பென்குவின் www.worldwildlife.org
கோகுலம் / Gokulam

ஆச்சரியங்கள் நிறைந்த பறவை எது தெரியுமா…?

ஜனவரி-5 உலக பறவைகள் தினம்!

கோவீ.ராஜேந்திரன்

சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கவர்ந்த பறவைகளில் ஒன்று பென்குவின். வெள்ளை நிற வயிற்றை தூக்கியபடி துடுப்பு போன்ற இறக்கைகளை அசைத்து, அசைத்து அவை நடந்து செல்வதை அண்டார்டிகா பனிப்பிரதேசங்களில் காணலாம். அங்கு அவை கூட்டம்கூட்டமாக வாழ்கின்றன.

பென்குவின்களால் பறக்க இயலாது! இவை பெரும்பாலும் நீரிலும், அவ்வப்போது நிலத்திலும் வாழ்பவை. இவைகளில் சுமார் 17 இனங்கள் உள்ளன எம்பரர் , அடிலய், ஜென்டூ, சின்ஸ்ட்ராப், மக்ரோனி, ராக் ஹாப்பர்  என்பன முக்கியமான வகைகள் . இவற்றில் சில ஒரு அடி முதல் சுமார் 5 அடிவரை உயரம் கொண்டவை. இவை நீரில் லாவகமாக நீந்தும் ,கூட்டம் கூட்டமாக வாழும்.  பெங்குவின்கள் மனிதர்களிடம் மிகவும் சிநேகம் பாராட்டும் குணம் கொண்டவை.

பெங்குவின் என்ற இலத்தீன் சொல்லுக்கு ‘கொழுப்பு’ என்று பொருள். உடலில் அதிகப்படியான கொழுப்பு அடுக்குகளைப் பெற்றுள்ளதால்தான் இப்பறவைக்கு பெங்குவின் என்று பெயர் வந்தது. பெங்குவின் பறவைகளுக்கு உடல் முழுவதும் தடித்த தோல்கள் உள்ளன. இதனால் பெங்குவின் எவ்வளவு குளிரையும் தாங்கும்.

இதன் உடல் முழுவதும் தண்ணீர் புகாத ‘வாட்டர் புரூப்' சிறகுகள் உள்ளன. கடும் குளிரையும், மழையையும் சமாளிக்க மூன்று அடுக்குச் சிறகுகள் இதன் உடம்பில் இருக்கும். பென்குவின் உடம்பில் தினசரி 150 கிராம் சிறகுகள் வரை உதிர்ந்துவிடும். ஆனால், 12 நாட்களில் புதுச்சிறகுகள் முளைத்துவிடும். தன் உடலில் மொத்தம் 2 கிலோ சிறகுகளை போர்த்திக்கொண்டு, கடும் குளிரை இதமாக சமாளித்துவிடும். குளிர்ந்த நீரில் மின்னல் வேகத்தில் நீந்தும். பெண் பெங்குவின் ஒரு வருடத்தில் ஒரு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும், ஆண் பெங்குவின் அதை அடை காக்கும். கடல் நீரை பருகும் ஒரே பறவை பெங்குவின்தான்.

பறவைகள்...

இவைகளுக்குப் பிடித்த உணவு, அண்டார்டிகா கடலில் அபரிமிதமாகக் கிடைக்கும் ‘கிரில்' வகை மீன்களாகும். நீச்சலில் கில்லாடியான  இவைகள் கடலில் டைவ் அடித்து வெகு ஆழத்துக்குச் சென்று வெரைட்டியான மீன்களை துரத்தி பிடித்து உண்ணும். 200 மீட்டர் ஆழத்திற்கு கீழும் பெங்குவின்களால் நீந்தி செல்லமுடியும். பெங்குவின்கள் பெரும்பாலும் நீரிலேயே இருப்பதால் பெங்குவின்கள் உடலில் சிறுஅழுக்கு கூட இருக்காது.

ஐஸ் பாறைகளைக் கண்டுவிட்டால், காலால் இவை நடக்காது. வயிற்றால் வழுக்கியபடி படுவேகத்தில் ஸ்கேட்டிங் செய்யும். பென்குவின்கள் நிலத்தில் எதையும் சாப்பிடாது. பிரேக்பாஸ்ட், லன்ச், டின்னர் எல்லாம் கடலில்தான். சில நேரங்களில் இரை தேடிக் கடலில் குதிக்கும் பென்குவின்கள், பல நாட்களாக கரைக்குத் திரும்பாமல் நீந்தும்.

பென்குவின்

பெண் பெங்குவினை காட்டிலும் ஆண் பெங்குவின் உடல் எடை அதிகம் இருக்கும். ஆண் பெங்குவின் உடல் எடை 3.60 கிலோ, பெண் பெங்குவின் 3.10 கிலோ. பெங்குவின் முழு வளர்ச்சி அடைவது அது வெளி வந்த 3 முதல் 4 வருடங்களில். பெங்குவின் முட்டை வெள்ளை நிறத்தில் 5 முதல் 7 செ. மீ அளவில் 107 கிராம் இருக்கும். நன்கு வளர்ந்த பெங்குவின் நாள் ஒன்றுக்கு 540 கிராம் எடை உணவை உண்ணும். உணவும், நீரும் இல்லாமல் நீண்ட நாட்கள் உயிர் வாழக்கூடிய பறவை பெங்குவின்.

கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தை கொண்ட பெங்குவின் பறவைக்கு இது இயற்கை தந்த பரிசு. ஆம்! கடலில் சுறா போன்றவைகள் மேலே இருந்து பார்த்தால் கருப்பு நிறம் தெரியும் இதனால் இதை சுறாக்களால் அடையாளம் காணமுடியாது. அதேபோல் கீழே இருந்து பார்த்தால் வெள்ளை நிறம் தெரியும். இது கடல் வெளிச்சத்தில் வேறு மாதிரி அவைகளுக்கு தெரியும்.

தினமும் சுமார் 10,000 முறை தூக்கம்...ஒவ்வொரு முறையும் தூங்குவது சுமார் 4 விநாடிகள்தான்...அவ்வாறே தினசரித் தேவையான கிட்டத்தட்ட 11 மணி நேரத் தூக்கத்தை சின்ஸ்ட்ராப் (Chinstrap) வகைப் பென்குவின்கள் பெறுகின்றன என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

எந்நேரமும் எச்சரிக்கையாக இருக்க அவை குறுகிய நேரத்திற்குத் தூங்குவதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மற்ற பறவைகளிடம் சிக்காமல் இருக்கத் தங்களது முட்டைகளைக் கண்காணிக்க வேண்டும். மற்ற பென்குவின்களிடமிருந்து கூட்டைப் பாதுகாக்க வேண்டும். அதற்காகத்தான் ஒரு நாளில் பல்லாயிரம் முறை சில நொடிகளுக்கு மட்டுமே அவை தூங்குகின்றன என்கிறார்கள்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT