பயணம்

பத்து நிமிடங்களில் 3 நாடுகளுக்குச் செல்லலாம் வாங்க!

ம.வசந்தி

புதுப்புது இடங்களுக்கு சென்று சுற்றி பார்க்க வேண்டும் என்று பலரும் விருப்பப்படுவார்கள். எப்போதும் பரபரப்பாக இருந்துவிட்டு விடுமுறை காலங்களில் சுற்றுலாத் தலங்களுக்கு குடும்பத்துடன் ஜாலியாக பொழுதை போக்குவார்கள். வசதிக்கு தகுந்தபடி உள்ளூர் முதல் வெளிநாடு வரை ஒவ்வொருவரும் தாங்கள் செல்ல வேண்டிய இடம் குறித்து பெரிய லிஸ்டே வைத்து இருப்பார்கள்.

அதிலும் வெளிநாட்டு சுற்றுலாவிற்கு செல்ல வேண்டுமென்றால் பாஸ்போர்ட், விசா, பணம் முதலியவற்றை முதலில் தயார்படுத்திக் கொண்டுதான் யோசனையே செய்வார்கள். அதன் பிறகு நமக்கு இந்த நேரம் சரியாக இருக்கும் என்பதை முடிவு செய்து, சுற்றுலா செல்லும் நாடுகளில் நாம் போகும் சமயம் சீசன் தானா என்பதனையும்  தெரிந்து கொண்டுதான் புறப்படவே ஆயத்தம் ஆவார்கள்.

இதற்கெல்லாம் மகுடம் வைப்பது போல 10 நிமிடங்களில் 3 நாடுகளுக்கு செல்லலாம் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நம்பித்தான் ஆகவேண்டும். அத்தகைய ஒரு இடத்தைப் பற்றித்தான் இப்பொழுது சொல்லப் போகிறேன். ஸ்விட்சர்லாந்தில் உள்ள பேசல் என்ற இடத்தில் இருந்துதான் 10 நிமிடங்களில் மூன்று நாடுகளுக்கு செல்ல முடியும். பேசல் நகரில் மீடியேவல் ஓல்ட் டவுன் "mediaeval Old Town என்ற இடத்திற்கு சென்று அங்குள்ள கோப்ஸ்டோன் ஸ்டிரீட்ஸ் செல்ல வேண்டும்.

இங்கிருந்துதான் ஒரே நேரத்தில் மூன்று நாடுகளுக்கு செல்லும் அரிய வாய்ப்பு கிடைகிறது. இந்த இடத்தில் இருக்கும் ட்ரீலான்டெரெக் நினைவு சின்னம் அருகேதான் மூன்று நாடுகள் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய மூன்று நாடுகளின் ஒரு பகுதி எல்லை இந்தஇடத்தில் இருக்கிறது.

எனவே, இந்த இடத்தில் இருந்து வெறும் 10 நிமிடங்களில் மூன்று நாடுகளுக்கும் சென்று விடலாம். இந்த பக்கம் ஒரு எட்டு வைத்தா ஜெர்மனி, மற்றொரு பக்கம், பிரான்ஸ் இன்னொரு பக்கம் சுவிட்சர்லாந்து என மூன்று நாடுகளுக்கு சொந்தமான எல்லையை தொட்டு விடலாம். சுவிட்சர்லாந்துக்கு சென்ற சுற்றுலாபயணிகள் பலரும் இந்த இடத்திற்கு முக்கியமாக சென்று வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரி என்று அழைக்கப்படும் இடம் சுவிட்சர்லாந்து. இயற்கையின் மொத்த அழகையும் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் சுவிட்சர்லாந்துக்கு செல்ல வேண்டும் என்பது பல சுற்றுலா பயணிகளின் கனவாக இருக்கும். சுவிட்சர்லாந்தை பொறுத்தவரை காணும் இடமெல்லாம், மலைகள், நீர்வீழ்ச்சிகள் என பிரமிக்க வைக்கும் இயற்கைக் காட்சியை கொண்டு இருக்கும்.

இங்குள்ள பேசல் நகரில்தான் இந்த மூன்று நாடுகளின் எல்லையும் உள்ளது. அதாவது டெக்னிக்கலாக இந்த மூன்று நாடுகளுக்கும் போனதாக அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், உண்மையில் சுவிட்சார்லாந்தில் இருந்து இந்த இரண்டு நாடுகளுக்கும் செல்வது என்றால் உரிய விசா விதிமுறைகளை பின்பற்றியே செல்ல வேண்டும்.

என்ன நான் முதல்ல சொன்னத இப்பவாவது நம்புவீங்களா!

முதியோர்கள் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவேண்டிய 15 விஷயங்கள்!

Tesla Pi Phone: சார்ஜும் போட வேண்டாம், இன்டர்நெட்டும் இலவசம்! 

திருமணம் செய்ய விரும்பும் நபரை வெளிப்படுத்திய ராஷ்மிகா மந்தனா!

மிளகாயை விரும்பி ஏற்கும் பிரத்யங்கிரா தேவி!

குழந்தைகளின் உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்க உதவும் 5 வகை பானங்கள்!

SCROLL FOR NEXT