Artificial Intelligence... Image credit - pixabay.com
கோகுலம் / Gokulam

Artificial Intelligence எனப்படும் செயற்கை நுண்ணறிவு – ஆக்கமா? ஆபத்தா?

கல்கி டெஸ்க்

-மரிய சாரா

னிதனின் அறிவுத்திறனில் உருவாகியிருக்கும் இந்தச் செயற்கை நுண்ணறிவு எனும் தொழில்நுட்பம்தான் இனி உலகை ஆளப்போகிறது! தொலைகாட்சி, கைப்பேசி, கணினி என எல்லா இடங்களிலும் இந்த AI எனப்படும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு நாளுக்குநாள் வளர்ச்சியடைவதை நாம் பார்க்க முடிகிறது.

மனிதனின் மூளையைப் பயன்படுத்தி செய்யப்படும் வேலைகள் அனைத்தையும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக்கொண்டு  மிக எளிதாக விரைவில் செய்ய முடிகிறது. அதனால் பல துறைகளில் இந்த AI பயன்பாடு அதிகரித்து  வருகிறது.

வரலாறு
இந்தச் செயற்கை நுண்ணறிவைப்பற்றிய பேச்சு முதன் முதலில் 1950களில்தான் வெளிப்பட்டது. உலகப்புகழ் பெற்ற கணினி விஞ்ஞானி ஆலன் டூரிங், ‘Can Machines Think?’ என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையில் அவர், இயந்திரங்களால் மனிதர்களைப் போன்று சிந்திக்க முடியும் என்பதற்கு அடிப்படை விதிகளையும், கோட்பாடுகளையும் கூறியிருந்தார். 'டூரிங் டெஸ்ட்' எனப்படும் இந்தக் கோட்பாடுதான் ஓர் இயந்திரம் மனிதனைப்போல் சிந்திக்கக்கூடியதா எனப் பரிசோதிக்க பயன்படுத்தப்படுகிறது.

1956ம் ஆண்டு டார்ட்மவுத் மாநாட்டில்தான், ‘Artificial Intelligence’ என்ற பெயர் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. அதன்பின்னர், இந்தத் துறையில் பல முக்கிய முன்னேற்றங்கள் காணப்பட்டன. பின்னர், நியூரல் நெட்வொர்க்ஸ், Genetic Algorithms, Machine Learning போன்ற நவீன தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. குறிப்பாக, 21ம் நூற்றாண்டில் தான், Deep Learning மற்றும் Big Data ஆகியவற்றின் வளர்ச்சியால், AI துறை மிகவும் வேகமாக முன்னேறியது.

செயற்கை நுண்ணறிவின் ஆக்கப்பூர்வமான பயன்பாடுகள்:

சுகாதாரம்:
மருத்துவத் துறையில் நோயாளிகளிடையே நோய்களைக் கண்டறிதல், நோய்களுக்கான சிகிச்சையளித்தல் மற்றும் புதிய மருந்துகளைக் கண்டுபிடித்தல் ஆகிய அனைத்திலும் இந்த AI பயன்படுத்தப்படுகிறது.

தொழில் வளர்ச்சியில்:
லாபகரமான தொழிலில் முதலீடு செய்வது, சந்தை பகுப்பாய்வு, நிதி தொடர்பான பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளைக் கண்டறிதல், பொருட்கள் தயாரிப்பின் செயல்திறனை மேம்படுத்துதல், வாடிக்கையாளர்களின் சேவை மற்றும் தரக் குறைபாடுகளைக் குறைத்தல் என தொழில்துறை சார்ந்த முக்கியமானவற்றில் AI பயன்படுத்தப்படுகிறது.  

விளையாட்டு:
விளையாட்டு துறையில் ஒரு விளையாட்டின் செயல்திறனை மேம்படுத்த, பயிற்சி முறைகளை பரிந்துரை செய்ய, போட்டிகளை ஆராய்ந்து யூகிக்க, துல்லியமான முடிவுகளை எடுக்க என இந்த AI பயன்படுத்தப்படுகிறது.

தேடி தெரிந்துகொள்ள:
மாணவர் படிப்பு, அறிவை வளர்த்துக்கொள்ளும் விஷயங்களைத் தெரிந்துகொள்ளுதல் என எல்லா வற்றையும் எளிதில் தெரிந்து தெளிவதற்கும் இந்த AI பயன்படுத்தப்படுகிறது.

பொதுச்சேவை:
போக்குவரத்து கட்டுப்பாடு, நுகர்வோர் சேவை, சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரிப்பு போன்ற பல்வேறு துறைகளில் AI உதவுகிறது.

செயற்கை நுண்ணறிவின் ஆபத்துக்கள்:
1. அதிக அளவில் இந்த AI தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில் வேலையிழப்புகள் அதிக அளவில் நிகழ வாய்ப்புள்ளது.
2. அனைத்திலும் உள்ளது போலவே நன்மைகளும், தீமைகளும் இதில் உண்டு என்பதால், இந்தத் தொழில்நுட்பத்தை சிலர் தவறான வழிகளுக்கு உபயோகப்படுத்தவும் முடியும்.
3. தவறான வகையில் பயன்படுத்தப்பட்டால் இந்தச் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக்கூட அமையலாம்.

இந்த செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தில் மேலும் வளர்ச்சி பெறும். இன்னும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகமாகும். இதன்மூலம், மனித வாழ்க்கை மேலும் எளிமையாகவும், நம்பகமாகவும் மாறும். அதே நேரத்தில், AI தொடர்பான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். AI தொழில்நுட்பத்தின் முறையான பயன்பாடு மட்டுமே சமூக நலனுக்குப் பயன்படும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT