின் முதலாவது கேளிக்கைப் பூங்காவாகவும் சிறப்பு பெறுகிறது.  இது திறந்து வைக்கப்பட்ட பின்னரான ஒன்பது மாதத்தில் 2 மில்லியன் மக்கள் வருகை தந்துள்ளதே இதன் சிறப்புக்கு சான்று.

தென்கிழக்கு ஆசியாவின் முதல் மற்றும் ஒரே யுனிவர்சல் ஸ்டுடியோஸ் தீம் பார்க் 7 டீம் மண்டலங்களில் 24 சவாரிகள் மற்றும்  நிகழ்ச்சிகளுடன் சுற்றுலா பயணிகளைக் கவரும் வண்ணம் உள்ளது. இங்கு நவீனமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் அட்ரினலின் - பம்பிங் ரைடுகள், ஊடாடும் நிகழ்ச்சிகள் மற்றும் நமக்குத் தெரிந்த நாம் விரும்பும் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களின் அடிப்படையில் அமைந்த 3 டி தொழில்நுட்ப காட்சிகளில் சவாரி செய்து பலவிதமான அற்புதமான இடங்களுக்கு நேரில் சென்று மகிழ்வதைப் போன்ற உணர்வைப் பெறுவது அலாதியான அனுபவம் தரும்.

இங்கு வடிவமைக்கப்பட்டுள்ள  7 கருப்பொருள்களில் பிரபல ஹாலிவுட்டும் (Hollywood) ஒன்று. மேலும், நியூயார்க்  (New York), பழங்கால எகிப்திய நகரம் (Ancient Egypt), மடகாஸ்கர் (Madagascar), அறிவியல் புனைகதை நகரம் (Sci-Fi City),  இழந்த உலகம் (The Lost World),  வெகு தூரம் (Far Far Away) ஆகியவையும் அடங்கும். ஷ்ரெக் (Sherk),  ஜுராசிக் வேர்ல்ட் (Jurassic World), டிரான்ஸ்ஃபார்மர்கள் (Transformers) போன்ற சிறந்த ரைடர்கள் நம்மைக் குஷியாக்கும்.

யுனிவர்சல் ஸ்டுடியோஸ்

குறிப்பாக உலகின் மிக உயரமான கூலிங் ரோலர் கோஸ்டர்களான காட்டில் ஸ்டார் ஹுமன் அல்லது சைலனில் உள்ள ரிவெஞ் ஆப் தி மம்மி போன்ற சின்னமான ரோலர் கோஸ்டர் சவாரிகளை நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள். மேலும், மயிர் கூச்செரியும் திரில்லர் சவாரிகள் மற்றும் இடைவிடாத உற்சாகத்துடன் திரைப்படங்களில் புது உலகத்தை உயிர்பிக்கிறது. லாஸ்ட் வேர்ல்டில் பிரமிக்க வைக்கும் டைனோசர்கள், ரிவென்சாப் தி மம்மி, ரயிலுள்ள மணல் குன்றுகள் மற்றும் புராதனக் கல்லறைகள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.

பொதுவாக, பெரும்பாலான சுற்றுலாவாசிகள் பூங்காவில் ஒரு முழு நாளையும் செலவிடுகிறார்கள். இது 8 முதல் 12 மணிநேரம் வரை இயங்குகிறது. என்றாலும்  பூங்காவில் உள்ள அனைத்து அம்சங்களையும் மிஸ் பண்ணாமல் அனுபவிக்க விரும்பினால் அல்லது சீசனில் பார்வையிடத் திட்டமிட்டால், நீங்கள் நிச்சயம் இரண்டு நாட்களை ஒதுக்குவது நல்லது.

யுனிவர்சல் ஸ்டுடியோஸ்

இங்கு அனைத்து ரைடர்ஸ் மற்றும் பார்வையிடங்களுக்கு கணிசமான கட்டணம் பெறப்படுகிறது. நமக்குத் தேவையானதைத் தேர்வு செய்து மகிழ்வதில் கவனமாக இருக்கவேண்டும்.  அதேபோல் இங்கு பல வகையான ருசிகளில் உணவு வகைகள் மற்றும் ஸ்நாக்ஸ்களும் நம் பசிக்கு விருந்தாக அமைகிறது. அதிக விலையினால் பர்ஸ்க்கும் வேட்டு வைக்கும்.     

குடும்பத்துடன் செல்வதற்கு ஏற்ற இடமான இங்கு சென்று செந்தோசாத் தீவின் ரிசார்ட்டில் தங்கி அதனுடன் இணைந்த யுனிவர்சல் ஸ்டுடியோஸ்ன் விளையாட்டு, அறிவியல் விசித்ரங்களை கண்டு அனுபவித்தால் மட்டுமே நமது சிங்கப்பூர் சுற்றுலா முழுமையடையும்.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT