விசித்திரமான ஓட்டல்கள்... 
கோகுலம் / Gokulam

உலகின் விசித்திரமான ஓட்டல்கள்! வினோதமான பழக்க வழக்கங்கள்!

ஆர்.பிரசன்னா

ன்னதான் வீட்டுப் பெண்மணிகள் விதவிதமாய் வீட்டில் சமைத்தாலும்,  வாரத்திற்கு ஒரு நாளாவது ஹோட்டலில் சாப்பிடுவது தனி சுகம்தான். 

உலகிலுள்ள சில வித்தியாசமான ஹோட்டல்கள் பற்றி பார்ப்போமே…

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ரெஸ்டாரன்ட் ஆஃப் மிஸ்டேக்கன் ஆர்டர்ஸ் (Restaurant of mistaken orders) என்று ஒரு ஓட்டல் இயங்கி வருகிறது. பெயருக்கேற்ற மாதிரியே இந்த உணவகத்தில் நாம் ஒன்று ஆர்டர் செய்தால் வேறொரு உணவு கொண்டு வருவர். ஆனால் இங்கே உண்ண வருபவர்கள் இதற்கெல்லாம் கோபித்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் இதெல்லாம் தெரிந்துதானே இங்கு வருகிறார்கள்.

சீனாவின் ஹார்பின் நகரத்தில், வித்தியாசமான ஓட்டல் உள்ளது. இதில் பணிபுரியும் வரவேற்பாளரில் இருந்து, சர்வர் வரை, அனைத்துமே ரோபாட்கள்தான். இந்த உணவகத்துக்கு, ரோபாட் ஓட்டல் என்றுதான் பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஒரு உணவகத்தின் பெயர் மெக்சிகன் ரெஸ்டாரண்ட். இந்த ஹோட்டலின் பெயரையும் அதன் சின்னத்தையும் கையில் பச்சை குத்திக் கொண்டால், வாழ்நாள் முழுவதும் இந்த ஹோட்டலில் அவர் இலவசமாக, எது வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

Restaurant of mistaken orders...

ஹங்கேரி நாட்டின் டெப்ரகன் எனும் நகரில் உள்ள டின்னர் எனும் ஹோட்டலில், ஒவ்வொரு மேஜை மீதும் ஒரு கடிகாரம் வைக்கப்பட்டிருக்கும். ஒரு உணவுக்கு நாம் ஆர்டர் கொடுத்து அது பத்து நிமிடங்களுக்கு மேல் தாமதமாக வந்தால், அந்த உணவும், கடிகாரமும் கஸ்டமருக்கு இலவசமாக அளிக்கப்படும்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹார்ட் அட்டாக் கிரில் என்ற இந்த உணவகத்தின் டேக்லைன் அனைவரையும் ஈர்க்க கூடியது.  மருத்துவமனையை கருப்பொருளாக கொண்ட இந்த உணவகத்தின் டேக்லைன் “இறப்பிற்கும் மதிப்புள்ளது” என்பதாகும்.

இந்த உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடையணிந்து உணவுகளை பரிமாறுகிறார்கள்.

துபாயில் உள்ள சில்அவுட் ஐஸ் லவுஞ்ச் என்ற ஓட்டலில் பெயருக்கு ஏற்றவாறு இந்த உணவகத்தின் வெப்பநிலை ஆறு டிகிரிக்கும் குறைவாக பராமரிக்கப்படுகிறது. மேலும் இந்த வழங்கப்படும் உணவு வகைகள் முதல் பானங்கள் வரை அனைத்தும் பனியில் வழங்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மனிலாவில் உள்ள லபாசின் நீர்வீழ்ச்சி உணவகம் மனிதனால் உருவாக்கப் பட்ட நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன்  லபாசின் நீர்வீழ்ச்சி உணவகத்தில் மதிய உணவுகள் மட்டுமே பரிமாறப்படுகிறது.

தாய்லாந்து நாட்டின் தி குரோட்டோ, ராயவடி இந்த உணவகம் தாய்லாந்தில் உள்ள ஃபிரானாங் கடற்கரையில் ஒரு சுண்ணாம்பு குகைக்குள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உட்புறம் காதல் ஜோடிகளுக்கான ஆடம்பரமான ரொமான்டிக் உணவகம் ஒன்றும் உள்ளது. 

மாலத்தீவுகள் உணவகம் ரங்காலி தீவு ரிசார்ட்டில் உள்ள இந்த உணவகம் கடல் மட்டத்திலிருந்து 16 அடிக்கு கீழே அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின் தெளிவான கண்ணாடி சுவர்கள் வழியே லட்சக்கணக்கான மீன்களை நேரடியாக கண்டு களிக்கலாம்

பின்லாந்தின் லோஜா என்ற இடத்தில், ஒரு வித்தியாசமான ஓட்டல் இயங்கி வருகிறது. 150 ஆண்டுகள் பழமையான ஒரு சுரங்கத்தில், இந்த ஓட்டல் செயல்படுகிறது. பூமியின் மேற்பரப்பில் இருந்து, 80 மீட்டர் ஆழத்தில், செயல்படும் இந்த சுரங்க ஓட்டலில், வழக்கமாக, மற்ற நவீன ஓட்டல்களில் உள்ள, இருக்கை, அலங்கார விளக்குகள், டைனிங் டேபிள் உள்ளிட்ட, அனைத்து வசதிகளும் உள்ளன. ஒரே நேரத்தில், 64 பேர், இந்த ஓட்டலில் உணவருந்த முடியும். மேலிருந்து கீழே வருவதற்கு, லிப்ட் வசதியும் உள்ளது.

60 வயதுக்குப் பின்னர் நிம்மதியாக வாழ வேண்டுமா? இதை முதல்ல படிங்க!

உலகின் 5 நீளமான நதிகள்!

பயணம்; நான் ரசித்த அழகிய தாஜ்மஹால்!

அதிகப்படியான ஆயில் சருமத்தை கட்டுப்படுத்த சில தீர்வுகள்!

பாரம்பரிய மைசூர்பாக் மற்றும் மொறுமொறுப்பான ஓமப்பொடி!

SCROLL FOR NEXT