shooting scene 
கல்கி

சிறுகதை: நடி - நடிக்காதே!

மாதவி

1

காலை மணி பத்து

டைரக்டர் ரகு பெட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான்

நடிகை கலாவுக்கு கணவன் ரகுவைப்பார்க்க பாவமாயிருந்தது.

நேற்று இரவு 1 மணி வரை ஷூட்டிங்

தேனி போல் பம்பரமாய் சுற்றிச்சுற்றி செட்டில் நடிகர்களை வேலை வாங்கி மயக்கம் போட்டு விழாத குறை. நடிகர்களில் கலாவும் அடக்கம்.

ராத்திரி முச்சூடும் இருமினான் ரகு. நெஞ்சைத் தேய்த்துக் கொடுத்தால் வேணாமென்றான்.

“கையை எடு” என்று எரிந்து விழுந்தான்.

“ஏன் நான் தொடக்கூடாதா?” கண் கலங்கினாள் கலா

“பச். ஏன் அழுது சீன் போடறே?” சீறினான்

”நான் உங்க மனைவிங்க“ குரல் தழுதழுத்தது.

“ஓ! மனைவி. இது நேத்து உன் அண்ணணா நடிச்ச சிவாவை கட்டித்தழுவி வசனம் பேசினியே அப்ப ஞாபகம் இல்லையோ?” கோபமாய் கேட்டான்

“நீங்க தானே எமோஷன் அதிகமா எதிர்பார்ககிறேன்னு மூனு டேக் எடுத்தீங்க”

“மூனு டேக். யெஸ் மூனு டேக். சாதாரணமா ஒரே டேக்கில் ஓகே பண்ற நீ நான் தொட்டு நடிக்கச்சொன்னால் நீ கட்டித்தழுவறே”

“இப்படிச்சொன்னால் எப்படிங்க"? அழுகுரல்

2

“ஏய் ஏய் நடிக்காதே! போய்ப்படு” போர்வையை இழுத்தி போர்த்திக்கொண்டான்

“நல்லா இருமுங்க” என்று படுத்தாள்

காலையில் இருமலில்லை

“என்னங்க எந்திரிங்க. 11மணிக்கு ஷூட்டிங்”

“தெரியும்” என்று எழ, “ஃப்ரஷ்ஷாயிட்டு மிளகு கசாயம் குடியுங்க. டக்னு கேட்கும்“

“ஏய் ரொம்ப நடிக்காதேடி. ஆமாம் இப்ப எதுக்கு நீலப்புடவை கட்டறே?”

“ஏன் கட்டக்கூடாதா?”

“கட்டனும், கட்டனும் நீலக்கலர் தான் சிவாவுக்கு பிடிக்கும்”

“இப்படிச்சொன்னா எப்படிங்க? இது கன்டின்யூடி புடவைங்க”

“அப்படி ஒரு சாக்கு. சிவாவுக்கு டிஃபன் நீதான் தரியாமே! டிஃபன் மட்டுமா..:

“ஐயோ! தெய்வமே!!”

“நடிக்காதே! நடிக்காதே!!”

“உங்களோட பேசமுடியாது . நான் காரில் முன்னாடி போறேன்”

“ஏன் சிவாவை பிக்கப்பா? எப்ப இங்கேயிருநது பேக்கப்?”

“என்னை சந்தேகப்படறீங்க போலிருக்கு”

“சந்தேகமிலலை கன்ஃப்ர்ம்ட்”

“நான் போகலை” சோஃபாவில் சாய

“நடிக்காதே நீ போ” என்றான்

3

ஒரு வழியாய் தப்பிச்சோம்னு கிளம்பினாள்

ரமணா ஸ்டூடியோவில் ஷூட்டிங்

ரெட் கலர் யூனிஃபார்மில் டைரக்டர் ரகு

கையில் புகையும் சிகிரெட்

“கலா என்ன பண்றீங்க... ஹீரோ குமார் மலையிலிருந்து பேசிக்கிட்டே இறங்கறார். கால் ஸ்லிப்பாகி ரெண்டு பேரும் கட்டிபிடிச்சு விழறீங்க இதான் சீன்” ரகு விளக்கினான்

கலா டென்ஷனானாள்

“ரிகர்சல் பாத்துடலாமா?” ரகு கேட்க

“வேண்டாம்” கலா மறுத்தாள்

கலாவை ஒரு மாதிரியாய் பார்த்த ரகு “ஓகே டேக் போகலாம்”

ஸ்டார்ட்! கேமரா! ஆக்‌ஷன்!

“டேக் வேஸ்ட். ஐ வான்ட் ரியாலிடி. கலா கொஞ்சம் எமோஷன் தெரியனும்”  ரகு கத்த,

பத்தாவது டேக் ஓகே ஆனது

“குட். எல்லாம் பத்து டேக்காகக் கூடாது. இது டூயட். மழையில் நனையனும். ரெடியா? டேக்”

“ஏம்மா கலா நீ என்ன முனியா? இப்படி முழிக்கறே? கொஞ்சம் லவ்வோட பாரு. கடங்காரனை பாக்கறா மாதிரி பாக்கறே?” ரகு திட்டி “நடிம்மா” என்றான்

மூனு டேக் வேஸ்ட்.

4

“நடி நடி நடிம்மா” தொண்டை கிழிய கத்தினான் ரகு.

“போய்யா! பைத்தியம்!” வெறி கொண்டு சத்தமாய் சிரித்தாள் கலா.

குழந்தைகளுக்கு அதிகமாக பவுடர் பூசுகிறீர்களா? தாய்மார்களே உஷார்!

மூலவர்கள் இருவர்; உத்ஸவர்கள் ஐவர்: எந்தக் கோயிலில் தெரியுமா?

வெண்டைக்காயை சுவையாக சமைக்க சில டிப்ஸ்!

ஸ்வெட்டர்களின் சுவாரஸ்யமான வரலாறு பற்றி தெரியுமா?

மாயன்களின் வரலாறு என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT