தீபம்

திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா!

கல்கி டெஸ்க்

திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது . அந்த விழாவில் பக்தர்களால் கொண்டுவரப்பட்ட டன் கணக்கில் குவிந்த வண்ண மலர்களை வெக்காளியம்மனுக்கு சாத்தி வழிபாடு செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனுக்கு கூடைகளில் பூக்களைக் கொண்டுவந்து சாத்தி வழிபாடு செய்தும், விளக்குகளை ஏற்றியும் வழிபாடு செய்துவருகின்றனர்.

பிரசித்திபெற்ற வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக கோவில் நிர்வாகம் சார்பில் உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் ஊழியர்கள் கிராம மக்கள் உள்ளிட்ட பெருந்திரளான பக்தர்கள் மேளதாளங்கள் முழங்கிட பூக்களை கூடைகளில் ஊர்வலமாக கொண்டுவந்து அம்மனுக்கு சாத்தப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருச்சி உறையூரில் அம்மன் வீற்றிருக்கும் மூலஸ்தானத்தில் மேற்கூரை கிடையாது. வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் தன்னகத்தே தாங்கிக்கொண்டு தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வெக்காளியம்மன் அருள்பாலித்து வருகிறார். மேலும் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் சேர்த்து வழங்கும் அன்னையாகவும் வெக்காளியம்மன் போற்றப்பட்டு வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். ஆலயத்தில் மக்களின் குறைதீர்க்கும் விதமாக அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத்தடை மற்றும் புத்திர தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

இதனைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டுவரும் பூக்கள் யாவும் அம்மனுக்கு சாத்தப்பட்டது. அதேநேரம் அம்மனுக்கு சாத்தப்பட்ட பூக்கள் யாவும் பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்கப்பட்டது. உறையூர் வெக்காளியம்மன் ஆலயத்தில் பூச்சொரிதல் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

முட்டி வலி இருப்பவர்கள் இதுபோன்ற காலணிகளை ட்ரை பண்ணிப் பாருங்களேன்!

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் 'ஃபெஸ்டம்பர் 24' விழா!

மாப்பிள்ளை வீடு சென்னை... அதனால போட்டும், துடுப்பும்தான்!

சாம்பியன் ஆஸ்திரேலியாவின் கொட்டத்தை அடக்கிய தென் ஆப்பிரிக்கா!

பெண்களுக்கு ஏற்படும் மெனோபாஸ்: Hot Flashes என்றால் என்ன? கையாள்வது எப்படி?

SCROLL FOR NEXT