Lion 
கோகுலம் / Gokulam

சிங்கத்தை ஏன் 'காட்டு ராஜா' என்று அழைக்கிறோம்?

ராஜமருதவேல்

சிங்கத்தை விட வலிமையான மிருகங்கள் வனத்தில் இருக்கின்றன. அப்படி இருக்க, சிங்கத்தை ஏன் 'காட்டு ராஜா' என்று அழைக்கிறோம்? புலியுடன் சண்டையிட்டால் சிங்கம் தோற்றுவிடும், ஆனாலும் புலி ராஜா இல்லை. அதைவிட சர்வ வல்லமை பொருந்திய யானை காட்டின் ராஜாவாக முடியும் என்றால், அதுவும் இல்லை. ஒரு காட்டெருமை தன் கொம்புகளால் முட்டி 10 அடிக்கு சிங்கத்தை வானில் பறக்க விடமுடியும். கழுதைப் புலிகள் சிங்கத்தின் இரையை பறித்து செல்லும். குட்டியான ஃபெரரி நாய்கள் கூட்டமாக சேர்ந்து சிங்கத்தை விரட்டி விடும். இவ்வளவு இருந்தும் சிங்கத்தை ராஜாவாக பட்டம் சூட்ட காரணம் உண்டு.

சிங்கம் காட்டில் உள்ள திறந்த புல்வெளிப் பகுதியில் வாழக் கூடியவை. அதன் பிடரிமுடி அதற்கு இன்னும் கம்பீரத்தை வழங்குகிறது. ஆண் சிங்கம் அவ்வப்போது போது மரத்தின் மீதோ உயரமான பாறைகளின் மீதோ ஏறி தனது எல்லையை கண்காணிக்கும் ராஜாவின் முதல் பண்பு இது தான்.

சிங்கத்தின் கர்ஜனை 7 கிமீ வரை கேட்கும். அந்த தூரம் வரை அதன் எல்லையாக இருக்கும். சிங்கத்தின் எல்லையில் யானைகள், சிறுத்தைகள், கழுதைப்புலிகள், மான்கள், எருமைகள், கருமான்கள், நரிகள், ஓநாய்கள் என்று பல விலங்குகள் வாழ்வதை சிங்கம் அனுமதிக்கிறது. அதே நேரம் புதியதாக ஒரு ஆண் சிங்கம் தனது எல்லைக்குள் வருவதை விரும்பாது. அதாவது மற்ற விலங்குகள் குடிமக்கள் போல, இன்னொரு ஆண் சிங்கம் அண்டை நாட்டின் ராஜாவை போல.

அந்த ராஜா தன் எல்லையை தொடுவது அவமானம் என்று நினைக்கும். மீறி தன் எல்லையில் நுழையும் சிங்கத்தை ஆளும் சிங்கம் விரட்டும். அதற்கு மசியா விட்டால் சண்டை நிகழும். ஒரு வேளை புதிய சிங்கம் வெற்றி பெற்றால் பழைய சிங்கத்தை வேறு எல்லைக்கு துரத்தி விடும். புதிய சிங்கம் காட்டின் புதிய ராஜா ஆகும். பழைய சிங்கத்தின் துணைகளையும் தன்னுடமையாக்கும். அதே வேளையில் பழைய ஆண் சிங்கத்தின் குட்டிகளை கொன்று விடும். 

சிங்கம் எப்போதும் குடும்பத்துடன் வாழக்கூடியது. ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் சிங்கமும் 5,6 பெண் சிங்கங்களும் சில ஆண் பெண் சிங்கக் குட்டிகளும் இருக்கும். எப்போதும் பெண் சிங்கங்களே வேட்டையாடும். பெண்சிங்கம் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் போது ஆண்சிங்கம் பாதுகாப்புக்கு சென்று மற்ற விலங்குகளை விழ்த்தி தன் துணையை காக்கும். பெண் கொண்டுவரும் இறைச்சியை முதலில் ஆண் சாப்பிட்டு விட்டு தன் குட்டிகளுக்கு கொடுக்கும்.

சிங்கங்கள் எலும்பு வரை முழுமையாக உண்ணாது மற்ற விலங்குகள் உண்ணும் வகையில் மிச்சமும் வைக்கும். பசியாறிய சிங்கம் சில நாட்கள் வேட்டையாடாது. அப்போது அருகில் எந்த விலங்கு வந்தாலும் கொல்லாது. கடும் கோடைக்காலம் வந்ததும் அனைத்து விலங்குகளும் பல கிமீ தொலைவுக்கு இடம்பெயரும். அப்போதும் சிங்கங்கள் தங்கள் எல்லையை தாண்டாது. இந்த கால கட்டத்தில் உணவு கிடைக்காமல் சிங்கக் குட்டிகள் சில இறக்கும். கிடைக்கும் இரையை வைத்து வறட்சி காலம் வரை தாக்கு பிடிப்பவை மட்டுமே வாழும். மழைக்காலம் வந்ததும் இடம்பெயர்ந்த விலங்குகள் மீண்டும் பழைய பகுதிக்கு திரும்பும்.அப்போது தான் சிங்கத்திற்கு இரை கிடைக்கும். 

புதிய ஆண் சிங்கம் வரும் போது முதிர்ந்த சிங்கம் வேறு எல்லைக்கு விரட்டப்படும். தனித்து விடப்பட்ட ஆண்சிங்கம் திறன் உள்ளவரை வேட்டையாடி உண்ணும், கிடைக்கும் இரைகளை உண்டு வாழும். பலம் குறைந்தால் மற்ற விலங்குகளால் கொல்லப்படும்.

ராஜாவை போலவே சிங்கத்தின் பண்புகள் இருப்பதால் தான் அது காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது.

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT