rose... Image credit - pixabay
கோகுலம் / Gokulam

குறிஞ்சிப்பாட்டில் இடம் பெறாத பூ எது தெரியுமா?

ராதா ரமேஷ்

ங்க இலக்கியங்களில் குறிப்பிடத்தக்க ஒன்று குறிஞ்சிப்பாட்டு. கபிலர்  இயற்கை மீது மிகுந்த ரசனை கொண்டிருந்ததால் 99 வகையான பூக்களைப் பற்றி தன்னுடைய நூலில் எழுதினார்.

நாம் இன்று புழக்கத்தில் பயன்படுத்திவரக்கூடிய புகழ்பெற்ற பூ ஒன்று இந்த  நூலில் இடம் பெறவில்லை. நாம் தினமும் பயன்படுத்தி வரும் ரோஜா பூ தான் குறிஞ்சிப்பாட்டில் இடம் பெறாத பூ. ஏன் தெரியுமா?

சங்க காலங்களில் ரோஜா பூ என்ற ஒரு பூவே இல்லை. இந்தியாவில் முகாலாயர்களின் வருகைக்கு பின்னரே ரோஜாப்பூ வந்தது.

ரோஜா பூவை போலவே நம் அன்றாட புழக்கத்தில் உள்ள காபி, தேயிலை, முட்டைக்கோஸ், காலிபிளவர், உருளை, பச்சை மிளகாய் போன்றவையும் வேறு நாடுகளில் இருந்து கொண்டு வந்து பயிரிடப்பட்டவையே.

ரோஜா பூவில் உடலுக்கு நன்மை அளிக்கக்கூடிய பல பயன்கள் உள்ளன. குல்கந்து எனப்படும் இனிப்பு பொருளானது ரோஜாவில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.

நாம் அழகுக் கலையில் பெரும்பாலும் பயன்படுத்தக் கூடிய ரோஸ் வாட்டர், ரோஜா பூவிலிருந்துதான் வந்தது. நாம் அழகுக்காக பயன்படுத்தக்கூடிய இந்த ரோஸ் வாட்டர்  மத்திய கிழக்கு, பாரசீக நாடுகளில் உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

ரோஜாக்கள் பெரும்பாலும் அலங்கார செடிக்காக வளர்க்கப்படுகின்றன. வாசனை திரவியங்கள் தயாரிப்பதில் ரோஜாக்களின் பங்கு மிகவும் அதிகம்!

வெளிநாட்டில் இருந்து வந்தாலும் மக்கள் மனதை கவர்வதிலும், அன்பை வெளிப்படுத்த பயன்படுவதிலும் ரோஜாவுக்கு எப்போதும் தனி இடம் உண்டு!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT