Laxman Temple in Nashik 
தீபம்

Laxman Temple: சூர்ப்பனகை மூக்கை லட்சுமணன் அறுத்த இடம்தான் இது!

பாரதி

ராமாயணத்தில் ராமனின் தம்பியான லட்சுமணனுக்கு ஒரு கோவில் உள்ளது என்றால் நம்பமுடிகிறதா? அதுவும் சூர்ப்பனகை மூக்கை அறுத்த அதே இடத்திலே.

ராமாயணத்தில் ராமன், சீதா, லட்சுமணன் ஆகியோர் வனவாசம் செல்வர். அப்போது வனத்தில் ராமனைப் பார்த்து ஆசைப்பட்ட சூர்ப்பனகையால்தான் அடுத்து பெரிய போரே நடக்கும். லட்சுமணன் தனது அண்ணா மற்றும் அண்ணியிடையே மிகுந்த அன்புக் கொண்டிருந்தார். ராவணன் தங்கை சூர்ப்பனகை சீதா மீதுள்ள பொறாமையால், சீதாவைத் தாக்க முன் வருவார்.

அப்போது லட்சுமணன் தனது அண்ணிக்கு எதுவும் நடக்கக்கூடாது என்பதற்காக சூர்ப்பனகை மூக்கை அறுத்துவிடுவார். அந்த நிகழ்வு நடந்த இடம்தான் நாஷிக். அந்த பகுதியின் பெயர் தபோவன் (தபோவனம்). இதுதான் ராமாயண காலத்தில் தண்டகாரன்ய காடு என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அதே இடத்தில்தான் தற்போது லட்சுமணனுக்கு கோவில் கட்டப்பட்டிருக்கிறது. லட்சுமணனை மக்கள் கடவுளாக வணங்கி வரும் கோவில் அது.

மேலும் இந்த கோவில் குறித்த மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது. அதாவது ராவணன் மகன் மேகநாதனை கொல்வதற்கு லட்சுமணன் தவம் புரிந்த இடம் அது என்ற கதையும் உள்ளது. அங்குதான் கடுமையான தவத்தினால், லட்சுமணன் மேகநாதனை கொல்லும் அளவிற்கு சக்தி பெற்றாராம்.

உலகளவில் லட்சுமணனுக்கு அற்பணிக்கப்பட்ட ஒரே கோவில் இது என்று பலர் சொல்கிறார்கள். ஆனால், அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து, லட்சுமணனுக்கு பல இடங்களில் கோவில்கள் உள்ளன என்று கூறுகிறார்கள். காஜுராஹோவில் ஒரு புகழ்பெற்ற லட்சுமணன் கோவில் உள்ளது. இக்கோவில் அதன் நுனுக்கமான கட்டக்கலைக்கே பெயர்ப்போனது. அதேபோல், சத்தீஸ்கரில் ஒரு சிறிய லட்சுமணன் கோவில் உள்ளது. ஆனால், அது அவ்வளவாக மக்களுக்கு தெரியாது.

இந்த லட்சுமணன் கோவிலில் லட்சுமணன் உட்கார்ந்து காட்சித் தருகிறார். மேலும், ராமர், ஹனுமான், விநாயகர் சிலைகளும் இந்தக் கோவிலில் உள்ளன. இந்தக் கோவிலுக்கு அருகிலேயே கோதாவரி மற்றும் கபிலா ஆறுகள் சங்கமிக்கும் இடம் உள்ளது. இது புனித நீராக கருதப்படுகிறது. இக்கோவிலிலும் இந்தப் பகுதிகளிலும் ஏராளமான துறவிகள், முனிவர்கள் தவம் செய்து வருகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

பந்தா எதுக்குடா… கொஞ்சம் அடக்குடா.. நேத்துவர நாயர் கடை பன்னு தானே! 

விஸ்வரூப தரிசனம் என்றால் என்ன தெரியுமா?

இந்த பேய் படத்தைப் பார்க்க உங்களுக்கு தைரியம் இருக்கா? 

மக்கானாவில் அடங்கியுள்ள மகத்தான மருத்துவப் பலன்கள்!

இந்த சிற்றுண்டியில் இவ்வளவு நன்மைகளா?

SCROLL FOR NEXT