Long Travel Job 
கல்கி

தொலைதூரப் பயணங்கள் முடிவதில்லை… தொடரும்…!

ரா.வ.பாலகிருஷ்ணன்

தினந்தோறும் தொலைதூரப் பயணம் செய்து வேலைக்குச் செல்லும் நபர்களின் பயணம் எப்படி இருக்கும் என பலருக்கும் தெரியாது. பலவித இன்னல்களை தினந்தினம் இவர்கள் சந்திப்பதுண்டு. அவர்களின் பயணப் போராட்டம் எப்படி இருக்கும் என்பதைப் அலசுகிறது இந்தக் கட்டுரை.

அதிகாலையில் சூரியன் உதிக்கும் முன்னரே தூக்கம் கலைந்து எழுபவர்கள் ஏராளமாய் உள்ளனர். அதிகாலையில் எழுந்து கொள்வது நல்ல பழக்கம் தான். அதுமட்டுமின்றி அவ்வாறு எழுந்து கொள்வதால் வாழ்க்கை நலமாக இருக்கும் என்று பெரியவர்கள் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம். ஆம், அது உண்மை தான். புத்துணர்ச்சியோடு அன்றைய நாள் துவங்கி, நன்றாகவே நிறைவடையும். மாணவர்கள் படிப்பதற்கும், உடற்பயிற்சி செய்வதற்கும் அதிகாலை நேரமே சிறந்தது. ஆனால், ஏன் மற்ற சில மனிதர்களும் அதிகாலை எழுகின்றனர் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கான விடை அவர்களுக்கான வேலை வெகுதொலைவில் என்பதே.

பெரும்பான்மையான நடுத்தர மக்கள், வேலைக்குச் செல்ல இரயில் பயணத்தையே அதிகமாக நம்பியுள்ளனர். பேருந்து பயணஅம்மா தயார் செய்து வைக்கதை விட, இரயில் பயணத்தில் கட்டணம் குறைவு என்பதே இதற்கு காரணம். வேலைக்காக நெடுந்தூரம் செல்லும் தொழிலாளர்களின் வாழ்வில், பயணத்திற்கு மட்டுமே ஓர் நாளில் ஏறக்குறைய மூன்றில் ஒரு பங்கு மணி நேரத்தை செலவிடுகின்றனர். அதிகாலையில் எழுந்து வேலைக்கு கிளம்பி, அம்மா தயார் செய்து வைத்த காலை மற்றும் மதிய உணவை எடுத்துக் கொண்டு, நீண்ட தூரப் பயணத்திற்கு தயாராகி விடுகின்றனர். இருசக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டு, இரயில் நிலையம் நோக்கிச் செல்வார்கள். நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு, இரயிலேறி பயணத்தை தொடர்வார்கள். அதிகாலையில் ஆரம்பித்த பயணம், சூரியன் எட்டிப்பார்த்த பின்பு, அலுவலகம் சேர்ந்தவுடன் நிறைவடையும். வேலை நேரம் முடிந்து, மாலை கிளம்பி, இரவு நேரப் பொழுதில் வீட்டை அடைவார்கள்.

தினந்தோறும் நீண்ட நேர இரயில் பயணம் வாடிக்கையாகி விட்டது. சிலசமயம், இரயில் தாமதமாகி, குறிப்பிட்ட நேரத்திற்கு அலுவலகம் செல்லாவிட்டால் அவ்வளவு தான், அரைநாள் விடுப்பு என்றாகி விடும். இவ்வளவு தொலைவு பயணம் செய்து அரைநாள் விடுப்பு என்றால் அதை மனம் ஏற்றுக்கொள்ளுமா நீங்களே சொல்லுங்கள்?

பயண நேரத்தை பயனுள்ளதாக்கினால் பொன்னான நேரம் நம் கையில். பயணத்தில் இயற்கையின் அழகை ரசிப்பது மனதிற்கு ஆனந்தத்தை அள்ளிக் கொடுக்கும். மழைநேரப் பயணம் தரும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சிலர் கேட்பார்கள் இவ்வளவு தொலைவு பயணத்தில் வேலை தேவையா? ஊருக்கு அருகாமையில் வேலை தேடிக் கொள்ளலாமே என்று. இன்னும் சிலர், அலுவலகம் அருகில் இடம் பார்த்து தங்கி விடலாமே என்றும் சொல்வதுண்டு. அவர்களுக்கெல்லாம் பயணிப்பவர்களின் விடை சிறு புன்னகை தான். தொலைவைக் கண்டு அவர்கள் அஞ்சிடவில்லை. பயணத்தை வெறுத்தால் தான் அது கசப்பான நிகழ்வு. இவர்கள் பயணத்தை முழு மனதாய் நேசிப்பவர்கள். எதையும் விரும்பிச் செய்தால், கடினம் என்பதே இல்லாமல் போகும்.

குடும்பத்தோடு வாழும் மகிழ்ச்சியே போதும். அதற்காக எவ்வளவு தொலைவு பயணம் என்றாலும் அசராமல் பயணிப்போம்.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT