Major Singh Largest Turban 
கோகுலம் / Gokulam

உலகில் மிகப்பெரிய தலைப்பாகையை அணிபவர் யார்?

தேனி மு.சுப்பிரமணி

நிஹாங் என்பது சீக்கிய வீரர்களின் வரிசையாகும். இவர்கள் அணியும் வட்டமான தலைப்பாகையினை தூமாலா என்று சொல்கின்றனர். பெரும்பான்மையான நிஹாங் சீக்கியர்கள் சிறிய அளவிலான தலைப்பாகையையே அணிவார்கள். யார் பெரிய தலைப்பாகை அணிவது என்பதற்காக, இவர்களிடையேப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்பெறும் நீல நிற ஆடைகள், வாள்கள் மற்றும் ஈட்டிகள் போன்ற பழங்கால ஆயுதங்கள் மற்றும் எஃகு துணிகளால் அலங்கரிக்கப்பட்ட தலைப்பாகைகள் போன்றவைகளின் மூலம் அவர்களின் வீரம் போற்றப்படுவதுடன், அவர்களது தலைப்பாகையின் அளவும் அதிகரிக்கிறது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசைச் சேர்ந்த நிஹாங் சீக்கியரான மேஜர் சிங் (Major Singh) என்பவர், கின்னஸ் உலகச் சாதனைப் புத்தகத்தில் உலகின் மிகப்பெரிய தலைப்பாகை (Largest Turban) அணிந்தவராக 2010 ஆம் ஆண்டிலிருந்து இடம் பெற்றிருக்கிறார். இவர் தலையில் அணிந்திருக்கும் தலைப்பாகை 400 மீட்டர் (1312 அடி) நீளம் கொண்ட துணியால் ஆனது. இந்தத் தலைப்பாகையை அவர் 100-க்கும் அதிகமான ஹேர்பின்கள் மற்றும் 51 மதக்குறியீட்டுச் சின்னங்களையும் பயன்படுத்திக் கோபுர வடிவில் அணிந்து கொண்டிருக்கிறார்.

இவர் அணிந்திருக்கும் தலைப்பாகையின் எடை சுமார் 35 கிலோ அல்லது தோராயமாக 77 பவுண்டுகள். அவரது எடை வகுப்பில் வேறு யாரும் போட்டிக்கு இல்லை என்பதால், 2010 ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை தொடர்ந்து உலகக் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இருந்து வருகிறார்.

இவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் பெரிய தலைப்பாகைகள் அனைத்தும் 10 கிலோ சிறியவைகளாகவே இருக்கின்றன.

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

SCROLL FOR NEXT