கேரளாவில் தக்காண பீட பூமியின் தெற்கிலும் மேற்கு தொடர்ச்சி மலை பக்கமும் உள்ள ஒரு மாவட்டம் தான் வயநாடு. அந்தவகையில் வயநாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக எந்தெந்த இடத்திற்கெல்லாம் செல்லலாம் என்பதைப் பற்றி பார்ப்போம்.
முதல் நாள் பயணம்:
முதலில் 344 சதுர கிமீ கொண்ட வயநாடு விலங்குகள் சரணாலயத்திற்கு செல்லலாம். இங்கு வாரம் முழுவதும் காலை 7 மணி முதல் 10 மணி வரை மற்றும் மதியம் 3 மணி முதல் 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். இங்கு பலவகையான விலங்குகளைப் பார்க்கலாம். நுழைவுக் கட்டணம் ஒரு ஆளுக்கு 160 ரூ ஆகும்.
எடக்கல் குகை:
அம்புகுட்டி மாலா (மலை)வில் உள்ள இந்த குகை 1890ம் ஆண்டு ஃப்ரெட் ஃபாக்கெட் என்பவரால் கண்டுப்பிடிக்கப்பட்டது. இங்கு செல்வதற்கான நுழைவுக்கட்டணம் ரூ20 ஆகும். மேலும் இந்த குகைக்கு செல்ல 300 படிக்கட்டுகள் வளைந்து இருக்கும் என்பதால் ஷூ பயன்படுத்திக் கொள்வது நல்லது.
சீங்கெரி மலை:
வயநாட்டிலேயே கட்டாயம் சுற்றிப் பார்க்க வேண்டிய இந்த இடத்திற்கு மாலை 5.30 மணி வரை செல்லலாம். இங்கு காலை 6 மணியளவில் மலை ஏற ஆரம்பிக்கலாம். மலை ஏறமுடியாதவர்கள் கயிர் உதவியுடனும் ஏறலாம். மேலும் இங்கு வழி உதவிக்கும் துணைக்கும் நாய்களும் வைத்திருப்பார்கள். நுழைவுக்கட்டணம் 100 ரூபாயுடன் சேர்த்து நாய்க்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
பேன்டோம் பாறை:
சீங்கெரிக்கு மிக அருகில் இருக்கும் இந்த பேன்டோம் பாறைக்கு காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை செல்லலாம். இதுவும் ஏறுவது போலத்தான் இருக்கும். சோர்வாக இருக்கும் சமயத்தில் நீங்கள் எடக்கல் குகையிலிருந்தே இதனைப் பார்க்கலாம். ஒருவேளை இந்த பாறைக்கு சீக்கிரம் சென்று விட்டீர்கள் என்றால் சூர்ய அஸ்தமனத்தை பல நிறங்களின் கதிர் வீச்சுகளுடன் பார்க்கலாம். இதற்கான நுழைவுக் கட்டணம் 30 ரூபாய் ஆகும்.
காரபுழா அணை:
வயநாட்டிலேயே மிகவும் பெரிய அணையான காரபுழா அணை 1977ம் ஆண்டிலிருந்து கட்டப்பட்டாலும் 2004ம் ஆண்டுத்தான் திறந்து வைக்கப்பட்டது. இதன் அருகே பூங்காவும் உள்ளது. ஆகையால் முதல் நாள் பயணத்தை காரபுழா அணையுடன் முடித்துக்கொள்ளலாம்.
இரண்டாம் நாள் பயணம்:
சேம்ப்ரா சிகரம்:
இரண்டாம் நாள் சேம்ப்ரா சிகரத்திலிருந்திலிருந்து தொடங்கலாம். இந்த இடத்திலிருந்து இதய வடிவம் கொண்ட ஹ்ரிதயசரஸ்ஸு என்ற ஏரியைப் பார்க்கலாம். காலை 7 மணிக்கு அங்கு சென்றீர்கள் என்றால் தேயிலை தோட்டைத்தை நன்றாக பார்த்துக்கொண்டு கடக்கலாம். அதேபோல் 2 மணிக்குள்ளாகவே அங்கிருந்து கிளம்பிவிடுவது நல்லது. இந்த இடத்திற்கான நுழைவுக் கட்டணம் ரூ 20.
என் ஊறு கிராமம்:
இது Bucolic (நாட்டுப்புற) கலாச்சாரத்துடன் உருவாக்கப்பட்ட ஒரு கிராமம். வாகனம் நிறுத்துமிடத்திலிருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ளது. ஆகையால் ஜீப்பில் 30 ரூபாய் கட்டணத்துடன் செல்லலாம். இங்கு களிமண் குடிசை, கைவினைப் பொருட்கள் ஆகியவற்றைப் பார்க்கலாம். இங்கு உள்ளே செல்வதற்கான நுழைவுக்கட்டணம் 50ரூ ஆகும்.
வயநாடு தேயிலை அருங்காட்சியகம்:
என் ஊரு கிராமத்திலிருந்து இங்கு செல்ல 2 மணி நேரமே ஆகும். இது ஒரு நூற்றாண்டுக்கும் பழமையான அருங்காட்சியகம் என்பதால் அங்கு தேயிலை உற்பத்தி செய்வதன் வரலாறு, செய்யும் முறை ஆகியவற்றைக் கற்றுக்கொள்ளலாம். மேலும் தேயிலையை ருசிப்பதற்கென தனி அறையும் உள்ளது.
இந்த இடத்துடன் நீங்கள் வயநாடு பயணத்தை முடித்துக்கொள்ளலாம்.