lord shiva.... Image credit - pixabay
தீபம்

சைவ சமயத் தகவல்கள் – 50!

ஏ.எஸ்.கோவிந்தராஜன்

1. சிவசின்னங்களாக போற்றப்படுபவை - திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்

2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம் - ஐப்பசி பவுர்ணமி

3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம் - தட்சிணாமூர்த்தி

4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் இருக்கும் கோயில் - திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)

5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம் - திருக்கடையூர்

6. ஞானசம்பந்தரைக்காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம் - பட்டீஸ்வரம்

7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர் - திருமூலர்

8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம் - திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம், நாகப்பட்டினம் மாவட்டம்)

9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது - துலாஸ்நானம்

10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது - கடைமுகஸ்நானம்

11. சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன் - கோச்செங்கட்சோழன்.

12. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன் - நடராஜர் (கூத்து என்றால் நடனம்)

13. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம் - சிதம்பரம்

14. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம் - காசி

15. சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம் - திருவண்ணாமலை

16. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம் - மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்

17. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம் - மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)

18. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர் - சின்முத்திரை

19. கயிலாயத்தில் தேவலோகப் பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர் - சுந்தரர்

20. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம் - ஸ்ரீசைலம் (ஆந்திரா).

21. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம் - ஒரிசா மாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்

22. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம் - திருவண்ணாமலை

23. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார் - திருமங்கையாழ்வார்

24. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம் - பரணி தீபம் (அணையா தீபம்)

25. அருணாசலம் என்பதன் பொருள் - அருணம் + அசலம் = சிவந்த மலை

26. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம் - திருவண்ணாமலை (கிளி கோபுரம்)

27. குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம் - 24 நிமிடங்கள் (ஒரு நாழிகை) 28. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர் - அனுமன்

29. ‘நமசிவாய' என்று தொடங்கும் சிவபுராணம் - திருவாசகம்

30. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருட்கள் - அறம், பொருள், இன்பம், வீடு (மோட்சம்)

31. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எண்ணிக்கை - 108

32. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர் - காரைக்காலம்மையார்.

33. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம் - ஆணவம் (ஆணவம் அடங்கினால் ஆனந்தம் உண்டாகும்).

34. பஞ்சசபையில் சித்திரசபையாகத் திகழும் தலம் - குற்றாலம்

35. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம் - சங்கார தாண்டவம்

36. மாலை வேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம் - பிரதோஷ நடனம் (புஜங்கலளிதம்)

37. நடராஜருக்குரிய விரத நாட்கள் - திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்

38. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம் - களி.

39. விபூதி என்பதன் நேரடியான பொருள் - மேலான செல்வம்

40. ஜோதிர்லிங்கத்தலங்கள் எண்ணிக்கை - 12

41. சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் - தத்புருஷ முகம் (கிழக்கு நோக்கிய முகம்)

42. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எண்ணிக்கை - எட்டு

43. மகாசிவராத்திரி கொண்டாடப்படும் நாள் - மாசி தேய்பிறை சதுர்த்தசி

44. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம் - வில்வமரம்

45. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திர நூல் - சிவஞானபோதம்

46. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை - டமருகம் அல்லது துடி

47. அனுபூதி என்பதன் பொருள் - இறைவனுடன் இரண்டறக் கலத்தல்

48. சிவசிவ என்றிட தீவினை மாளும்' என்று கூறியவர் - திருமூலர்

49. சித்தாந்தத்தில் "சஞ்சிதம்' என்று குறிப்பிடுவது - முன்வினைப்பாவம்

50. சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள் - ருத்ராட்சம்.

அன்பும் பாசமும் ஆனந்தமே!

என்று தணியும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்?

சுவாமி ஐயப்பன் அரக்கி மகிஷியை வதம் செய்த வாள் எங்குள்ளது தெரியுமா?

தோரின் பிரபலமான 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்! 

சிறுதானிய உணவுகள் உடலில் ஏற்படுத்தும் ஆரோக்கிய மாற்றங்கள்!

SCROLL FOR NEXT