4 Yugas 
தீபம்

தற்போது கலியுகமென்பது தெரியும்; ஆனால் யுகங்கள் பற்றி என்ன தெரியும்? தெரிஞ்சுக்கோங்க மக்களே!

தேனி மு.சுப்பிரமணி

இந்து சமயப் புராணங்களின்படி, கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் மற்றும் கலியுகம் என்று நான்கு யுகங்கள் இருக்கின்றன. இந்த நான்கு யுகங்களையும் சேர்த்து ஒரு சதுர்யுகம் அல்லது மகாயுகம் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு யுகத்திலும் வாழ்பவர்களின் தோற்றமும், குண நலன்களும் கீழ்கண்டவாறு அமைந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

கிருதயுகம் - அறநெறியுடன் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 9 அடி உயரமும், 1 லட்சம் ஆண்டுகள் வாழலாம்.

திரேதாயுகம் - நான்கில் மூன்று பகுதி அறநெறியுடனும், ஒரு பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 8 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 10000 ஆண்டுகள் வாழலாம். இராமர் திரேதா யுகத்தில் பிறந்தார் எனப்படுகிறது.

துவாபரயுகம் - சரிபாதி அறநெறியுடனும், மறுபகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 7 அடி உயரம் உள்ளவர்களாகவும், 1000 ஆண்டுகள் வாழலாம். கிருட்டிணர் மற்றும் பலராமர் ஆகியோர் துவாபரயுகத்தில் பிறந்தவர்கள் எனப்படுகிறது.

கலியுகம் - நான்கில் ஒரு பகுதி அறநெறியுடனும், மூன்று பகுதி அறமில்லாமலும் வாழ்வார்கள். மனிதர்கள் சராசரியாக 6 அடி உயரம் உள்ளவர்களாகவும், சராசரியாக 120 ஆண்டுகள் வாழலாம்.

இந்தக் கலியுகத்தில் மக்கள் அவரவர் தன் சுயநலத்திற்காக அதர்மவழியில் சென்று பாவங்களைச் செய்வதால் பகைக் குணம் மிகுந்தும் காணப்படுவதால் வாழ்வதற்கேத் துன்பமடைவர். இதன் காரணமாக, திருமால், கல்கி அவதாரம் எடுத்து மனிதர்களைக் கொன்று குவித்து மீண்டும் இந்த உலகில் சத்தியத்தினை நிலைநாட்டும் யுகமென்பதால் இது சத்தியயுகம் என்றும் கூறப்படுகின்றது.

யுகங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கால அளவுகளைக் கொண்டன. 

இவற்றுள் சிறிய யுகமான கலியுகம் நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம் (4,32,000) ஆண்டுகள் கொண்டது. துவாபர யுகம் கலியுகத்திலும் இரண்டு மடங்கு கால அளவு கொண்டது. இது 8,64,000 ஆண்டுகளையும், கலியுகத்திலும் மூன்று மடங்கு பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகளையும் கொண்டன. கிருதயுகம் மொத்தம் 17,28,000 ஆண்டுகள் கொண்டது. இது கலியுகத்தின் நான்கு மடங்கு பெரியதாகும்.

இந்த 4 யுகங்களும் சோ்ந்தது ஒரு மகாயுகம் அல்லது சதுா்யுகம் எனப்படுகிறது.

அன்னையிடம் வேல் வாங்கியதும் வேலவர் திருமேனியில் வியர்க்கும் அதிசயம்!

எந்த புலவருக்கும் பரிசளிக்காத கருமி... அவ்வையார் பாடிய பாடல்!

Plato's Quotes: தத்துவஞானி பிளேட்டோவின் பொன்மொழிகள்!

சாதாரண பிரஷ் Vs. எலக்ட்ரிக் பிரஷ்: எது சிறந்தது? 

பயறு வகைகளை ஏன் முளைக்கட்டி சாப்பிடுகிறோம் தெரியுமா?

SCROLL FOR NEXT