kala sadhanalaya... 
கல்கி

கலா சாதனாலயா நாட்டியப்பள்ளியின் 'பாவார்ப்பணம்' நிகழ்ச்சி!

பத்மினி பட்டாபிராமன்

லா சாதனாலயா நாட்டியப்பள்ளி , திருமதி ரேவதி ராமச்சந்திரன் அவர்களால் 1987ல் துவங்கப்பட்டு, தனித்துவமான மெலட்டூர் பாணி நடனம் கற்றுத்தரும் நாட்டியப்பள்ளி.

கலாக்ஷேத்ராவில் பிரின்ஸ்பாலாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ரேவதி ராமச்சந்திரன், 'அம்பலத்தில் ஆடும் ஜோதி', 'ஜெய ஜெய பாரதம்' , 'லஷ்மி வைபவம்' உட்பட பல நாட்டிய நாடகங்களை வடிவமைத்தவர்.

தமது குருவான மிருதங்க மேரு நாட்டிய கலா விற்பன்ன‍ர் பரதநாட்டிய கலா பூஷணம் மாங்குடி ஆர்.துரைராஜ் அவர்களுக்கு, பாவார்ப்பணம் என்ற நடன நிகழ்ச்சி மூலம் கடந்த 25 வருடங்களாக அஞ்சலி செலுத்தி வருகிறார் ரேவதி ராமச்சந்திரன்.

இளம் கலைஞர்களை ஊக்குவித்தும், மூத்த கலைஞர்களை கௌரவித்தும் வருகிறார்கள். பாவார்ப்பணம், அண்மையில் ரசிக ரஞ்சனி சபாவில் இரண்டு நாள் விழாவாக நடத்தப்பட்டது.

முதல் நாள் ரேவதியின் மகளும் சிஷ்யையுமான மனஸ்வினி, லால்குடி ஜிஜேஆர் கிருஷ்ணன் இசையமைப்பில் ப்ளூடி (PLUTI) என்ற தலைப்பில் வாழ்க்கையில் நாம் அடைய வேண்டிய உயரங்களை, சில பிராணிகளின் குணத்தோடு ஒப்பிட்டு அற்புதமான நடன நிகழ்ச்சியை வழங்கினார்.

இதன் மூலம் உண்மையின் தத்துவத்தை, தவளை, மான், மண்புழு, கிளி, பசு, எளிய சில பிராணிகள் கற்றுத்தரும் தத்துவங்களை மிக நளினமாகவும் சிறப்பாகவும், ஆடி பார்வையாளர்களை மெய்மறக்க வைத்தார். மானின் துள்ளலும், மண்புழுவின் அடக்கமும், கிளியின் உயர்வும் அவரது நடனத்திலும், பின்னணிப் பாடல்களின் பொருள் பொதிந்த வரிகளிலும் உயர்வாக அமைந்தன கன்றாகவும் பசுவாகவும் அருமையான பாவங்கள். காமதேனு பாடலுக்கும் ஆடலுக்கும் ஒரு சபாஷ்.

தொடர்ந்து கலாசாதனாலயா மாணவிகளின் ஆயர் குல திலகம் நாட்டிய நாடகம், குட்டிக் கண்ணனின் பிறப்பிலிருந்து, கிருஷ்ண பகவானின் லீலைகள் வரை எல்லாம் சுழன்று சுழன்று ஆடி பர்வையாளர்களைக் கவர்ந்தனர்.

பத்மா சுப்பிரமணியம், நல்லி குப்புசாமி, க்ளீவ்லாண்ட் சுந்தரம், காத்தாடி ராமமூர்த்தி மற்றும் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அடுத்த நாள் நடை பெற்றதால் ஃப்ரை ரிதம் (TAL Fry Rhythm Event) டெல்லியிலிருந்து வந்திருந்த கலைஞர்களின் தாள வாத்திய இசை ஃப்யூஷன்.

பஞ்ச வாத்தியம் (மிருதங்கம், டோலக், தப்லா உட்பட) என்னும் ஐந்து தாள வாத்தியங்களும் நடுவில் பாட்டும் இணைந்த புதுமையான நிக்ழ்ச்சி.

இரண்டு நாட்களுமே அரங்கு நிறைய ரசிகர்கள்; கலாசாதனாலயாவுக்குக் குவிந்த பாராட்டுக்கள்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT