Narasimha Jayanthi Benefits Image Credits: ISKCON Bangalore
தீபம்

நரசிம்ம ஜெயந்தியில் செய்ய வேண்டியது என்ன? தெரிந்து கொள்ளலாம் வாங்க!

நான்சி மலர்

லகைக் காக்க பெருமாள் எத்தனையோ அவதாரம் எடுத்திருந்தாலும், தன்னுடைய ஒரேயொரு பக்தனை காக்க பெருமாள் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரமாகும். இறைவன் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்ற தத்துவத்தை உலகுக்கு உணர்த்தியவர். நரசிம்மர் அவதரித்த நாளையே நாம் நரசிம்ம ஜெயந்தி என்று கொண்டாடுகின்றோம்.

நரசிம்மர் பார்ப்பதற்கு உக்கிரமாக காட்சி தந்தாலும் பக்தர்கள் கூப்பிடும் குரலுக்கு ஓடோடி வருபவர். உக்கிர நரசிம்மர், லக்ஷ்மி நரசிம்மர், யோக நரசிம்மர் என்று மூன்று ரூபத்தில் காட்சி தருகிறார். நரசிம்ம ஜெயந்தியில் நரசிம்மருக்கு விரதமிருந்து வழிப்பட்டால் நாம் கேட்கும் வரங்களை தருவார் நரசிம்ம பெருமான்.

மற்ற அவதாரத்தில் எல்லாம் நேரம் பார்த்து வந்து பக்தர்களை காப்பாற்றும் பெருமாள். நரசிம்ம அவதாரத்தில் மட்டும் அடுத்த நொடியே வந்து பக்தனை காப்பாற்றுவார். ‘நாளை என்ற சொல்லை அறியாதவர் நரசிம்மர்’ என்று சொல்வார்கள். பக்தனைக் காக்க வேண்டுமென்றால், இந்த நொடி, இந்த நிமிடமே வந்து நிற்பார்.

நான்தான் கடவுள் என்ற இருமாப்புடன் இருந்த ஹிராண்யனின் மகனாக பிரகலாதனோ மகாவிஷ்ணு வின் பக்தன். சாதாரண மனிதன் கடவுளாக முடியாது என்று தன் தந்தையிடமே வாதம் செய்தான் பிரகலாதன். மகன் என்றும் பாராமல் பிரகலாதனை கொல்ல முயற்சித்து தோல்வியுற்றான் ஹிரண்யன். கடவுள் இருக்கிறார் என்றால் அவரை எனக்கு காட்டு என்று கூறினான் ஹிரண்யன். இறைவன் தூணிலும் இருக்கிறார். துரும்பிலும் இருக்கிறார் என்றான் பிரகலாதன். அப்படியென்றால் இந்த தூணில் இருக்கிறாரா? என்று அங்கிருக்கும் தூணை உடைக்க அதிலிருந்து வெளிப்பட்டார் நரசிம்மர்.

நரசிம்மர் ஆயுதம் இல்லாமல், மேலும் இல்லாமல், கீழுமில்லாமல், பகலும் இல்லாமல், இரவும் இல்லாமல் ஹிரண்யனை கொன்றார். அதற்கு பிறகும் ஆக்ரோஷமாக இருந்த நரசிம்மரை சிவபெருமான் சரபேஸ்வரர் அவதாரம் எடுத்து சாந்தப்படுத்த லக்ஷ்மி தேவியை மடியிலே அமர்த்தி லக்ஷ்மி நரசிம்மராக காட்சியளித்தார். நாம் கேட்டதை விட அதிகமாக அள்ளி கொடுக்கும் நரசிம்மர் அவதரித்த தினத்தையே நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடுகிறோம்.

2024ஆம் ஆண்டிற்கான நரசிம்ம ஜெயந்தி மே 21 செவ்வாய் கிழமை அன்று வருகிறது. வைகாசியில் வரக்கூடிய வளர்பிறை சதுர்தசி திதியும், சுவாதி நட்சத்திரமும் இணையும் சந்தியா காலம் என்று சொல்லப்படுகிற பிரதோஷ நேரத்தில்தான் நரசிம்மருடைய அவதாரம் நிகழ்ந்தது. சதுர்தசி திதி 21-5-24 மாலை 5:39 முதல் 22-5-24 மாலை 6:48 வரை உள்ளது. சுவாதி நட்சத்திரம் 21-5-24 காலை 5:47 முதல் 22-5-24 காலை 7:46 வரை உள்ளது. இந்த நேரத்தில் தான் நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்பட வேண்டும். இது பஞ்சாங்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரதம் இருப்பவர்கள் நரசிம்ம ஜெயந்தி அன்று அதிகாலை எழுந்து வீட்டில் விளக்கேற்றி நரசிம்மருக்கு பாலும், பானகமும் நெய் வைத்தியமாக வைத்து வழிப்பாடு செய்ய வேண்டும். நரசிம்மர் கோவில் அல்லது பெருமாள் கோவில் சென்று வழிப்பாடு செய்யலாம்.

பிரதோஷகாலம் என்று சொல்லப்படும் மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை நரசிம்மர் வழிபாடு செய்வது சிறப்பானதாகும். கடன் தொல்லை, வறுமை, பிரச்சனை, பணவிரயம், எதிரிகளால் தொல்லை, தீராத நோய் போன்ற எந்த பிரச்சனையிருந்தாலும் நரசிம்மரை இந்த நாளில் விரதமிருந்து வழிப்பாடு செய்தால் எல்லா பிரச்சனைகளும் தீரும்.

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

நடிகர் முரளி அம்மாவுக்கு இப்படி ஒரு மரணமா? கனவில் கூட யாருக்கும் இப்படி நடக்கக்கூடாதப்பா!

மழைக்காலத்தில் உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள அருந்த வேண்டிய 4 பானங்கள்!

SCROLL FOR NEXT