நாகராஜர் கோவில் 
தீபம்

நிறம் மாறும் நாகக்கோவில் புற்று மண். அதிசய கோவில் எங்குள்ளது தெரியுமா?

நான்சி மலர்

ந்திய மக்கள் ஆதியிலிருந்தே இயற்கையை தெய்வமாக வணங்கி கொண்டிருந்தனர். அதன் பிறகு மிருகங்களையும் தெய்வமாக நினைத்து வணங்க தொடங்கினர். இந்தியாவில் உள்ள பல கோவில்களில் பாம்புகளுக்கு என்று சிலை இருப்பதை பார்த்திருப்போம். புற்றுக்கு பால் ஊற்றுவது, புற்று மண்ணை திருநீறாக இட்டுக்கொள்வதென்று பாம்பை தெய்வமாக வணங்குவது என்று சொல்லலாம். அப்படிப்பட்ட அதிசய கோவில் ஒன்றை பற்றித்தான் காண உள்ளோம்.

தமிழ்நாட்டில் நாகர்கோவில் மாவட்டத்தில் அமைந்திருப்பதுதான் நாகராஜர் கோவில். இக்கோவில் 12 ஆம் நூற்றாண்டிற்கு முன்பு கட்டப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இங்கே நாகராஜரை கடவுளாக வழிபடுகிறார்கள்.

ஒருமுறை புல்லறுக்க சென்ற பெண் ஒருத்தி வயல் வெளியில் உள்ள புற்களை அறுத்துக்கொண்டிருந்த போது, தவறுதலாக அங்கே படுத்திருந்த ஐந்து தலை நாகத்தின் தலையிலே வெட்டிவிட, அதிலிருந்து ரத்தம் பீரிட்டு வருகிறது. அதை பார்த்து பயந்துபோன பெண்மணி ஊரில் ஆட்களை கூட்டி வந்து காட்டுகிறார். ஆனால் அப்போது ஐந்துதலை நாகம் சிலையாக மாறியிருப்பதையும் அதிலிருந்து ரத்தம் வருவதையும் பார்த்த மக்கள் அந்த சிலைக்கு கூரை நெய்து அதற்கு கீழே வைத்து வழிப்பட தொடங்கினர்.

இக்கோவிலில் மூன்று சன்னதிகள் உள்ளது. பழமையான ஒன்று நாகராஜருக்கு உள்ளது. அனந்த கிருஷ்ணருக்காக ஒன்று உள்ளது. இது குழந்தை கிருஷ்ணர் நாகத்தின் தலையின் மீது ஆடுவதாகும். இங்கே கிருஷ்ணர் ருக்மணி மற்றும் சத்தியபாமாவுடன் காட்சியளிக்கிறார். மூன்றாவதாக சிவனுக்கென்று ஒரு சன்னதி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

தை மாதத்தில் 10 நாள் இக்கோவிலில் திருவிழா எடுப்பார்கள். அதில் 9ஆவது நாள் திருவிழாவின்போது இக்கோவிலில் தேரோட்டம் நடக்கும். அந்த தேரோட்டத்தில் அனந்த கிருஷ்ண சுவாமி பாமா, ருக்மணியோடு சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். இக்கோவிலின் கொடிமரத்தை பற்றி சொல்லியாக வேண்டும். இதுவே கிருஷ்ணர் கோவிலாக இருந்தால் கொடிமரத்தில் கருடாழ்வார் சிலை வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த கோவிலில் ஆமையுடைய சிலை வைக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் இது நாகங்களின் கோவில் என்பதால், கருடனுக்கும் நாகப்பாம்பிற்கும் ஆகாது என்ற காரணத்தினாலே கொடிமரத்தின் மேலே ஆமை வைக்கப் பட்டிருப்பதாக சொல்கிறார்கள். அனந்த கிருஷ்ணர் வெளியே வரும்போது கூட ஆமை வாகனத்தில்தான் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகராஜர் கோவில்

கோவிலுக்கு வெளியிலேயிருந்து பார்க்கும்போது, கேரளா ஸ்டைல் கோவில் போலவும், கோவிலுக்குள் சென்று பார்க்கும்போது தமிழ்நாட்டு கோவில் போலவும் இரண்டு பாரம்பரியமும், கட்டிடக்கலையமைப்பும் சேர்த்து பார்க்க முடிகிறது.

இந்த கோவில் சர்ப்ப தோஷ பரிகார ஸ்தலம் என்று சொல்லப்படுகிறது. இங்கே 500 வருடங்களுக்கு முன் வாழ்ந்த உதயமார்த்தாண்ட வர்மா என்ற மகாராஜாவிற்கு சர்ப்பதோஷம் நிவர்த்தி ஆகி அவருடைய தோலில் இருந்த சரும வியாதிகள் குணமானதால்தான் கீற்றுக் கொட்டகையாக இருந்த இந்த கோவிலை மிக பெரிய அளவில் அந்த மகாராஜா கட்டிக்கொடுத்ததாக சொல்லப்படுகிறது. அவரின் கனவில் வந்த நாகராஜர் தன்னுடைய கருவறையை மட்டும் கீத்து கொட்டகையாகவே இருக்க வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அதனால் இன்னாள் வரை நாகராஜருடைய கருவறை கீத்துக்கொட்டகையாகவே உள்ளது. இந்த கூரையில் பாம்பு ஒன்று வாழ்வதாக நம்பப்படுகிறது. வருடாவருடம் கூரையை மாற்றும் போது பாம்பு காட்சி தரும் என்று சொல்லப்படுகிறது.

இக்கோவிலுக்கு திருமணத் தடை நீங்குவதற்காக, குழந்தைப்பேறு வேண்டி, சருமப்பிரச்சனை நீங்க பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள். நாகராஜன் இருக்கும் இடத்தில் இருக்கும் மண்ணைத்தான் பக்தர்களுக்கு பிரசாதமாக தருகிறார்கள். இந்த பிரசாத மண் ஆறு மாதக்காலம் கருப்பு மண்ணாகவும், ஆறு மாதக்காலம் வெள்ளை மண்ணாகவும் மாறிவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT