தீபம்

சபரிமலை நடை அடைப்பு; மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை காலம் முடிந்தது!

கல்கி

சபரி மலையில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகள் முடிந்ததையொட்டி, இன்று ஐயப்பன் கோவில் நடை அடைக்கப் பட்டது.

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம்போர்டுசார்பில்தெரிவித்ததாவது:

சபரிமலை ஶ்ரீஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகள் முடிந்ததையொட்டி, இன்று ஐயப்பன் கோவில் நடை அடைக்கப் பட்டது. இன்று காலை5 மணிக்குகோவில் நடைதிறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் பந்தள அரச குடும்பத்தின் பிரதிநிதிகள் பங்கேற்க, ஆச்சாரசடங்குகள் நடத்தப்பட்டு நடைஅடைக்கப்பட்டது. முன்னதாக சபரிமலை ஐயப்பனின் திருவாபரணங்கள் பதினெட்டாம் படிவழியே கீழே இறக்கப்பட்டு பந்தள அரண்மனைக்கு நடைபயணமாக திரும்பக்கொண்டு செல்லப்பட்டது. பரிமலை கோவில் சாவிபந்தள அரச குடும்ப பிரதிநிதியான மூலம் நாள் சங்கர் வர்மராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த டிசம்பர்30-ஆம் தேதி மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை நடைதிறக்கப்பட்டது. ஜனவரி 14 ஆம் தேதி மண்டல பூஜையும் மகரஜோதி தரிசனமும் நடந்தது. இந்தாண்டு 20 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மகரஜோதி தரிசனம் முடிந்தபின்பும் தற்போது வரைபக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

இனி, கும்பம்மாத பூஜைக்காக பிப்ரவரி 12 ஆம் தேதி நடைதிறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். பிப்ரவரி 17 ஆம் தேதி வரை வழக்கமான மாதாந்திர பூஜைகள் நடக்கும்.

-இவ்வாறு தேவசம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் தர்பூசணி பழம் சாப்பிடலாமா? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

குறைவான வருமானம்; நிறைவான வாழ்க்கை!

30 வயதிற்கு மேற்பட்ட பெண்ணா நீங்கள்? இதோ உங்களுக்கான சருமப் பராமரிப்பு குறிப்புகள்! 

பாராமதி தொகுதியில் மோதும் பவார் குடும்பத்து மகளும், மருமகளும்!

முருங்கைக்காய் மற்றும் முருங்கைப்பூ ரெசிபிஸ்!

SCROLL FOR NEXT